0 விலகிச் செல்லும் காதலியை விரும்ப வைக்கும் வித்தியாச இளைஞனின் கதை! ஷார்ப் எனப்படும் சக்திவேல் வேலைக்குப் போகாமல் வெட்டியாக சுற்றித் திரியும் அப்பா செல்லம். அவனது நண்பன் டயர் என்கிற கிருபாகரன். இந்தக் கூட்டத்தின் காமெடி பீஸ் குட்டிப் பையன். ஷார்ப் கண்டவுடன் காதலாகும் பிரியா மகாலட்சுமி, மாமன் மகன் அன்போடு திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டவள். ஷார்ப் எப்படி பிரியாவின் மனதை மாற்றி, அன்பின் சம்மதத்தோடு அவளைக் கைப்பிடிக்கிறான் என்பது படம். சிம்புவுக்கு படங்கள் தாமதமானாலும், அவரது […]
சிறகு இரவிச்சந்திரன். 0 காரிய சித்திக்காக சுந்தர காண்டம் படிக்கும் மக்கள் மத்தியில் ஒரு சாரார் சற்று திசை மாற, வளைந்த கொம்போடு வாழ்க்கையைப் படிக்கப் போகிறார்கள். அவர்களுக்கு பாடம் கற்றுத்தருவதற்கென்றே கூரை வேயாத பள்ளிக்கூடங்கள் பல உள்ளன. விடலைப் பருவங்களில், விடலையென்றால், ஏதோ தாம்பத்திய வாழ்வில் தவற நேரிடும் என்ற குழப்பமான செக்ஸ் பாதிப்பால் அரைகுறையாய் டிகிரி வாங்கும் பல்கலைப் பட்டதாரிகள் பலரை என் வாழ்வில் நான் சந்தித்ததுண்டு. அப்போதெல்லாம் அம்மாதிரி ஆட்கள் ஒரு மாதிரி […]
சிறகு இரவிச்சந்திரன் ஜெகதீசனுக்கு நிரம்ப மகிழ்ச்சியாக இருந்தது. மல்லிகாவிற்கு கல்யாணம். அதுவும் சாதாரண மல்லிகா இல்லை. பட்டதாரி. அதுவும் சாதாரண பட்டதாரி இல்லை. முதுகலை பட்டதாரி. அரசு கல்லூரியில் விரிவுரையாளர் வேலை. கை நிறைய சம்பளம். நேற்றுதான் அப்பா ஊரிலிருந்து கடிதம் போட்டிருந்தார். ஆவணி மாதம் 10ந்தேதி திருமணம் விழுப்புரத்தில் நடத்தப் போகிறார்கள். மாப்பிள்ளைக்கு அரகண்ட நல்லூர். திருக்கோயிலூர் பெருமாள்தான் இந்த வரனை இவர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். அப்பா அப்படித்தான் எழுதி இருந்தார். திருக்கோயிலூரில் இருந்து பத்தாவது […]
சிறகு இரவிச்சந்திரன் 0 கமலின் வெற்றிப்படத் தலைப்பை வைத்து ஒரு ஒட்டுத்துணி கதையை படமாக்கி அவருக்கு அவப்பெயர் உண்டாக்கி இருக்கிறது சுராஜ்-ஜெயம் ரவி கூட்டணி! சக்தியும் அஞ்சலியும் காதலிக்கிறார்கள். சந்தர்ப்பவசத்தால் சக்தியும் திவ்யாவும் கணவன் மனைவி ஆகிறார்கள். மனம் சேராத தாம்பத்தியத்தை முறிக்க அவர்கள் எண்ணும்போது இருவருக்கும் காதல் வர, சுபம். ஜெயம் ரவிதான் சக்தி. ஆனால் அவரை விட சின்னச்சாமியாக வரும் சூரி நன்றாக நடிக்கிறார். அதைவிட மொட்டை ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பனாக பட்டையைக் கிளப்புகிறார். […]
சிறகு இரவிச்சந்திரன். நானும் ‘தண்ணி வண்டி’ தங்கராசும் ஒண்ணா படிச்சவங்க. ஒரு நாள் ஓல்டு பாய்ஸ் மீட்டிங்லே தங்கராசுதான் இதைப் பத்தி பேசுனான். ‘அவனுக்கு செம கிக்கு’ மணிவண்ணன் சொன்னான். நமக்கு மட்டும் இல்லையான்னு நெனைச்சுகிட்டேன். பொறியியற்கல்லூரிலே படிச்சுட்டு தனியார் கம்பெனிகள்லெ வேலை பார்க்கிற எங்களுக்கு கிடைக்காத ‘கிக்’கா. அதனால ஏற்படுற மன வருத்தத்திலே நாங்க போடாத ‘பெக்’கா. ‘இல்ல மாம்ஸ் நமக்குன்னு ஒரு எடம் வேணும்.ஜாலியா பேச , தண்ணியடிக்க’ எல்லோரும் அவனைப் போல நித்திய […]
சிறகு இரவிச்சந்திரன். 0 இந்தப் படம் திரிஷ்யத்திற்கு பெரியப்பா! பாபநாசத்துக்கு அப்பா! பிரேம் நாத் என்பவர் எழுதியிருக்கும் படு அசத்தலான திரில்லர். சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். இதை ஏன் தமிழில் எடுக்காமல் விட்டு வைத்திருக்கிறார்கள் என்பது தான் கோடி ரூபாய்க்கான கேள்வி. கிரி, டெம்போ வேன் ஓட்டும் டெலிவரி பாய். ஜாக்சன், தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்யும் கணக்கன். ஷெரின் ஒரு சிறிய மருத்துவமனையில் செவிலி. களம் ஊட்டி. அதனால் மலையாளத்தோடு தமிழும் கலந்து ஒலிக்கிறது. […]
சிறகு இரவிச்சந்திரன் 0 கிராபிக்ஸின் பிரம்மாண்டமும் கலை வண்ணமும் கை கோர்க்கும் ராஜமௌலியின் அசத்தல் முயற்சி. சூழ்ச்சியால் கைப்பற்றப்பட்ட மாதேஸ்புரியின் சிம்மாசனத்தை மீட்க புறப்படும் ராஜ வாரிசின் கதை. மழலையிலேயே பலமான கரங்களைக் கொண்ட இளவரசன் பாகுபலி. அவனது இணை யாகப், ராஜ மந்திரிக்குப் பிறந்தவன் பல்லவதேவன். அரசியின் மரணத்தால், மந்திரி பிங்களதேவனின் மனைவி சிவகாமியால் வளர்க்கப்படுகின்றனர் இருவரும். அரியணைக்கு தகுதியானவன் பாகுபலியே எனும் சிவகாமியின் முடிவால் எரிச்சலுறும் பிங்களதேவன், தன் மகனை அரியாசனத்தில் அமர்த்த சதி […]
சிறகு இரவிச்சந்திரன் நேற்று இரவு மீதமான சோற்றை ‘சில்வர்’ தட்டில் கொட்டினாள் நாகம்மா. தண்ணி சோறு. ஒரு கல் உப்பும் சிறிது மோரும் சேர்த்தாள். பாலு என்கிற பாலகிருஷ்ணனுக்கு காலை ஆகாரம் ரெடி. பாலகிருஷ்ணன் முப்பது வயது இளைஞன். பூர்வீகம் ஆந்திராவில் உள்ள நெல்லூர். சென்னை மாகாணமாக இருந்த போது ஆந்திரா தமிழகத்துடந்தான் இணைந்திருந்தது. பின்னர் பிரிக்கப்பட்ட போது பிரிய மனமில்லாமல் சென்னையிலேயே தங்கி விட்ட குடும்பம் அவனுடையது. அந்தக் காலத்தில் சென்னை மாநகராட்சியில் துப்புரவு வேலைகளுக்கு […]
சிறகு இரவிச்சந்திரன் சண்டைகளில் பல வகைகள் உண்டு. ஆனால் குடும்ப சண்டைகள் ஒன்றும் பெறாத விசயங்களுக்காக நடக்கும். பரவலாக பொழுது போகாத வெட்டிக் கூட்டம் ஒன்று எல்லா ஊர்களிலும் உண்டு. அவை இந்த சண்டைகளுக்கான ஆடியன்ஸ். வீட்டுக்குள் நடக்கும் சண்டைகளை வானொலி ஒலிச்சித்திரமாக சன்னலருகில் நின்று கேட்கும் அந்த கூட்டம். சண்டை முற்றி தெருவுக்கு வரும்போது அது தொலைக்காட்சி தொடராகி விடும். பெரியசாமி, சின்னச்சாமி சண்டை ஒரு மெகா சீரியல். இதற்கு இரட்டை இயக்குனர்களாக செயல்படுவார்கள் அவர்களின் […]
சிறகு இரவிச்சந்திரன் 0 நெல்லை மண்ணில் கமலாதிக்கத்துடன் மலையாள த்ரிஷ்யம்! 0 பெண்டாள வந்த கயவனைப் போட்டுத் தள்ளிய தன் குடும்பத்தைக் காப்பாற்ற சுயம்புலிங்கம் போடும் நாடகமும், அதை முறியடிக்க காவல் அதிகாரி கீதா தீட்டும் திட்டங்களுமே இந்த திரில்லரின் மூன்று மணி நேரக் கதை. மூன்று மொழிகளில் வெற்றி வாகை சூடிய கதையைப் பற்றி சொல்ல ஏதுமில்லை. ஆனால் உலக நாயகனின் நடிப்பைப் பற்றி சொல்ல ஒரு அத்தியாயம் போதாது. பூவோடு சேரும் நாரும் மணம் […]