author

ஆம்பளை வாசனை

This entry is part 5 of 19 in the series 5 ஜூலை 2015

சிறகு இரவிச்சந்திரன் 0 என்னுடைய மனைவிக்கு அவர்கள் தூரத்துச் சொந்தம். அத்தை முறை என்று சொல்வாள். சிறு வயதில் எப்போதாவது அவளுடைய அம்மா அங்கே கூட்டிப் போவதுண்டாம். அப்போதெல்லாம் அந்த அத்தைகள் பெரிய படிப்பு படித்து பெரிய பதவியில் இருந்தார்கள். இவர்கள் இருக்கும் ஒரு மணி நேரத்திலே ரொம்பவும் நாசுக்காக ரெண்டொரு வார்த்தைதான் பேசுவார்களாம். ஆங்கிலக் கலப்பில்லாமல் அவர்களுக்குப் பேசத்தெரியாது. இன்னும் கூட நினைவிருக்கிறது என்பாள் என் மனைவி. குழந்தையாக இருக்கும்போது இவளைத் துடைக்க பயன்படுத்திய துண்டை […]

எலி

This entry is part 2 of 19 in the series 28 ஜூன் 2015

சிறகு இரவிச்சந்திரன் 0 கடத்தல் கூட்டத்தில் ஊடுருவி, அவர்களை கூண்டோடு சிறைக்குத் தள்ளும் காமெடி எலி! 0 எலிச்சாமி சில்லறைத் திருடன். அவனுடைய சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி, சர்வதேச சிகரெட் கடத்தல்காரன் நாகராஜனை வளைத்துப் பிடிக்க நினைக்கிறது காவல்துறை. எலியின் சாமர்த்தியம் செல்லுபடியாகிறதா என்பதைக் காமிக் புத்தகமாகச் சொல்கிறது படம். வடிவேலுவின் அத்தனை பரிமாணங்களையும் பிழிந்து எடுத்து எலியின் பாத்திரத்தில் சேர்த்திருக்கிறார் இயக்குனர் யுவராஜ் தயாளன். அவர் மேல் உள்ள நம்பிக்கையில் அதிக ஈடுபாட்டோடு நடித்திருக்கிறார் வைகைப் புயல். […]

திரை விமர்சனம் நேற்று இன்று நாளை

This entry is part 16 of 19 in the series 28 ஜூன் 2015

சிறகு இரவிச்சந்திரன் 0 வெகு நாட்களுக்குப் பிறகு, தமிழில் அசத்தலான விஞ்ஞானப் படம் விறுவிறுப்பான கதையுடன் வந்திருக்கிறது. 2065ல் ஒரு விஞ்ஞானியால் உருவாக்கப்படும் கால யந்திரம், இன்றைய நாளில் இரண்டு இளைஞர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் சிக்கல்களை நகைச்சுவையாக சொல்கிறது படம். சுய தொழிலில் முன்னேற நினைத்து தோல்வியுறும் இளங்கோ. அவனது நண்பன் புலிச்சித்தர் ஜோதிடர் ஆறுமுகம். இளங்கோவின் காதலி அனு. இவர்களைத் துரத்தும் ரவுடி குழந்தைவேலு. காலயந்திரத்தில் கடந்த காலம் போய் சில மாறுதல்களை அவர்கள் அறியாமலேயே […]

காஷ்மீர் மிளகாய்

This entry is part 7 of 23 in the series 21 ஜூன் 2015

சிறகு இரவிச்சந்திரன் கண்ணன் ஸாரைப்பற்றி கோபிதான் சொன்னான். நேற்று ஒரு இலக்கியக்கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்த போது தோளில் ஒரு கை தட்டியது. கோபி. என் பால்ய சிநே கிதன். பொன்னேரிக்காரன். நானும்தான். ஒன்றாய் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தோம். அதற்கப்புறம் அவன் சினிமா ஆசையில் சென்னை போனவன் தான். இப்போதுதான் சந்திக்கிறேன். ‘ கோபி ‘ ‘ கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே ‘ ‘ எப்படிடா ஐம் ஸாரி எப்படி […]

நாடக விமர்சனம் – கேஸ் நெ.575/1

This entry is part 13 of 23 in the series 21 ஜூன் 2015

சிறகு இரவிச்சந்திரன் தூக்கு தண்டனை கைதிகள் இருவர். செய்யாத கொலைகளுக்கு மரணம். உண்மையில் யார் கொலையாளி? சிக்கலான முடிச்சுகளுடன் ஷ்ரத்தாவின் புதிய நாடகம். வங்கிக் கொள்ளையில், விபத்தாக முடியும் காசாளரின் மரணம். குற்றம் செய்ததாக கைது செய்யப்படும் அண்ணாமலை உண்மையில் அந்த வழக்கில் நிரபராதி. காதலித்து மணக்கும் காயத்திரியை, காதல் கணவன் ரகுராமனே கொன்றதாக வழக்கு. அவன் நிரபராதி என்றால் கொன்றது யார்? ஒரு ஆய்வு நூலை எழுத, நேரடி அனுபவத்திற்காக, சிறையில் அண்ணாமலையையும் ரகுராமனையும் சந்திக்கும் […]

உதவும் கரங்கள்

This entry is part 7 of 23 in the series 14 ஜூன் 2015

சிறகு இரவிச்சந்திரன் பாஸ்கருக்குப் போனமாதம்தான் கல்யாணம் ஆகியிருந்தது. ஒருமாதம் விடுமுறையில் சீரங்கம் போனபோது தீடீரென்று ஒரு வரன் குதிர்ந்திருப்பதாக அம்மா சொன்னாள். பார்த்தவுடன் பிடித்துப் போயிற்று கௌசல்யாவை. முகூர்த்த நாள் பார்த்து, சத்திரம் பார்த்து கல்யாணம் முடிவதற்குள் அவனுடைய ஒரு மாத விடுமுறை ஏறக்குறைய காணாமல் போயிருந்தது. ஐந்து நாட்கள் மட்டுமே அவன் கௌஸல்யாவுடன் இருக்க முடிந்தது. அதிலும் பாதி உறவினர் விருந்து உபசாரத்தில் கழிந்து விட்டிருந்தது. ஆசை அறுபது நாள் என்பது மைக்ரோ சிப்பில் போட்ட […]

திரை விமர்சனம் – காக்கா முட்டை

This entry is part 18 of 23 in the series 14 ஜூன் 2015

சிறகு இரவிச்சந்திரன் 0 திடீர் குப்பத்து பிள்ளைகளுக்கு, பீட்சா மேல் வரும் ஆசைகளும், அதனால் எழும் சிக்கல்களும் கவிதையாக! கோழி முட்டை தின்ன ஆசை. ஆனால் வசதியில்லை. அதனால், காக்கைகளின் கவனத்தை திசை திருப்பி, காக்கா முட்டைகளை களவாடித் தின்னும் சின்னப் பாண்டியும் பெரிய பாண்டியும், முன்னூறு ரூபாய் பீட்சா மேல் ஆசை கொண்டு, அதற்கு கொடுக்கும் விலைதான் இந்த படம். படம் நெடுக, நாமும் சைதாப்பேட்டை திடீர் குப்பத்தில் வசிப்பது போன்ற உணர்வைத் தந்த ஒளிப்பதிவிற்கும் […]

அப்பா 2100

This entry is part 7 of 24 in the series 7 ஜூன் 2015

– சிறகு இரவிச்சந்திரன். அவன் அந்தக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தபோது, எல்லாமே நீல நிறமாக இருந்தது. ஓ! இன்னிக்கு ப்ளூ டேயா? மனதில் எண்ணம் ஓடியது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் நூறு வருடங்களைக் கடந்ததில், பூமி வெகுவாக மாற்றங்களைப் பெற்றிருந்தது. அதில் ஒன்று தான் நிறம்மாறும் நாட்கள். பூமியின் அதிபர், பல விஞ்ஞானிகளை, சாஸ்த்திர வல்லுநர்களைக் கொண்டு வரையறுத்த நிறக் கோட்பாடுதான், இன்று பூமி முழுவதும் நிலவுகிறது. கணினியின் உதவிகொண்டு, பல நிறச்சேர்க்கைகள் […]

வல்லிக்கண்ணன் எனும் ரசிகர்

This entry is part 8 of 24 in the series 7 ஜூன் 2015

சிறகு இரவிச்சந்திரன். ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் ஒரு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் சகோதரர் குடும்பத்துடன் பிரம்மச்சாரி இலக்கியவாதி வல்லிக்கண்ணன். திருப்பூர் கிருஷ்ணன் குறிப்பிடுவது போல அவர் தோற்றத்தால் ஒரு ஒல்லிக்கண்ணன். பூஞ்சை உடம்பு. குரல் அதைவிட சன்னம். சிறகு இதழை அவருக்கு அனுப்பியிருந்தேன். அப்போது என்னுடன் வங்கியில் பணிபுரிந்த வெங்கட்ராமன் ஒரு இலக்கிய ரசிகர். சிறகின் நிரந்தர நன்கொடையாளர். அவரும் அதே லாயிட்ஸ் காலனியில் வேறொரு குடியிருப்பில் இருந்தார். “ வல்லிக்கண்ணன் இங்கேதான் இருக்கார்! தெரியுமா? “ […]

ஒவ்வாமை

This entry is part 5 of 21 in the series 31 மே 2015

சிறகு இரவிச்சந்திரன் சின்ன வயதில் படிப்பு எல்லாம் கிராமத்தில் தான். பச்சை பசேலென்று வயல்களும், இடையில் ஓடும் வாய்க்கால்களும் தான் அவரது மனதில் கலையான நினைவுகளாக இருந்தன. அவர் பெயர் சங்கமேஸ்வரன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். வேலைக் காரணமாக இந்தியாவின் பல மூலைகளுக்கு அவரது காலடிகள் பட்டிருக்கின்றன. அங்கிருந்தெல்லாம் அவர் ஆசையாக கொண்டு வருவது தன் மனைவி கோமளவல்லிக்கான பரிசுப் பொருட்கள் இல்லை. எப்போதும் விதவிதமான வண்ண மலர்களை கொண்ட தொட்டிச் செடிகளை வாங்கி வருவார். […]