author

சொப்பன வாழ்வில் அமிழ்ந்து

This entry is part 15 of 26 in the series 26 ஏப்ரல் 2015

  இது கனவு சீசன் போலிருக்கிறது. முதலில் கன்னடத்தில் ‘லூசியா’ வந்து சக்கை போடு போட்டது. போதை மாத்திரை தருவிக்கும் மாயா ஜால பிம்பங்களே அதன் முடிச்சு. அதையே தமிழில் “ எனக்குள் ஒருவன்” என பேசியது சித்தார்த் படம். படம் கன்னட வெற்றியைப் பெறவில்லை என்றாலும் பரவாயில்லை என ஓடியது. ஆனால் கணிப்பொறி விளையாட்டுகளை உருவாக்க, அதில் வேலை செய்யும் இளைஞர்கள் / யுவதிகளுக்கு டானிக் மாத்திரை என போதை மாத்திரைகளைக் கொடுத்து தற்கொலை வரை […]

இரு குறுங்கதைகள்

This entry is part 10 of 26 in the series 26 ஏப்ரல் 2015

1.    வௌவால் வீடு பாஸ்கர் அன்று வீடு திரும்ப மிகவும் நேரமாகிவிட்டது. சனசந்தடி மிகுந்த தியாகராயநகர் பிரதான சாலையில் உள்ள வங்கியில் அவன் காசாளன். உஸ்மான் சாலை சனங்களின் நெரிசலில் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் பண்டிகைக் காலம் அது. சேலைகள் சுடிதார்களோடும், சுடிதார்கள் மிடி டாப்ஸோடும் ஊர்ந்து கொண்டிருக்கும் பகுதியில் ஒரு நகைக்கடை முதல் தளத்தில் அமைந்திருந்தது அந்த வங்கிக் கிளை.  நகைக்கடைக்கு அதில்தான் கணக்கு. லட்சக் கணக்கில் கொண்டு வந்து கொட்டுவார்கள். எண்ணி முடிப்பதற்குள் மேல் […]

இரு குறுங்கதைகள்

This entry is part 5 of 19 in the series 19 ஏப்ரல் 2015

1.    கண்காணிப்பு – சிறகு இரவிச்சந்திரன். 0 அவனுக்கு கொடுக்கப்பட்ட பணி கேட்கும்போது எளிதாகத்தான் இருந்தது. பள்ளி நாட்களில் இருந்தே மர்ம நாவல்களையும் சங்கர்லால் துப்பறியும் தமிழ்வாணன் கதைகளையும் படித்ததின் பாதிப்பு அவன் மனதில் ஆழமாக ஊறிக் கிடந்தது. பொருட்காட்சிக்குப் போனால், மற்ற பிள்ளைகளைப் போல அவன் திண்பண்டங்கள் கேட்ட்தேயில்லை. எப்போதும் கறுப்பு கண்ணாடி தான் வேண்டும். கூடவே ஒரு தொப்பி. அது அட்டையில் இருந்தாலும் பரவாயில்லை. கொஞ்சம் வளர்ந்த பிறகு அவன் சின்னதாக ஒரு மூங்கில் […]

கூட்டல் கழித்தல்

This entry is part 20 of 28 in the series 12 ஏப்ரல் 2015

ஊர்மிளாவிற்கு என்னமோ போலிருந்தது. இத்தனைக்கும் பார்த்து பழகியவன் தான் தினேஷ். ஏன் அப்படி சொல்லிவிட்டான்? ‘ நமக்குள்ளே ஒத்து வராது ஊர்மி.. ஸேம் வேவ் லென்த்..’ ‘எனக்குப் பிடித்ததெல்லாம் அவனுக்குப் பிடிக்கும். ஜெயகாந்தன், ரியலிஸ திரைப்படங்கள், டிராட்ஸ்கி மருது, மதன் ஜோக்ஸ்..’ அவனும் அவளும் ஒரே மென்பொருள் நிறுவனத்தில் ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். ஒரே ப்ராஜெக்ட்.. அவன் டீம் லீடர், அவள் டெவலெப்பர்.. முதல் வருடம் பேசவேயில்லை.. அது சரி.. ஆண் என்பதால் அல்ல.. அவள் […]

மிதவை மனிதர்கள்

This entry is part 6 of 14 in the series 5 ஏப்ரல் 2015

கன்னையா இன்று ஓய்வு பெறுகிறார். அறுபது வயது தெரியாத தோற்றமும், சுறுசுறுப்பும் அவரது அடையாளங்கள். எந்நேரமும் ஏதாவது செய்து கொண்டே இருப்பது அவரது வழக்கம். கன்னையா வுக்கு கொஞ்சம் போலச் சங்கீதம் தெரியும். சிறுவயதில் மிருதங்கம் கூட வாசிக்கக் கற்றுக் கொண்டார். ஓய்வுக்குப் பிறகு முறையாக பயிற்சி எடுத்தபின், மெல்லிசைக் குழுக்களிலோ அல்லது கர்நாடகச் சங்கீதக் கச்சேரிகளுக்கோ வாசிக்கலாம் என்று ஒரு எண்ணம் அவருக்கிருந்தது. கன்னையா ஒரு அரசாங்க அலுவலகத்தில் எழுத்தராக சேர்ந்து, இன்று ஒரு அதிகாரியாக […]

கோழி போடணும்.

This entry is part 4 of 32 in the series 29 மார்ச் 2015

சிறகு இரவிச்சந்திரன் 0 சபாபதிக்கு கிட்டத்தட்ட எழுபது வயது இருக்கும். மெலிதான சந்தன நிற ஜிப்பாவும், தங்க பிரேம் கண்ணாடியும், வெள்ளை வெளேரென்ற வேட்டியும் அவரது அடையாளங்கள். ஒரு கோடிஸ்வரனுக்கு உண்டான தகுதியும் அவருக்கு இருந்தது. அவரது முயற்சியில் பல நிறுவனங்கள் தழைத்தன. அதனால் பல உயிர்கள் பிழைத்தன. அவரது ஆளுமையில் பல ஆலைகளும் சில சேலைகளும் அடக்கம். புதிய டொயட்டோ காரில் அவர் இப்போதெல்லாம் வலம் வருகிறார். கிழக்குக் கடற்கரைச்சாலைதான் அவருக்கு பிடித்தமான ரோந்து போகும் […]

நாடக விமர்சனம். சேது வந்திருக்கேன்

This entry is part 12 of 32 in the series 29 மார்ச் 2015

– சிறகு இரவிச்சந்திரன் 0 பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான திருமதி பாத்திமா பாபுவின் ஃபேப் தியேட்டர்ஸ் அரங்கேற்றிய நாடகம் ‘சேது வந்திருக்கேன்’ நாடகத்தின் கதையை எழுதியவர் மறைந்த இயக்குனர் சிகரம் திரு. கே. பாலச்சந்தர் அவர்கள். அதை நாடக வடிவில் தந்திருக்கிறார்கள் இரட்டையர்களான கோபு, பாபு. இயக்கியவர் திருமதி பாத்திமா பாபு. தந்தை மேல் கோபம் கொண்டு பிரியும் மகள், ஒரு பாசமுள்ள பெரியவரை தந்தையாக தத்து எடுப்பதும், மகளைப் பிரிந்த தந்தை பாசத்திற்கு […]

புத்தக விமர்சனம் – புள்ளிகள் கோடுகள் கோலங்கள்

This entry is part 24 of 32 in the series 29 மார்ச் 2015

பாரதி மணியும் பைப்பும் – பகுதி 1 0 பாரதி மணி கையில் கொடுத்த நூலைப் பார்த்தவுடன் எனக்கு தோன்றியது இதுதான். ஒரு நூலுக்கு ஈர்க்கக் கூடிய அட்டை அவசியம். புத்தகத்தைக் கூட அச்சிட்டு விடலாம்.. ஆனால் அட்டை! பெயர் போலவே நம் நேரத்தையும், சக்தியையும், மிகுதியான பணத்தையையும் உறிஞ்சி விடும் என்று திருப்பூர் கிருஷ்ணன் சொன்னது நினைவுக்கு வந்தது. அட்டை நேர்த்தியாக இருக்கிறது. ஆனால் அட்டையில் பைப் பிடித்துக் கொண்டிருக்கும் பாரதி மணி உண்மையிலேயே லயித்து […]

உளவும் தொழிலும்

This entry is part 18 of 28 in the series 22 மார்ச் 2015

ரட்டா  எனப்படும் சிறிய கைத்துப்பாக்கி அது. கறுப்பு சைத்தான். எளிதில் எங்கும் மறைத்து எடுத்துச் செல்லலாம். உளவாளிகளுக்கும், கட்டணக் கொலைகாரர்களுக்குமென பிரத்யேகமாக வெளிநாட்டவனால் தயாரிக்கப்பட்டது. ஆசீம் என்கிற அழகம்பெருமாள் பஞ்சக்கச்சம் கட்டியிருந்தான். இயல்பான சிகப்பு தோல்காரன். நெற்றியை அடைத்த திருமண் அவனை ஒரு வைணவ குருகுலவாசனாகவே காட்டியது. மதுரையில் தமிழகத்தின் ஜனத்தொகை யில் பத்து விழுக்காடாவது குவிந்திருக்கும் என்பது போன்ற கூட்டம். அன்று அழகர் ஆற்றில் இறங்கும் நாள். மதுரை மண்ணில் உதித்தவர்களும் மிதித்தவர்களும், வந்தவர்களும் வாழ்ந்தவர்களும் […]

பாட்டி வீட்டுக்கு போறோம் ( To Grandmother’s House we go )

This entry is part 4 of 28 in the series 22 மார்ச் 2015

சில சமயம் குழந்தைகளுக்காக எடுக்கப்படும் படங்கள் பட்டையைக் கிளப்புகின்றன. பெரிய படங்களை எடுப்பவர்களுக்கு பாடமாகவும் அமைகின்றன. ‘மட்டில்டா’ தந்த இன்ப அதிர்ச்சியில் யூ ட்யூபில் நான் கண்டெடுத்த பொக்கிஷம் தான் தலைப்பில் உள்ள படம். மேரி கேட் ஓல்ஸன், ஆஷ்லி ஓல்ஸன் என்கிற இரட்டையர் சகோதரிகள் பிரதான பாத்திரம் ஏற்று இந்தப் படத்தைத் தங்கள் சின்னத் தோள்களில் தாங்கி இருக்கிறார்கள். அம்மா ரோண்டா தாம்ஸனாக சிந்தியா கியரி ஒரு விவாகரத்தான இளம் தாயைக் கண்முன்னே கொண்டு வருகிறார். […]