சித்தநாத பூபதி ஒரு பெண் அதுவும் ஏழு குழந்தைகளுக்குத் தாய் , எப்பொழுது கிணற்றில் விழுவாள் என்று ஊரே எதிர்பார்க்குமா ? ஆனால் பத்மாவதி – லூசுப்பத்மா விசயத்தில் அப்படித்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் அவள் கெட்டவள் இல்லை. அவள் சின்ன வயதில் இருந்தே பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குத்தான் அது புரியும். தீப்பெட்டி விளையும் ஊர்களில் ஒன்று. ஊடுபயிராக பட்டாசும். விடிந்தது முதல் அடையும் வரை வேலை. சினிமா பார்க்கனும் என்றால் பஸ் ஏறி சாத்தூர் போகணும். ஆனால் […]