சிவா கிருஷ்ணமூர்த்தி. ஆச்சு, இதோ ஐஆர்டிடி, வாசவி கல்லூரிகளை எல்லாம் தாண்டி டிவிஎஸ்ஸில் பறந்துகொண்டிருந்தேன். இந்த இடங்கள் செழிப்பான பூமிதான், ஆனாலும் இப்போது அதீத பச்சையாக இருக்கிறது, என்னவோ தெரியவில்லை. பயங்கரமாக குளிரவும் செய்தது… தூரத்தில் பவானி செக்போஸ்ட் நெருங்க, நெருங்க போர்ட்…என்னது…”செம்ஸ்போர்டிற்கு நல்வரவு, ரேடியோ பிறந்த இடம்” குழப்பத்துடன் தாண்டினேன். அந்த வளைவில் திரும்பினால் காளிங்கராயன் பாளையம் வந்துவிடும். மறுபடியும் போர்டு “என்பீல்ட் நகரத்திற்கு நல்வரவு”. சட்டென்று கனவுப்புள்ளியாய் கரைந்து வேறு உலகத்தில் இருப்பதை உணர்ந்துகொண்டேன்…எங்கிருக்கிறேன்? […]