Articles Posted by the Author:

 • பிங்கி என்ற பூனை

  பிங்கி என்ற பூனை

  எவர் கேட்டாலும் பிங்கியோடு சேர்த்து எங்கள் வீட்டில் ஐந்து பேர் என்கிறான் என் பையன். ஏதோ ஒரு மலைக்கால மாழையில் தவறிச் சேர்ந்த அந்த செம்பழுப்பு நிற பூனைக்கு அவனறிந்த ஆங்கிலத்தில் பிங்க்கி என பெயரிட்டிருக்கிறான். அதற்கு இறைச்சி இஷ்டம் என்பதற்காக தினமும் கறி எடுக்கச்சொல்லி அவன் அம்மாவை இம்சிப்பதில் அவனுக்கு அலாதிப் பிரியம். எவரேனும் என்னோடு தெருவில் பார்த்து நலம் விசாரிக்கையில் நானும் நலம் என் பூனைக் குட்டியும் நலமென்கிறான் அவனிம்சைக்கு அஞ்சி கட்டிலுக்கு கீழ் […]


 • பாதியில் நொறுங்கிய என் கனவு

  பாதியில் நொறுங்கிய என் கனவு

  பதினேழைத் தொட்ட ஓர் இளையவளின் ஸ்பரிசங்களுடைத்த அந்திம நேர தழுவலைப் போல் இனித்துக் கிடந்தது அந்த அதிகாலைக் கனவு முழுதுமாய் வெளிச்சம் விரித்துக் கிடந்த பகலுலகின் சம்பாஷனைகளில் உலர்ந்த படியே என் குருட்டு கனவுலகின் இருளை வியாபித்துக் கிடந்தேன் இன்னுமேற்று எக்கணமும் கவிழக் கணம் நோக்கும் விசையழுத்தப்பட்ட சூறாவளிப் பொழுதின் கிழடு தட்டிய மரத்தைப் போல் தங்களை நகர்த்தும் பொழுதுகள் என் கனவை தின்னத் தொடங்கின சிதிலமடைந்த சுண்ணாம்புக் காரையென சதா தன் மேனியலிருந்து வினாடிகளை உதிர்க்கத் […]


 • காமம்

  காமம்

  எப்பொழுதாவது என்னில் உறைந்த சில பொழுதுகளை பாசியென அடர்ந்திருகி விட்ட சில நியாபகங்களை சாத்தானாய் மெல்ல என் உடல் பற்றி வெளியேற அவள் தம் பிழிகளின் வியே தூபம் காட்டிக் கொண்டிருப்பாள் நிசி நேர ஓர் புகை மூட்ட கனவைப் போன்றும் கனவுத் தூதுவனொருவனின் பாஷையறியா காதோர சில முனுமுனுப்புகளைப் போன்றும் தன் அங்க அசைவுகள் வழியே விளங்காதொரு பிம்பங்களற்ற மாய தோற்றங்களை இலகுவாய் என் சுற்றிக் கட்டி முடித்திருப்பாள் காமம் பெருகி கனவுகளில் வடிந்த வியர்வையில் […]


 • இரகசியக்காரன்…

  இரகசியக்காரன்…

  மெல்ல என்னை இழந்து கொண்டிருந்தேன் திடுமென வீசிப்போன புயலில் தன்னருகதை இழந்த சிறு துகள்களாய் என் ஒட்டு மொத்தமும் ஒடுங்கி விட்டிருந்தது வீசியெறிந்ததொரு அலையின் எதிர் நீச்சல்காரனாய் சிதைந்த உடம்புகளோடும் இழந்த துடுப்புகளோடும் அந்நிகழ்வுகளின் அரூபங்கள் வழியே பின் தொடர வேண்டியதுள்ளது. முற்றுமாய் தங்கள் மௌனங்கள் களைந்த என் வார்த்தைகளை சிலர் பறித்துக் கொண்டிருப்பார்கள் இன் முகமாய் முன் இளித்து என் பித்தட்டு வழியே ரகசியங்களை பை நிறைய திணித்துக் கொள்வார்கள் பலர் ஒரு ஓரமாய் ஒடுங்கிய […]


 • ஒரு நூற்றாண்டுக் கழிவுகள்

  ஒரு நூற்றாண்டுக் கழிவுகள்

  ஒரு நூற்றாண்டு தன் கடனை கழித்து விட்டிருந்தது காலச் சக்கரத்தில் ஒரு பல் புதியதாய் முளைத்திருந்தது நூற்றாண்டுச் சாயமாய் அநேக தேசியச் சின்னங்கள் தோறும் சிகப்புத் திட்டுக்கள் தெறித்திருந்தன ஜன ரஞ்சகத்தின் நிகராய் கடவுள்களும் பெருத்திருந்தார்கள் கழிந்த யுகத்தின் சில காவியுடைகள் கண்ணாடிப் பெட்டகங்களில் பத்திரமாயின எப்படி நேசிப்பதென்றும் எங்ஙனம் சுவாசிப்பதென்றும் கட்டணமேற்றுக் கற்பித்தன கலாசாலைகள் இன்னமும் இவ்வுயிர் தாங்கி நிற்கும் இப்பூத உடலிற்கான வாழ்வாதாரங்கள் அமெரிக்க ஏகாபத்தியங்களென்றும் சுவாச நாளங்களுக்கான கருப் பொருட்கள் யூரோவும் டாலருமென […]


 • என்னின் இரண்டாமவன்

  என்னின் இரண்டாமவன்

  எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ சில் வண்டுகள் ரீங்காரமிடும் ஓர் இரவும் பகலுமற்ற இடைத்தருணத்தில் அவன் வருகையை தவிர்க்கவியல்வதில்லை மெல்லிய புகை தன் சூழ மிதக் குளிரினூடே ஏதோ ஒன்றைப் பகர நினைப்பதாய் அமர்வான் என்னருகாய்! மிக வலியதாய் பாதித்தலுக்குட்பட்ட அந்நாளுக்கான சில அவசியச் செய்திகளை அசைபோட்டுக் கிடப்பான் ஒன்றுமற்றுப் போன விஷயமொன்றிற்காய் யோசனையிட மெனக்கெடுவதாய் நடிப்பான் எப்படி இருந்திருக்கக் கூடாதென்றும் எப்படியெல்லாம் இருந்திருக்க வேண்டுமென்றும் அறிவொழுகும் தன் தலை வழியாய் புத்தி சொல்லிக் கிடப்பான் சில கணங்கள் வரை […]


 • மாலைத் தேநீர்

  மாலைத் தேநீர்

  கொடும் மழையினூடே கரைந்தோடும் ஆற்றோர மணல் படுகைகளைப் போல் ஓர் முழு நாளிற்கான மனச் சலனங்களை கழுவித் தூரெடுக்கும் ஆற்றல் மிக்கதாய் மாலைத் தேநீர்கள் உருப்பெற்று விடுகின்றன பின் பிடரி வழியாய் உங்கள் உயிர் குடிக்கும் சில எம காத உருவங்களையோ பாத விரல்களினிடையேயான சேற்றுப் புண் எரிச்சல்களையோ ஓர் தேநீரின் இதமான கதகதப்பில் சில மணித்துளிகளாவது அவைகளையற்று இன்புற்றுக் கிடக்கக்கூடும் நீங்கள் மென்னிருள் கொண்ட ஓர் பொன் மாலைப் பொழுதோ எப்பலன்களுமற்ற  உங்களையொத்தாருடையேயான எவ்விஷயங்களுமற்ற வெற்று […]