நாய்களின் நடுநிசிகள் தனதாக்கிக் கொண்ட தெருவின் வழியே நாய்களைத் துரத்தும் கோடங்கிப் பயணம் எனது. நான் பேயாய்த் தெரிந்திருக்கக்கூடும் நிறங்களைப் பிரித்தறியாத நாய்களின் கண்களுக்கு. உரக்கக் குழைத்து அடையாளம் காட்டின- பொங்கி வழியும் அவைகளின் பயத்துடனான பளிங்குக் கண்களின் வழி என் பேய் பிம்பத்தை. பேய் வேடம் தறித்து நாய்களைத் துரத்த ஆரம்பித்ததில் நித்தமும் என் பயணத்தைத் தெருக்கள் விரும்பின. நிம்மதியிழந்த நாய்கள் அடுத்த தெருவில் தஞ்சம் புகுந்து நான் செல்லும் தெருவில் பேய் நடமாட்டம் இருப்பதை […]