Articles Posted by the Author:

 • வீடெனும் பெருங்கனவு

  வீடெனும் பெருங்கனவு

  சோ.சுப்புராஜ் ஜெயசீலியும் செல்வகுமாரும் நீண்ட நேரமாகக் காத்திருந்தார்கள். தனபாலன் – வீடு வாடகைக்கு ஏற்பாடு செய்து தரும் புரோக்கர் – குறிப்பிட்டிருந்த நேரத்திற்கு சற்று முன்னதாகவே அவர்கள் அந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். ஆனால் குறிப்பிட்டிருந்த நேரம் கடந்தும் தனபாலன் அங்கு வந்து சேரவில்லை. ஜெயசீலியும் செல்வகுமாரும் சில வருஷங்கள் அபுதாபியில் வேலை பார்த்து விட்டு சொந்த ஊருக்குத் திரும்பி யிருந்தார்கள். மறுபடியும் அபுதாபிக்குத் திரும்பிப் போக வேண்டாமென்றும் அங்கு சேமித்து வைத்த பணத்தில் சென்னையின் […]


 • உங்களின் ஒருநாள்….

  உங்களின் ஒருநாள்….

    இப்படித் தொடங்குகிறது உங்களின் ஒருநாள்….. காலையில் கண் விழித்ததும் போர்வையை உதறி எழுந்து போகிறீர்கள்; உடனேயே சுருக்கங்களின்றி மடிக்கப் பட்டுவிடும் உங்களின் படுக்கை……!   துர்நாற்றத்தை சகிக்க முடியாது ஒருபோதும் உங்களால்; கழிவறை சுத்தமாய் ஓடோனில் மணக்கத் தயாராக இருக்கிறது உபயோகப் படுத்தி வெளியேறுகிறீர்கள்…..!   தினசரியை மேய்ந்து கொண்டிருக்கையில் காஃபி வருகிறது உங்களைத் தேடி…..! ஆவி பறக்கும் அடித் தொண்டையில் கசக்கும் அற்புதமான பானம்! அருந்தி முடித்ததும் அப்புறப் படுத்தப் படுகிறது அவசரமாய் காலிக் […]


 • வலி மிகுந்த ஓர் இரவு

  வலி மிகுந்த ஓர் இரவு

  ****************************************************** எழுபதுகளின் மத்தியில் நடந்த கதை இது. அப்போது பால்பாண்டிக்கு பனிரெண்டு அல்லது பதிமூன்று வயதிருக்கும். அன்றைக்கு அவனைப் பயமெனும் பேய் பிடித்து ஆட்டத் தொடங்கியது. காரணம் குருவு அவனைத் தொட்டு விட்டான்; தொடுதல் என்றால் இலேசுபாசான தொடுதல் இல்லை. அப்படியே தோளோடு தோள் சேர்த்துத் தூக்கித் தழுவி அவனைக் கீழே இறக்கி விட்டான். குருவு, பால்பாண்டி மாதிரியான குடியானவர்களைத் தொடக் கூடாத தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன். அந்த சாதியைச் சேர்ந்தவன் வம்புக்காகவோ அல்லது தன்னையும் அறியாமலோ […]


 • நாடற்றவளின் நாட்குறிப்புகள்

  நாடற்றவளின் நாட்குறிப்புகள்

    மலேசியாவிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்த அத்தனை நாளிதழ்களிலும் அன்றைய தினத்தில் ஜூன்லாவ் தான் தலைப்புச் செய்தியாக இருந்தாள். அவள் சீனமொழியான மாண்ட்ரீனில் எழுதியிருந்த தினக்குறிப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் நாளிதழ்களிலும் வெளியாகியிருந்ததை நானும் வாசித்திருந்தேன். ஒரு பெண்ணின் மிகச் சாதாரணமான நாட்குறிப்புகள் அவளின் அகால மரணத்தின் பொருட்டு, ஒரு வசீகரத்தையும் சோபையையும் பெற்று, அவளே அன்றைக்கு எல்லோரின் பேசுபொருளாகி இருந்தாள். ஜூன்லாவ் இறந்து போன தினத்தின் இரவில் அவளை நான் சந்தித்திருந்தேன். அந்த இரவின் வசீகரத்தையும் அதனுள் […]


 • ஒரு செய்தியின் குறுக்கு வெட்டுத் தோற்றம்

  ஒரு செய்தியின் குறுக்கு வெட்டுத் தோற்றம்

     E.mail: engrsubburaj@yahoo.co.in முருகானந்தம் மறுபடியும் தினசரிகளில் செய்தியாகி இருந்தான். ஆனால் இம்முறை அவன் செய்தியான விதம் சந்தோஷப் படும் படியாக இல்லை. முதல் முறையாக அவன் ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் முழு மூச்சாய் ஈடுபட்டு அதற்காக அவர்கள் நடத்திய மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டு, அதை ஊடகங்கள் பிரதானப் படுத்தி வெளியிட்டபோது அவனுடைய புகைப்படம் தினசரிகளில் வெளியானது. ஒரு செய்திச் சேனலில் ஊழலுக்கு எதிரான இவனது இரண்டு நிமிஷப் பேச்சுக் கூட ஒளிபரப்பானது. முருகானந்தத்தைப் பொறுத்த […]


 • காதல் கண்மணிக்குக் கல்யாணம்

  காதல் கண்மணிக்குக் கல்யாணம்

  சோ.சுப்புராஜ், வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பூட்டில் சாவியை நுழைக்கச் சிரமப் பட்டு துளாவிக் கொண்டிருந்த போது, அரவம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து வெளி விளக்கைப் போட்டார்கள். அந்த வீட்டுப் பெண் வெளியே வந்து ”உங்களுக்கு ரெஜிஸ்டர் தபால் வந்துருக்காம்; நாளைக்கு போஸ்ட் ஆபீஸுல போயி வாங்கிக்கனுமாம்…” என்று அரையும் குறையுமாகவும் அவசரமாயும் சொல்லி முடித்ததும் உள்ளே போய் கதவைப் பூட்டி, வெளி விளக்கையும் அணைத்து விட்டாள். இது நடந்தது இப்போதல்ல; தொண்ணூறுகளின் தொடக்கத்தில் …. […]


 • காதல் கண்மணிக்குக் கல்யாணம்

  காதல் கண்மணிக்குக் கல்யாணம்

  வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பூட்டில் சாவியை நுழைக்கச் சிரமப் பட்டு துளாவிக் கொண்டிருந்த போது, அரவம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து வெளி விளக்கைப் போட்டார்கள். அந்த வீட்டுப் பெண் வெளியே வந்து ”உங்களுக்கு ரெஜிஸ்டர் தபால் வந்துருக்காம்; நாளைக்கு போஸ்ட் ஆபீஸுல போயி வாங்கிக்கனுமாம்…” என்று அரையும் குறையுமாகவும் அவசரமாயும் சொல்லி முடித்ததும் உள்ளே போய் கதவைப் பூட்டி, வெளி விளக்கையும் அணைத்து விட்டாள். இது நடந்தது இப்போதல்ல; தொண்ணூறுகளின் தொடக்கத்தில் …. அப்போதெல்லாம் […]


 • தாம்பத்யம்

  தாம்பத்யம்

      எனக்கும் அவளுக்குமான கயிறு இழுக்கும் போட்டி தொடங்கியது எங்களின் மண நாளிலிருந்து……   ஒருவரை நோக்கி ஒருவர் இழுத்துக் கொண்டிருக்கிறோம் மூர்க்கமாக முறுவல்களுடனும் முத்தங்களுடனும்…..   பொதுவான போட்டி விதிகள் எதற்குள்ளும் பொருந்திப் போவதில்லை எங்களின் விளையாட்டு….   ஒருவரை நோக்கி ஒருவர் நகர்ந்து விட நேர்கிறது அவ்வப்போது; ஆயினும் சீக்கிரமே இயல்புக்குத் திரும்பி இழுவையை தொடர்கிறோம்….. கை தட்டி ஆரவாரித்தும் கண்ணீரால் காயப்படுத்தியும் எங்களை உசுப்பேற்றி விடுகின்றன உறவுகளும்….   மையக் கோடு […]


 • பொன்வண்டுகள்

  பொன்வண்டுகள்

    செண்பகத்திற்கு அநதப் பெண்கள் பேசியது எதுவும் அவ்வளவாகப் புரியவில்லை. பட்டணத்திலிருந்து வந்திருந்தார்கள். காலேசில் படிக்கிறார்களாம்; ஏதோ ஆராய்ச்சி என்றும் அதற்கான புள்ளி விபர சேகரிப்பு என்றும் என்னன்னவோ புரியாத வார்த்தைகள் எல்லாம் பேசினார்கள். பாதிவழியில் படிப்பை நிறுத்தும் பெண்கள் பற்றி விவரங்கள் சேகரிப்பதாகவும் அவர்களின் வாழ்க்கை பற்றியும் அவர்கள் படிப்பை நிறுத்துகிற சூழல் பற்றியும் அறிந்து கொள்ள ஆசைப் படுவதாகவும் அதற்காக அவளைப் பற்றியும் அவளின் அக்கா கனகவல்லி பற்றியும் சொல்லச் சொன்னார்கள். செண்பகத்திற்கு அவளின் […]


 • அழியாச் சித்திரங்கள்

  அழியாச் சித்திரங்கள்

    அம்மாவிடம் பால் குடித்து உதட்டில் மிச்சமிருக்கும் வெண் துளிகளுடன் விளையாடத் தவழ்ந்து வரும் நடைபாதைக் குழந்தையை துள்ளிக் குதித்து வரவேற்கிறது தெருவில் அலையும் பசுவின் கன்றொன்று….! ***     ***     *** கை நீட்டும் பிச்சைக்காரிக்கு ஏதும் தர அவகாசமில்லாமல் மின் இரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் கடந்து போகிறவர்களுக்கும் கைகளை ஆட்டிச் சிரிக்கிறது பிச்சைக்காரியின் தோளில் தொங்கும் பச்சிளங் குழந்தை……! ***     ***     *** சோறு குழம்பு கூட்டென்று மண்ணைக் குழைத்து பரிமாறி அவுக் அவுக் என […]