Articles Posted by the Author:

 • தேன் குடித்த சொற்கள் ! 

  தேன் குடித்த சொற்கள் ! 

           ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   அங்காயம் ஆத்தப்பம் றுகாய் ருக்கு மொக்காடி தலா என்ற பாங்கில் திரிந்தன முறையே வெங்காயம் ஊத்தப்பம் ஊறுகாய் ஊருக்கு மிளகாய்ப்பொடி லதா போன்ற சொற்கள்   பற்கள் தெரியாமல் புன்னகைக்கும் குழந்தை மூன்று வயது பார்க்கில் மழலையில் … —–குழந்தை பேசும் மட்டும் எல்லா மொழிச் சொற்களும் தேன் குடிக்கின்றன !                  +++++++


 • இன்று தனியனாய் …

  இன்று தனியனாய் …

              ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   குமார் கோபி ராகுல் ஹரி ரெங்கன் ரகுராம் ஸ்ரீராம் பாபி அட்சயா எனப் பல குழந்தைகளிடம் நெருக்கமாகப்  பழகியிருக்கிறான் அவன்   இப்போது எல்லா குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாகி  எங்கெங்கோ இருக்கிறார்கள்   யாரையும் அவன் மறக்கவில்லை ஆனால் யாரும் அவனை இப்போது நினைப்பதில்லை   குழந்தை உலகத்தில் மகிழ்ச்சியில் திளைத்த அந்தக் கணங்கள் எங்கே ஓடி மறைந்தன ?   —- இன்று  […]


 •  ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌தீப்பொறி !

   ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌தீப்பொறி !

    ஸ்ரீரங்கம் சௌரிராஜன்     அந்தத் தீப்பொறி விழுந்தது இவன் நட்பின் இனிய பசுமையான மென் பிரதேசங்கள் எரிந்து கருகின   இடைவெளி  அந்த நண்பர்களைக் கடுமையாக அமைதிப்படுத்திவிட்டது   ஒரு மலரின் எல்லா இதழ்களும் மீண்டும் கூம்பி மொட்டானதுபோல் அவர்கள் மௌனமானார்கள்   அன்பு கெட்டிதட்டிப்போய் ஆழ்ந்த மௌனத்தில் உறைந்து கிடக்கிறது   ஆனாலும் இப்போதும் அவர்கள் பேசிக்கொள்கிறார்கள் உயிர்ப்பில்லாமல் …    


 • அவன் வாங்கி வந்த சாபம் !

  அவன் வாங்கி வந்த சாபம் !

                  ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   அவன் பாதையெங்கும் முட்கள் காடாய் வளர்ந்துள்ளன   ஆயிரம் கவிதைகள் படித்து ரசித்த பின்னர் நான்கு வரிகள் கூட அவனிடம் இல்லை   அவன் எழுதும் கவிதைகளில் அழகு நடனமாடும் ஆனால் சொற்கள் அவன் மனம் தங்காமல் வெறுமை கொண்டு நிற்கும்   கட்டுரை எழுதி முடித்த பின்னர் எல்லா சொற்களும் வடிந்து கழுவிய தரை போலாகிவிடும்   திரும்பிப் பார்க்கையில் அவன் […]


 • ஞாயிற்றுக்கிழமைகள்

  ஞாயிற்றுக்கிழமைகள்

    ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   அவன் பணிநிறைவு பெற்றுச் சில மாதங்கள் ஓடிவிட்டன   ஒவ்வொரு நாளும் கனக்கின்றன அவனுக்கு …   இருளில் நீந்தி நீந்தி மனக்கரங்கள் சோர்ந்தன  எல்லா நாட்களும் ஞாயிற்றுக்கிழமைகள் ஆயின   நட்பின் திசையில் ஒரே மயான அமைதி    ஒளி மலையாய் எதிர் நிற்கும் பகலை எவ்வளவு நேரந்தான் மென்று கொண்டிருப்பது ?    புத்தக வாசிப்பில் மட்டும் மங்கலான ஒளி அவனுக்கு வழி காட்டுகிறது.       […]


 • இரண்டு பார்வைகள் ! 

  இரண்டு பார்வைகள் ! 

                      ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   மூன்று வயது பார்த்திவ் தன் ஆறு வயது  அண்ணன் பார்கவ்வோடு பேசிக் கொண்டிருந்தான்   ” நம்ம வயத்தில ஒரு சிங்கம் இருக்கு … அது நம்ம தூங்க ஆரம்பிச்ச உடனே தொண்டையில வந்து ஒக்காந்துக்கிட்டு இந்த ஆரம்பிக்கும் … “   ” தப்பு … தப்பு … நம்ம வயத்தில ஒரு பூதம் இருக்கு … […]


 • என்னை நிலைநிறுத்த …

  என்னை நிலைநிறுத்த …

      ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   பின்னால் கிடக்கும் செவ்வக வெளியில் ஆழ்ந்த இருட்டு ஆக்கிரமிக்கிறது   ஐந்தாறு  அகல் விளக்குகளின் வெளிச்சம் ஆறுதல் அளிக்கிறது   அவ்வப்போது சில தீக்குச்சிகளின் உரசலில் தற்காலிக வெளிச்சம் மனம் நிரப்பும்   இழந்ததால் இறந்தகாலமான அற்புதக் கணங்கள் மிதக்கும் இடங்களில் மனம் லயிக்கிறது   உயிரின் கரைந்த இம்மிகள்  விரவி நிற்கும் பகுதியில் என்னை நிலைநிறுத்த கால்பாவ முடியாமல் தவிக்கிறேன்.        


 • மலர்களின் துயரம்

  மலர்களின் துயரம்

                 ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   விடியற்காலை மழையில் சகதியானது எங்கள் வீட்டு வாசல்   இது அறியாமல் பாரிஜாத மலர்களைத் தூவியிருந்தன இரண்டு மரங்கள்   பூமி மெல்லிய பூமெத்தையானது தனியழகுதான்   காலை வாசல் பெருக்கும் போது கூடை மலர்களும் குப்பையாகி வாழ்விழந்து நிறம் மாறி மனம் வருந்தின !     


 • மரங்கள்

  மரங்கள்

        ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   இரவு பகல் பாராமல் நின்று கொண்டிருக்கும் உங்களுக்குக் கால் வலி வேரில் தெரியும்தானே    உங்கள் இலைக் குழந்தைகளின் எண்ணிக்கையை எப்போது உணரப் போகிறீர்கள்   மனிதர்களுக்கு உங்கள் மௌனமொழி விளக்கம் என்ன ?   எங்களுக்கு நிழல் தரும் பெருமையை நினைத்துப் பார்ப்பதுண்டா ?    ஆக்சிஜன் தருவதற்கு வசூல் ஏதும் செய்யாத அதிசய   மருத்துவர்கள் நீங்கள்   உங்களுக்குத் தண்ணீர் தேவைப்படும் தருணத்தில் கூட மௌனம் […]


 • தாவி விழும் மனம் !

  தாவி விழும் மனம் !

          ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   கிடைத்தவற்றின் பட்டியல் சிறியதாகவும் கிடைக்காதவற்றின் பட்டியல் பெரியதாகவும் அருகருகே நின்று அவனைப் பாடாய்ப் படுத்துகிறது   பெரிய பட்டியலின் வரிகளில் அடிக்கடி அவன் மனம் தாவித்தாவி விழுகிறது   அதில் புரண்டு புரண்டு கடைசியில்.  சலித்துப் பெருமூச்சில் கரைகிறது   சிறு பட்டியல் அடிக்கடி ஏங்குகிறது தாவும் மனத்தைச் சபித்தபடி …   நிகழ்காலப்புள்ளி.  புறக்கணிக்கப்படுகிறது    விதி எழுதிய முதல் பட்டியலைவிட மனம் எழுதிய  இரண்டாம் […]