author

சித்ர குப்தனின் டிவி விளம்பரம்

This entry is part 3 of 4 in the series 28 ஏப்ரல் 2024

தாரமங்கலம் வளவன் திடீரென்று ஒரு நாள் அனைத்து டிவி சேனல்களிலும், மூன்று மனிதர்கள் தோன்றி இப்படி பேசினார்கள். ’பாவங்கள் செய்தவர்கள் நரகத்திற்கு சென்று தாங்க முடியாத சித்ரவதைகளை அனுபவிப்பார்கள். அப்படி அவர்கள் சித்ரவதை அனுபவிப்பதை நாங்கள் எம லோகத்தில் நேரில் பார்த்தோம். அதனால் யாரும் பாவங்கள் செய்யாதீர்கள். ’ அந்த மூன்று மனிதர்கள் பேசும் போது அவர்கள் இயல்பாக இல்லை. ஏதோ வலி தாங்க முடியாமல் முனகிக் கொண்டே பேசுவது போல் தெரிந்தது. வளைந்து, நெளிந்து கொண்டே […]

ஒரு பக்க கதை – மிஸ்டு கால் பார்த்தேன்..

This entry is part 2 of 9 in the series 1 ஜூலை 2018

  மும்பை கபே பரேடில் பதினைந்து மாடி கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தில் கார்த்தி ஜிஎம். சிறு வயதிலேயே கார்த்தி ஜிஎம் ஆகி விட்டான்.. காரணம் ஐஐஎம் டிகிரி தான். கார்த்தி அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அப்பா தாமோதரன் கார்த்தியின் அம்மா இறந்த பிறகு மகனைத் தவிர வேறு நினைவு இல்லாமல் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர். வாரம் ஒரு முறை, அதாவது ஞாயிற்றுக் கிழமையில் கார்த்தியிடமிருந்து போன் வரும், மகனின் குரலைக் […]

டிரைவர் மகன்

This entry is part 12 of 15 in the series 27 மே 2018

  இன்று தீர்ப்பு நாள். உயர் நீதிமன்ற வளாகம். நடிகர் ஆஸீஸ் குமார் வீட்டில்  ஒரு விநியோகஸ்தர் கொலை செய்யப் பட்ட வழக்கின் தீர்ப்பு. மீடியா மற்றும் பொது மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பார்வையாளர்கள் வரிசையில் தனது பள்ளிக்கூட நண்பன் சுப்ரமணியின் பக்கத்தில் பாலு உட்கார்ந்திருந்தான். நடு ஹாலில் வக்கீல்கள் கருப்பு அங்கிகளுடன் உட்கார்ந்திருந்தார்கள். இளம் வக்கீல் சுந்தரம் தனது அம்மா பாக்யலட்சுமி பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். பாக்யலட்சுமி சீனியர் கிரிமினல் வக்கீல். கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள சுப்ரமணியின் […]

ஆயா

This entry is part 7 of 11 in the series 11 ஜூன் 2017

  காலிங் பெல் மணி அடித்தவுடன், படுக்கையில் இருந்து எழுந்து வெளிக்கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தவுடன் தான் அந்த ஆச்சர்யம் புரிந்தது பூரணிக்கு.   தன்னால் எப்படி நடக்க முடிகிறது. ஸ்டிரோக் வந்து ஒரு வருடமாய் உணர்வற்று கிடந்த தனது வலது கால் குணமாகிவிட்டதா..   நம்ப முடியவில்லையே..   ஆச்சர்யமும், சந்தோசமும் கலந்த முகத்தோடு வந்து கதவை திறந்து பார்க்க, தபால்காரர் நின்று கொண்டிருந்தார். மருமகள் பேருக்கு ஏதோ ஒரு கம்பெனியில் இருந்து கடிதம் ஒன்று […]

ஒட்டப்படும் உறவுகள்

This entry is part 19 of 22 in the series 4 டிசம்பர் 2016

பெரியம்மாவின் போக்கு பிடிபடவில்லை சண்முகத்திற்கு.   உமாவை உடனடியாக கல்யாணம் செய்து கொண்டு சென்னைக்கு போய் தனிக்குடித்தனம் ஆரம்பிக்குமாறு இதுநாள் வரை வற்புறுத்தியவள் ஏன் மாறிப் போனாள்…   தன்னுடைய ஐந்தாவது வயதில் அப்பாவிடம் கோபித்துக் கொண்டு தன்னை அம்போ என்று பெரியம்மாவிடம் விட்டுவிட்டு தன் பிறந்த வீட்டுக்கு போன அம்மா இருபது வருஷம் கழித்து இப்போது திரும்ப வந்திருக்காளாம்..   பெரியம்மா தான் கூட்டி வந்தாளாம்.. இந்த இருபது வருஷமாய் பெரியம்மா இதற்காக படாத பாடு […]

பார்வதி தேவி வாங்கிக் கொடுத்த நஷ்ட ஈடு

This entry is part 7 of 14 in the series 6 நவம்பர் 2016

தாரமங்கலம் வளவன் கயிலை மலை. சிவபெருமானிடம் பார்வதி தேவியின் விண்ணப்பம். “ சுவாமி, பூலோகத்தில் எனக்கு ஒரு இளம் பக்தை. சம்பூர்ணம் என்று பெயர். அவளின் கணவன் மாரி, கிரானைட் கம்பெனியில் வேலை செய்யும் போது, கிரானைட் கற்களை தூக்கும் கிரேன் அறுந்து விழுந்து, அதனடியில் சிக்கி இறந்து போய் விட்டான். சம்பூர்ணத்திற்கு வயிற்றில் ஒரு குழந்தை. கையில் ஒரு குழந்தை. என் பக்தை கதறி அழுகிறாள் சுவாமி…” “ நான் என்ன செய்ய வேண்டும் தேவி.. […]

குறுநாவல் இளைய ராணியின் நகைப் பெட்டி – 1

This entry is part 12 of 20 in the series 4 செப்டம்பர் 2016

(தாரமங்கலம் வளவன் எழுதிய குறுநாவல் நான்கு பகுதிகளைக் கொண்டது. மூன்று பகுதிகள் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளன. நான்காவது இறுதிப் பகுதி சில நிர்வாகக் காரணங்களால் விடுபட்ட்து குறித்து வருந்துகிறோம். நான்கு பகுதிகளையும் இந்த வாரம் தொடராக அளித்துள்ளோம். ஆசிரியருக்கு எங்கள் நன்றி.) 1 தொலைக்காட்சியில் வெங்கட் என்ற ராஜ வம்சத்தை சார்ந்த ஒரு இளைஞனின் பேட்டியை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.   தங்கள் குடும்பம் ஒரு பழைய ராஜ வம்சத்தைச் சார்ந்தது என்றும், தங்கள் அரண்மனையில் புதிதாய் நகைப் பெட்டி […]

‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ – 2

This entry is part 11 of 20 in the series 4 செப்டம்பர் 2016

2   ரூபவதியை கல்யாணம் செய்து கொண்டு நரசிம்ம ராஜா காகிநாடாவில் இருந்து கூட்டி வந்த போது, ராஜாவின் முதல் இரண்டு மனைவிகளும், அவரின் மகன்களும் அவள் மீது  கொண்ட துவேஷத்திற்கு அளவே இல்லை. அந்த ராஜாவைத் தவிர மற்ற ராணிகளோ, ராஜாவின் மற்ற மகன்களோ  அவளிடம் பேசுவதும் இல்லை. கிழட்டு ராஜாவின் ஆசை மனைவி என்று வேலைக்காரர்களுக்கும் இளக்காரம்.   இந்த உதாசீனத்தையும், தனிமையையும் போக்க, அவள் வெற்றிலை போடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாள். இதைப் […]