நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு — புத்தகம் ஒரு பார்வை.

நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு பற்றி 1953 இல் ஒரு புத்தகம் வந்துள்ளது. அதன் மறுபதிப்பு 2003 ஆம் ஆண்டு மணிவாசகர் பதிப்பகத்தில் மலர்ந்துள்ளது. நாகநாட்டில் இருந்து காஞ்சீபுரம், காவிரிப் பூம்பட்டினம், சிதம்பரம் அதன் பின் பாண்டிநாடு என்று அவர்கள் வலசை வந்தது…

மயிலிறகு

பூங்காவின் சாயம் திப்பிய கிருஷ்ணன் நெற்றியில் கட்டிய ஒற்றை மயிலிறகு ஒரு மாறுவேடப்போட்டியில் சிலையாக நிற்கவைத்தது குழந்தையை. அசைந்து ஓடிக்கொண்டிருக்கும் அவனை ஐந்து நிமிடங்கள் அசைவற்ற சிலையாக்கிய பெருமைக்குள்ளானதாக அது ஊர் ஊராக புத்தகங்கள் மத்தியில் பயணப்பட்டுக்கொண்டிருந்தது. அவனுக்குக் குழந்தைகள் வந்தும்…

எல்லாருக்கும் பிடித்த எம்ஜியார் -நூல் அறிமுகம்

எம்ஜியார் என்ற மூன்றெழுத்து மந்திரம் நம் தமிழ் சினிமாவையும் அரசியலையும் ஆட்டிப்படைத்த விபரத்தையும் அவரது வாழ்க்கைச் சரிதத்தையும் பால கணேஷ் சுருக்கமாக அழகாக விவரித்துள்ளார். பிறப்பிலிருந்து அவர் சந்தித்த சோதனைகள், ஈழத்திலிருந்து கேரளாவுக்குப் புலம் பெயர்ந்தது, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக்…

நுரைத்துப் பெருகும் அருவி

கண்ணோரம் காக்கைக் கால்களாய்ச் சுருங்கி விரிந்து  கிடக்கின்றன காட்டு விருட்சங்கள்.. நுரைத்துக் கிடக்கும் அருவி பெருகி வீழ்கிறது அந்தரங்கம் திறந்த மனமாய். தவளைகள் முணுமுணுப்போது குதித்துச் செல்கின்றன கரையோரம். மினுமினுப்போடு  தாவித் தாவி நீந்திக் கொண்டிருக்கிறது நதி. முங்கிக் குளித்துக் கொண்டிருந்தன…

மாணவர்களுக்கு மொழிப் பயிற்சியும் துறைசார்ந்த அறிவும்

தற்காலத்தில் மாணவர்க்கு மொழிப் பயிற்சி பல சமயம் சிறப்பாய் இருப்பதில்லை.   பேசும் மொழி வட்டார வழக்கிலிருப்பது தவறில்லை. ஆனால் ஒரு மாணவனின் மொழியைக் கொண்டே அவனின் கற்றலை , தகுதியை ஊகிக்கலாம்.    மொழியறிவு, அவர்களின் எதிர்காலத்தை நிர்மாணிக்கிறது.   …

திசையறிவிக்கும் மரம்

மரம் முற்றிவிட்டது துளிர்விட்டுக்கொண்டும்.. ****************************** மொட்டை மரங்களும் அழகிய நிர்வாணத்தோடு திசையறிவித்தபடி. ****************************** வீழ்த்தப்பட்டபின்னும் மரக்கிளைகள் வேர்பிடித்து வேறொருவம்ச ஆணிவேராய்.. ********************************** மரக்குளத்தில் அலையெழுப்புகின்றன பறவைக் குரல்கள்.. ********************************* நீர் கிடைத்த கிளைகள் விரிகின்றன பசுந்தோகையாய்.. கிடைக்காதவை கிண்ணிக் கோழியாய்.

அடையாளம்

ராதா முழித்துக் கொண்டது. ரூமுக்குள் இருட்டு. ராதா உருவமில்லாமல் வார்த்தை துப்பியது. கையையும் காலையும் படுக்கையில் தொமால், தொமாலெனத் தூக்கிப் போட்டது. ‘என்ன அம்மா இன்னும் ஓடிவரக் காணோம்.?’   ராதா கட்டிலின் முழு விஸ்தீரணத்திற்கும் புரண்டது. ‘படாரெ’ன மணை தரையிடிக்க…

காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

”வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தண்டாயுதபாணிக்கு அரோகரா பழனி மலை முருகனுக்கு அரோகரா அன்னதானப் பிரபுவுக்கு அரோகரா.” இதுதான் கார்த்திகை மாத வேல் பூசையில் காரைக்குடி எங்கும் கேட்கும் கோஷம். கார்த்திகை மாதம் முருகனுக்கு உகந்த மாதம். அரனுடைய நெற்றியில் அறுபொறிகளாக ஆங்காரமாக…
அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?

அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?

நாம் சின்னப் பிள்ளையில் அம்புலிமாமா, கோகுலம், பாப்பா மலர், பாலமித்ரா,அணில், முயல்  போன்ற புத்தகங்கள் படித்திருக்கிறோம்.   அழ. வள்ளியப்பாவின் குழந்தைக் கவிதைகளும், வாண்டுமாமாவின் கதைகளும் என்றால் நேரம் காலம் தெரியாமல்  படித்து ரசித்திருக்கிறோம். இதுபோக தாத்தா பாட்டி போன்றோரும் அம்மா, அப்பாவும்…

எம். ஏ. சுசீலாவின் தேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை.

அம்மாவை விமர்சிக்கலாமா.. உள்ளும் புறமும் அறிந்த அம்மாவாய் இருப்பின் விமர்சிக்கலாம் என்றே தோன்றுகிறது. பிடித்தது பிடிக்காதது எல்லாம் அவர்களுக்குத் தெரிந்தாலும் மகளாய் இங்கே ரசனைப் பார்வை மட்டுமே மிச்சமிருக்கிறது.. அம்மாக்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தேவதைகள் என்பது இன்னொரு முறை நிரூபணமாகி இருக்கிறது.…