author

ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்

This entry is part 10 of 30 in the series 17 பிப்ரவரி 2013

பஷீரைப் போல என்னை ஈர்த்த இன்னொருவர் தோப்பில் முகம்மது மீரான். இவரது சிறுகதைத் தொகுதியை சமீபத்தில் படித்தேன். குமரி மாவட்டத்தின் சொல்வழக்கில் மிக அற்புதமான கதைகள். ஒரு குட்டித்தீவின் வரைபடம். இதை வெளியிடுவதை எஸ். பொ அவர்கள் ஒரு பேறாகவே கருதுவதாக குறிப்பிட்டு இருந்தார்கள். இதைப் படித்ததையே ஒரு பேறாகக் கருதுகிறேன். சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் பஷீரின் கதைகளில் எனக்கு தரிசனம் தந்த ப்ரபஞ்சம் இந்த நாவலில் குமரி முனையாகக் காட்சியளித்தது. பஷீரின் எழுத்துக்கள் பேரன்பைப் பேசினால், தத்துவத்தைப் […]

குற்றமும் தண்டனையும் – எம். ஏ. சுசீலாவின் மொழிபெயர்ப்பு

This entry is part 18 of 31 in the series 10 பெப்ருவரி 2013

  சின்ன வயதில் மிக்கேல் ஷோலகோவ் கதைகளை (தமிழ் மொழிபெயர்ப்பு)என் அம்மா வாங்கித்தந்து படித்திருக்கிறேன்.உலகத்தைச் சுற்றிவரும் ஒரு சிறுவனின் கதையையும் படித்திருக்கிறேன்.அதற்குப் பின்பு தற்போதுதான் ஒரு மிகச்சிறந்த ரஷிய எழுத்தாளரின் படைப்பைத் தமிழில் படிக்கும் பேரனுபவம் ஏற்பட்டது.பாராட்டுக்கள். உங்கள் முயற்சி அளவிடற்கரியது.எவ்வளவு பாராட்டினாலும் சொல்லில் அடங்காதது. தனி மனிதர்களின் மன மேன்மைகளை,உன்னதங்களை,உயர் இலட்சியங்களை மட்டுமல்லாது குறைகளை,குணக்கேடுகளை,நோய் பிடித்த மனத்தின் சிறுமைகளை, சீரழிவுகளை,வக்கிரங்களை, அவலங்களை உங்கள் மொழியாக்கத்தின் மூலம் தரிசனம் செய்தபோது நிறைய ஆத்ம விசாரங்களும்,ஆத்ம விசாரணைகளும் ஏற்பட்டன. […]

சுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில்

This entry is part 11 of 32 in the series 3 பிப்ரவரி 2013

அறிவியல் புனைகதைகள் என்றாலே மிக ஆழமாக நம்முள் பதிந்து போயிருக்கும் பெயர் சுஜாதா. அவரின் எழுத்தை மீறி நம்மால் எதையும் ரசிக்க முடியுமா என்ற சந்தேகத்தோடே இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். உண்மையிலேயே மிக அருமையான கதைகளைப் போட்டியின் மூலம் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கி இருக்கிறது ஆழி பதிப்பகம். இதன் தொகுப்பாசிரியர் சந்திரன் , இரா. முருகன் அவர்களின் துணையோடு தேர்வு செய்திருக்கிறார். பல்பரிமாணங்களிலும் அறிவியல் புனைகதைகளை அடுத்த தளங்களுக்கு எடுத்துச் செல்ல தமிழ் மகன், தி.தா. […]

ரயில் நிலைய அவதிகள்

This entry is part 28 of 28 in the series 27 ஜனவரி 2013

கடல், மயில், யானை, குழந்தை, வானவில் இந்த வரிசையில் பெரும்பாலோருக்குப் பிடித்த ஒன்று ரயில்.  ரயில் ஓடிவரும்போது பார்த்து ரசிக்காம இருக்க முடியாது. அழகான ராட்சசன் வர்றது போல இருக்கும். அவ்வளவு காதல் எனக்கு ரயில் மீது. அதே அளவு காதல் ரயில்வே ஸ்டேஷன்கள் மீதும். காரைக்குடியிலும் கும்பகோணத்திலும் மிக நீண்ட ரயில்வே ப்ளாட்பாரங்கள் உண்டு. இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும்  ஏதோ பைபாஸ் ரோட்டை கண் கொள்ளும் அளவு பார்க்குற மாதிரிப் பார்க்கலாம். வாகிங் போறவுங்க, […]

காரசாரம். – பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு

This entry is part 33 of 34 in the series 6 ஜனவரி 2013

பொதிகையின் காரசாரம் நிகழ்ச்சிக்காக முகநூல் நண்பர் ப்ரேம் சாகர்  தொடர்பு கொண்டு பெண்சிசுக் கொலை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறதா இல்லையா என்ற தலைப்பில் கருத்துக் கூற அழைத்திருந்தார். விழிப்புணர்வு இல்லை என்ற பகுதியில் நானும் விழிப்புணர்வு இருக்கிறது என்ற பகுதியில் கருத்துக் கூற என் கணவரும் இடம் பெற்றிருந்தோம். சமூக ஆர்வலர் ஷைலா சாமுவேல்  இப்போது விழிப்புணர்வு வந்து விட்டதாகவும் ஆனால் முன் காலங்களில் எல்லாம் பெண் பிள்ளை என்றால் தத்து யாரும் எடுப்பதில்லை எனவும் கூறினார். […]

நீ நதி போல ஓடிக் கொண்டிரு (ஆசிரியர் :- பாரதி பாஸ்கர்).. ஒரு பார்வை.

This entry is part 9 of 31 in the series 2 டிசம்பர் 2012

நீ நதி போல ஓடிக் கொண்டிரு.. ஒரு பார்வை. நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே.. என்று நதிக்கும் பெண்ணுக்கும் ஒப்புமைப்படுத்தி ஒரு படத்தில் அர்ஜுன் பாடுவார்.  நதிக்குப் பெண் பெயரிடுவதும் நதியை வணங்குவதும் நம் பண்பாடு. நதிக்கரையோரங்களிலேயே நாகரீகங்கள் தழைத்தன. நீரின்றி அமையாது உலகு என பனிக்குடத்திலிருந்து நீர் உடைக்கும் குடம் வரை நம் வாழ்வு நீரோடு சம்பந்தப்பட்டது. மேகத்திலிருந்து மழையாய், அருவியாய், ஏரியாய், நதியாய், காட்டாறாய், கால்வாயாய், வாய்க்காலாய், குளமாய், குட்டையாய், […]

ரசமோ ரசம்

This entry is part 24 of 29 in the series 18 நவம்பர் 2012

மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் என்று பத்மினி பாடுவார்.  மனித முக பாவங்களில் நவரசம் மட்டும்தான். ஆனால் நாம் அதற்கு மேலும் ரசங்கள் தயாரிக்கலாம். நான் சாப்பிடும் ரசம் பத்தி சொல்றேன்பா.   குங்குமம் தோழியில் இணைப்புக்காக இப்ப குளிர்காலம் ஆயிற்றே என ரசம் டிப்ஸ் அனுப்பி இருந்தேன். அது பிரசுரமாகி இருக்கு. பொதுவா நாம சாம்பார் சாதம் , வத்தக் குழம்பு சாதம் சாப்பிட்ட பின்னாடி ரசம் சாதம் சாப்பிடுவோம். சிலர் ரசத்தை குடிக்கக்கூட செய்வாங்க.   […]

குன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும்

This entry is part 16 of 29 in the series 18 நவம்பர் 2012

குன்றக்குடியில் கி பி எட்டாம் நூற்றாண்டில் முதலாம் பாண்டியன் அமைத்த  ஒரு குடைவரைக்  கோயில் இருக்கிறது தெரியுமா உங்களுக்கு.   அதன் பக்கவாட்டு மலைப்பகுதிக்குச் சென்றால் அங்கே சமணர்கள் அமைத்த படுகைகள் இருக்கின்றன.. அவற்றைப் பார்த்திருக்கின்றீர்களா. அடுத்தமுறை சென்றால் இவை இரண்டையும் தவற விடாதீர்கள்.   காரைக்குடியில் இருந்து  8 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது குன்றக்குடி. குன்றக்குடிக்கு எப்போது சென்றாலும் மலைமேலிருக்கும் சண்முகநாதனை வணங்கி வருவதுடன் அன்றைய ஆலயதரிசனம் முடிந்துவிடும். ஆனால் இந்த முறை சென்ற […]

குன்றக்குடியில் கார்த்திகை முதல். சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்

This entry is part 24 of 33 in the series 11 நவம்பர் 2012

  இந்தத் திருத்தலத்தில் இன்னொரு பெருமையும் உண்டு. எல்லா வைபவ விஷேஷங்களும் போக கார்த்திகை மாத முதல் சோமவாரம்தான் அது. அதை கொண்டாட நகரத்தார் பெருமக்கள் அனைவரும் இங்கே ஒன்று கூடிவிடுவார்கள்.   சைவ நெறிச் செல்வர்களான அவர்கள் அந்தக் காலத்தில் ”ஆண்டிக்கு வடித்தல் ” என கார்த்திகை முதல் சோம வாரத்தில் வண்டி கட்டிக் கொண்டு இங்கே  சமையல் பொருட்களை எடுத்து வந்து  ஆள் வைத்து சமைத்து  7 கறி, கெட்டிக் குழம்பு, சாம்பார், ரசம், […]

சார் .. தந்தி..

This entry is part 22 of 31 in the series 4 நவம்பர் 2012

  ஐயோ தந்தியா.. என்று மக்கள் அதிர்ந்த காலம் உண்டு. தந்தி என்றாலே ஏதோ கெட்ட செய்தி என்று பயம். பொதுவாக யாராவது சீரியஸ் என்றால் மட்டும் தந்தி கொடுக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.   எஸ்வி சேகரின் நாடகத்தில் ( அல்வான்னு நினைக்கிறேன்). சார் தந்தி என்று 4 முறை தந்தி வரும். ஐந்தாவதா ஒரு ஆள் சார் தந்தி என்று சொல்வார். அட..அது தினத்தந்தின்னு சொல்லி பேப்பர்ல ந்யூஸ் படிக்க ஆரம்பிச்சிடுவார் எஸ்வி சேகர். இப்ப […]