மனித நேயர்

தொழுகைத் தொப்பி புனிதநூல் பிரதி பேரரசன் உடுப்பிற்கும் உணவிற்கும் நெய்தபடி இருந்தார். மலை எலிகளை விரிந்த நாகங்களை விக்கிரங்களை உடைத்து பள்ளிகளை எழுப்பினார். டாரா ஷிக்கோ புறச்சமயியானான், அவனோடு ஷூஜா, முராட், சர்மட்டை சிதைத்தார் வாழும் புனிதர். மதமெனும் மதுவில் மூழ்கியவர்…

வீடழகு

எனக்கான வீடு அதென்று மையலுற்றுத் திரிந்து கொண்டிருந்தேன். வெள்ளையடிப்பதும் சித்திரங்கள் வரைவதுமாய் கழிந்தது என் பொழுதுகள். நீர் வடியும் தாழ்வாரங்கள் தங்கமாய் ஜொலிக்கும் பித்தளையின் தகதகப்போடு. மழைத் தூரிகை பூசணம் சூரியக்குடைத் தடுப்புதாண்டி வரவிட்டதில்லை ஒரு தேன்சிட்டோ., குருவியோ. காலைப் பனியும்…

சுத்த மோசம்.

"எவ்வளவு அழகா சிரிக்கிறா இன்னமும்”   ஒரு பத்ரிக்கையின் அட்டைப்படத்தைப் பார்த்துச் சொன்னான் ரமேஷ். “அவளுக்கு மார்கெட்டே இல்லையாம். தீபாவளி விளம்பரம் ஏதும் வந்தால்தானாம்.” கிண்டலடித்தாள் ரேஷ்மா. “என்னா க்ளாமர்.. இவ இனி நடிப்பாளா தெரியலை” வருத்தப்பட்டான் ரமேஷ்  அடுத்தபக்கத்தில் இருந்த ஒரு…

பூனைகள்

அலுவலகம் செல்கின்றன. தொழில் செய்கின்றன. கடைகள் நடத்துகின்றன. சில சமைக்கவும் செய்கின்றன. முக்கால்வாசி நேரம் மூலையில் முடங்கிக் கிடந்து பெரும் வேலை செய்ததாய் நெட்டி முறிக்கின்றன. வீட்டுக்காரி அள்ளி வைக்கும் மீனில் திருப்தியடையும் அவை வளர்ப்புப் பிராணிகள்தாம் காவல் காப்பவை அல்ல.…

நினைவில் நிற்கும் நேர்காணல்கள். ஒரு பார்வை.

ஒவ்வொரு முறையும் நேரிலோ., தொலைபேசி மூலமோ ஒருவரை பேட்டி அல்லது நேர்காணல் எடுக்க பலமுறை முயலவேண்டி இருக்கும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என கடைசியில் வாகை சூடலாம். சில முடியாமலும் போகும்.  ”என் மனைவி” என்ற தலைப்பில் ஒரு மாத இதழுக்கான…

எஸ்டிமேட்

சின்னவன்., ”அம்மா. சீக்கிரம். செய்தாச்சா. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்துருவாங்க..” ”சரிடா. சமையல் ஆகிக்கிட்டே இருக்கு. கொஞ்சம் ஃபாண்டாவும்., ஐஸ்க்ரீமும் வாங்கி வந்துரு.” பெரியவன் போனில் நண்பனிடம் .,”டேய் எங்க வீட்டுல என் தம்பி ஃப்ரெண்ட்ஸ் சாப்பிட வர்றாங்களாம். ஒரே மட்டன்…

சந்திப்பு

ஒரு உறவு ஏற்படும்போதே அதிலிருந்து விலகிப் பார்ப்பதான சிந்தனையும் தோன்ற ஆரம்பிக்கிறது. எந்நேரமும் பிரியலாம் என்ற அணுக்கத்தோடே பகிரப்படுகிறது எல்லா சொந்த விஷயங்களும் இந்நேரத்தில் இன்னதுதான் செய்து கொண்டிருக்கக்கூடும் என்பது தெரியும் வரை தொடர்கிறது பேச்சு. ஏன் பேசுகிறோம் எதற்கு சந்திக்கிறோம்…

எடை மேடை

தன்னைத்தானே நீதிமானாகக் கற்பித்துக் கொள்ளும் ஒருவன் பார்க்கும் அனைத்தையும் எடையிட்டுக் கொண்டிருக்கிறான். கடந்து செல்லும் ஒரு பெண்ணை உற்று நோக்குகிறான். அவள் திரும்பப் பார்த்தால் மகிழ்வடைகிறான். பிடித்தமானவள் என்றோ உத்தமி என்றோ குறியீடு இடுகிறான். அவள் அசட்டையாய்க் கடந்தால் திமிர்பிடித்தவளாகிறாள் வேறு…

சங்கமம்

நதியாய்ப் பெருகி கரைகளைப் புணர்ந்து புற்களையும் விருட்சங்களையும் பிரசவித்திருந்தாள். வரத்து வற்றிய கோடையிலும் நீர்க்காம்பைச் சப்பியபடி பருத்துக் கிடந்தன வெள்ளரிகள் கம்மாய்க்குள். காட்டுக் கொடிகளும் தூக்கணாங்குருவிகளும் குடக்கூலி கொடுக்காமல் வேடிக்கை பார்த்தபடி விலகிச் சென்றன அவளை விட்டு. வறண்ட கணவாயாக தூர்ந்திருந்த…

கனவுகள்

இரவு கருத்ததும் கலங்கரை விளக்காய் ஒளிவிடத் தொடங்குகின்றன இன்றைக்கான கனவுகள். ஒளிர்ந்த விளக்குகள் பிடறி சிலிர்க்கும் சவாரிக் குதிரைகளாய் காற்றில் பறக்கின்றன. ஆசைக்காற்றில் உப்பி வண்ண பலூன்களாகி பருக்கத் தொடங்குகின்றன கடல் மண்ணிலிருந்து. பலூன்களைப் பிடித்துச் செல்லும்போது பறக்கும் வெப்பக்காற்று பலூன்களாகி…