நாட்குறிப்பில் பதிவிடாத விடயம் 1: அக்கா, என்னைத் தேடிக்கொண்டு வந்திருந்த அன்றையப் பொழுது இன்னமும் என் ஞாபகத்தில் அழுத்தமாய் பதிந்திருக்கிறது.அது மதியத்திற்கு முந்திய வேளை. அக்கா மோனாலிசா புன்னகையுடன் உள்ளே வந்தார். “எப்படி இருக்க?” என்றார் அதே புன்னகை மாறாமல்.நான் சிரித்தேன். என்னைப் பெரிய மனுசி போல் மதித்து, அப்படி நலம் விசாரித்தது நாணத்தை உண்டு பண்ணியது. “ அதற்குள்ள வேலை முடிந்து விட்டதா?” மணியைப் பார்த்தேன் பன்னிரெண்டை தாண்டியிருந்தது. “இல்லை, இது சாப்பாட்டு நேரம்.அங்கு இருக்க […]
அவள் ஒரு பௌதிக மாணவி.அவளது வீட்டின் கடிகாரம் திடீரென வினோதமாக பின்னோக்கிச் செல்கிறது.அவளுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, பதினொரு மணி ஆறு நிமிடங்கள் இருக்கும் போது தான் அவள் கடிகாரத்தை கவனித்தாள். அவளது வாழ்வில் அது மிக முக்கியமான நேரம் என்பதால் அதனை அவள் தனது மனதில் குறித்தும் கொண்டிருந்தாள். அதன் பின் மிகப் பதட்டமாகவும் பயங்கரமாகவும் நகர்ந்த நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் இப்போதுதான் கடிகாரத்தைக் கவனிக்கிறாள்.நேரம் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.அதனை அவள் உறுதிப்படுத்த கடிகாரத்தை உற்று […]
-வாணிஜெயம் மேலாளர் அறையிலிருந்து அவன் வெளிப்பட்ட போது அண்ணியிடமிருந்து வந்திருந்த தவறிய அழைப்புகளைக் காண நேர்ந்தது.பொதுவாக அண்ணி எப்போதும் அழைக்க மாட்டார்.அதுவும் அலுவல் நேரத்தைத் தவிர்த்துவிடுவார். தனது கைப்பேசியில் பதிவாகியிருந்த தவறிய அழைப்புகளைப் பார்த்தவாறே அலுவலகத்திற்கு வெளியே வந்தான். அண்ணியின் எண்களை அழுத்திக் காத்திருந்தான்.சில நொடிகளுக்குப் பிறகு மறுமுனையில் அண்ணி…. “இரண்டு மூணு தரம் கூப்பிட்டேனே..வேலையா இருந்தியா?” “ஆமாண்ணி.என்ன விசயம்?” “ரெண்டு நாளைக்கு முன்ன சரசம்மா விஷம் குடிச்சுடுச்சு.இன்னமும் ஆஸ்பத்திரியில் தான் இருக்கு.பிழைக்குமானு தெரியலை.நீ எதுக்கும் மதியை […]
ஒளிப்பொருந்திய அழகியக் கண்கள் அவனுடையது… அவனது கண்களை எவற்றுடன் ஒப்பிடுவது என்று எனக்குத் தெரிவில்லை.ஆனால் அவைப் பேசக்கூடிய திறன் கொண்டவை என்பதை மட்டும் என்னால் உணர முடிகின்றது. அந்த கண்கள் தான் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் எனக்கு அவனை அடையாளம் காட்டிக் கொடுத்தன.நான் அவனை அடையாளம் கண்டுக்கொண்டது அவனுக்கு ஆச்சர்யத்தைத் தந்திருக்கலாம்.அவனது முகம் திகைப்பினால் வெளுத்திருந்தாலும் அவனுடையக் கண்கள் என்னை அடையாளம் கண்டுக்கொண்டதுப்போல் எனக்கு மட்டும் பரிச்சயமான மொழியில் சிரித்தன.அவனது விழிகளுடன் எனக்கிருந்த பரிச்சயம் அவனுக்குத் தெரிய […]
மெல்லியதாய் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருக்கும் அக்கினிக்கு எதிரே நானும் கோமளாவும் மணமக்களாய் அமர்ந்திருந்திருக்கிறோம். கழுத்தை அழுத்தும் மலர் மாலையுடன் பொன்னும் பூவும் அழகு சேர்க்க சிவப்பு சரிகை ஒளிரும் பொன்நிற சேலையில் கோமளா இளஞ்சிவப்புப் பூவாய் நாணத்தில்…! இன்னும் சற்று நேரத்தில் மஞ்சள் கயிறு மார்பில் படர, என் மனைவியாகப் போகிறாள். கோமளா என்ற பெண் இனி திருமதி விசுவநாதனாக…! கொழுந்துவிடும் அக்கினியில் இரண்டொரு முறை மரக்கழியால் நெய் வார்க்கிறார் ஐயர். அக்கினி நாக்குகள் மேலேழுந்து […]
x ஆறடி உயரத்தில் வெண்நிற ஆடையுடன் நின்றிருந்த அவ்வுருவத்தைப் பார்த்தபோது செல்லம்மாவின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.ஏதோவொரு வெப்பம் தனிச்சையாக வந்து தாக்கியது.மேனி முழுவதும் சிலிர்த்தது.அத்தருணத்தில் தனக்குத் தோன்றிய உணர்வு எத்தகையானது என்பதை அவளால் பகுத்துப் பார்க்க இயலவில்லை. அவ்வுருவத்தை தொடந்தாற்போல் சில நொடிகள் பார்க்கமுடியாமல் மெல்ல தலையைக் குனிந்துக்கொண்டாள்.சேலைத்தலைப்பை நன்கு இழுத்து முக்காடைச் சரி செய்தாள்.இதுவரையில் அதுபோன்ற ஒளிப்பொருந்திய கண்களை அவள் சந்தித்ததில்லை.தூரத்தில் இருந்து பார்த்தபோது அவை நட்சத்திரங்களாய் மின்னின…சற்று நெருங்கிய போதோ நிலவைப் போன்று […]
வாணிஜெயம், பாகான் செராய். அவன் வீட்டிற்குள் நுழைந்த போது கூடத்து நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த உருவம் இவனைக் கண்டு ஒருக்கழித்து அமர்ந்ததைக் கவனித்தான்.அவன் குளித்து ஆடை உடுத்தித் திரும்பிய போது அந்த உருவம் மெதுவாக எழுந்துக்கொண்டது. தொலைக்காட்சி அலைவரிசை மாற்றப்பட்டிருந்தது.இது தினசரி நடக்கும் நிகழ்ச்சி தான்.வழக்கம் போல் அந்த உருவத்தைக் கண்டதும் தனது உதட்டில் எழும் இகழ்ச்சிப் புன்னகையும் வெறுப்பு கலந்தப் பார்வையும் தோன்றாதது அவனுக்கு சிறு ஆச்சரியத்தைத் தந்தது. செண்பகம் தேனீர் கொண்டு வந்து வைத்தாள். […]
வாணி ஜெயம்,பாகான் வாசலில் இருந்த அழகிய இரு இணைக் காலணிகள் அவனுக்கு ஆச்சரிய கலந்த ஆனந்ததைத் தந்தன. நிச்சயம் பொன்னி அக்காவந்திருக்க வேண்டும்.அவன் விருட்டென்று வீட்டினுள் நுழைந்து கூடத்திற்கு பக்கத்தில் இருந்த அறையை எட்டி பார்க்கையில் அவனது கணிப்பு பொய்த்துவிட வில்லை. பொன்னி அக்கா ஒருகழித்து எதிர்புற சுவரை பார்த்த வண்ணம் படுத்திருந்தாள்.அவன் மெல்ல நெருங்கி அக்காவின் தோளைத் தொட்டு, “பொன்னிக்கா” என்றழைத்தான். பொன்னி அக்கா திடுக்கிட்டு விழித்தாள்.விழிகளில் ஆச்சரியம் விரிய மெல்ல நிதானமாக எழுந்து அமர்ந்தாள். […]