author

அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்

This entry is part 14 of 24 in the series 9 ஜூன் 2013

எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை.  தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை  74 ஆண்டுகள் வாழ்ந்தவர்.  நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முத்தவர். சிறு கதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என் பல துறைகளிலும் தன் ஆளுமையின் பதிவுகளை விட்டுச் சென்றுள்ளவர்.  தான் செயலாற்றியது எத்துறையானாலும் அத்துறைக்கு வளம் ஊட்டி சிறப்பித்தவர்.  தேசீய போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறை சென்றவர்.  எவ்வளவு சிறப்பான ஆளுமையான போதிலும் தன்னை […]

காந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்

This entry is part 7 of 40 in the series 26 மே 2013

காந்தி மேரியை நான் முதலில் பார்த்தது தில்லியில் 1987-ல். இருபத்தாறு வருடங்களுக்கு முன். தில்லியில் நிரந்தரமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் கண்காட்சித் திடலில் (Exhibition Grounds). நான்கைந்து நிரந்தர திறந்த வெளி  அரங்குகள் உண்டு. அவற்றில்  ஒன்றான, மன்ஸார் அரங்கில், பேராசிரியர் ராமானுஜம் ஒரு நாடகத்தை மேடையேற்றியிருந்தார். வெறியாட்டம் என்ற பெயரில். எனக்கு ராமானுஜத்தைத் தெரியும். மற்றும் மு.ராமசாமியைத் தெரியும். ராமானுஜம் தில்லி தேசீய நாடகப் பள்ளியில் அல்காஷியிடம் நாடகம் பயில வந்த காலத்திலிருந்தே நண்பர். தமிழ் நாட்டின் வளமுறைக்கு […]

சி. சு. செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (10)

This entry is part 10 of 33 in the series 19 மே 2013

வேடிக்கையாகத் தான் இருக்கிறது. இன்று செல்லப்பா காலமாகி பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, அவரைப் பற்றி நினைப்பவர்கள் – நினைப்பவர்கள் இருக்க மாட்டார்களா என்ன? எட்டு கோடி தமிழரில் அவரிடம் பழகிய அவருக்கு பத்திருபது வயது இளையவர்கள், அந்த தலைமுறையில் அவர் பெயரைக் கேள்விப்பட்டவர்கள் சிலராவது இருக்க மாட்டார்களா என்ன?, இருப்பார்கள் தான் – அவர்கள் முதலில் அவரை விமர்சகராகத் தான் நினைவு கூறுவார்கள். அவர் சுதந்திரப் போராட்ட உணர்வு கொண்டதும் சிறை சென்றதும் கடைசி வரை […]

ஒரு புதிய அறிமுகம் – இரண்டு பழையவர்கள் (க. சட்டநாதன், குப்பிழான் ஐ. சண்முகம்)

This entry is part 18 of 29 in the series 12 மே 2013

க. சட்டநாதன், தன் மூன்று சிறுகதைத் தொகுதிகளை சில மாதங்கள் முன் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர் எழுபதுகளிலிருந்து எழுதிவருபவர், யாழ்ப்பாணக்காரர். இது காறும் இவரது சிறுகதைகள் ஐந்து தொகுப்புகளாக வெளிவந்துள்ளன எனத் தெரிகிறது. எனக்கு அவர் அனுப்பி வைத்தவை சமீத்திய மூன்று தொகுப்புகள்,  2010-ல் வெளியான முக்கூடல் என்னும் தொகுப்பையும் சேர்த்து. நாம் அறுபதுகளில் முதன் முதலாக சரஸ்வதி பத்திரிகையில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய மௌனிவழிபாடு என்ற கட்டுரை மூலம் தெரிய வந்த ஏ.ஜெ. […]

செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (9)

This entry is part 13 of 28 in the series 5 மே 2013

  நான் முதன் முதலாக 1961-ல் செல்லப்பாவைப் பார்க்கச் சென்ற போது, அங்கு திரிகோணமலையிலிருந்து வந்திருந்த தருமு சிவராமுவை, செல்லப்பாவின் வீட்டில் சந்தித்ததைப் பற்றிச் சொன்னேன். அது எனக்கு எதிர்பாராத  மகிழ்ச்சி தந்த ஒரு சந்திப்பு. திரிகோணமலையிலிருந்து வந்தவருக்கு தமிழ் நாட்டில், சென்னையில் யாரைத் தெரியும்? எழுத்து பத்திரிகையைத் தெரியும். அதன் ஆசிரியர் செல்லப்பாவைத் தெரியும். செல்லப்பா அப்போது என்ன, எப்போதுமே சம்பாத்தியம் என்பது ஏதும் இல்லாத மனிதர். வத்தலக்குண்டுவிலிருந்து சென்னைக்கு எழுத்தாளராகவே வாழ வந்தவர். க.நா.சு […]

செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு -7

This entry is part 24 of 29 in the series 24 மார்ச் 2013

  செல்லப்பா, தன் சிஷ்யர்கள் எல்லோரையும் தன் அச்சில் வார்க்கப் பார்க்கிறார் என்று க.நா.சு. சொன்னாலும், அப்படிச் சொல்வதில் ஒரு சந்தோஷம் அவருக்கு இருந்தாலும், அதற்கு ஆதாரம் ஏதும் யதார்த்த நிகழ்வுகளில் இல்லை. அவர் எழுத்து பத்திரிகையில் வெளித்தெரிந்த, அவருக்கு மிக சந்தோஷம் அளித்த எவரும் அவரவர் தம் தனி வழியில் சென்றார்களே தவிர அவர் அடிச்சுவட்டில் சென்றவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தம் இலக்கிய ஜீவிதம் எழுத்து இதழில் தான் பிறந்தது என்பதில் மாறுபட்ட […]

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாதார நிகழ்வு (6)

This entry is part 15 of 26 in the series 17 மார்ச் 2013

  இப்போது இதை எழுதிக்கொண்டிருக்கும் கணத்தில் அந்தக் கட்டத்தை நினைத்துப் பார்த்தால், அப்படியெல்லாம் “ஒருத்தர் இடம் கொடுத்தால் எதையும் எழுதிவிடுவதா?” என்று கேட்டாரே செல்லப்பா, அந்த மனநிலையைக் கொடுத்ததே அவரும் அவரது எழுத்து பத்திரிகையும் தான். அதற்கும் மேல், எங்கள் மனம் நடமாடிய அந்தச் சின்ன இலக்கிய சூழலில் இதைத் தானே நான் கற்றுக்கொண்டேன். எழுத்து, இலக்கிய வட்டம், அதைத்தொடர்ந்து தேவசித்திர பாரதியின் ஞானரதம் எல்லாம் என்னிடம், மனம் விட்டு எந்தத் தடையும் உணராது பேசும் எழுதும் […]

(5) – செல்லப்பாவின் தமிழகம் உணராத வாமனாவதாரம்

This entry is part 26 of 28 in the series 10 மார்ச் 2013

எழுத்து பத்து அல்லது பன்னிரண்டு வருஷங்களோ என்னவோ நடந்தது. எழுத்து மாதப் பத்திரிகையாக, பின்னர் காலாண்டு பத்திரிகையாக, பின்னர் எழுத்தை நிறுத்தி விட்டு பார்வை என்ற பெயரில்… இப்படி செல்லப்பாவின் பிடிவாதமும் மன உறுதியும், எவ்வளவு நஷ்டங்கள் வந்தாலும், உழைப்பு வேண்டினாலும், மனம் தளராது முனைப்புடன் செயலாற்றுவது என்பதை செல்லப்பாவிடம் தான் பார்க்கவேண்டும். அவர் எழுத்து நடத்திய காலத்தில், சில வருஷங்கள் கழித்து க.நா.சு. இலக்கிய வட்டம் என்ற மாதமிருமுறை பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். அதிலோ இல்லை […]

நானும், நாமும்தான், இழந்துவிட்ட இரு பெரியவர்கள்

This entry is part 5 of 33 in the series 3 மார்ச் 2013

  கடந்த ஒரு வாரத்துக்கும் அதிகமாக எதுவுமே சரியில்லை. உத்பாதங்கள் ஏதும் நிகழ்வதற்கும் அதற்கு அறிகுறியாக  “கரு மேகங்கள் சூழுமாமே’ அப்படித்தான் கருமேகங்கள்: வெளியில் அல்ல, வீட்டுக்குள்.: எனக்கும் உடம்பு சரியில்லை. இரவெல்லாம் மார்பில் கபம், கனத்து வருகிறது. இருமல். உடம்பு வலி. போகட்டும் இது பருவகால உபத்திரவம். சரியாப் போகும் நாளாக ஆக என்று நினைத்து காலத்தைக் கடத்தினால், அது நாளுக்கு நாள் அதிக மாகிக்கொண்டு வருகிறது. மருமகளுக்கும் அதே சமயத்தில் உடல் நிலை சரியில்லை. […]

அவநம்பிக்கையிலும் கேலியிலும் பிறக்கும் கவிதை

This entry is part 2 of 26 in the series 24 பிப்ரவரி 2013

  ஐம்பது வருடங்களாயிற்று. தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு பெரும் புரட்சியே நிகழ்ந்துள்ளது. வேறு எதில் புரட்சி நிகழ்ந்துள்ளதோ இல்லையோ, தமிழ்க் கவிதை என்று இப்போது சொல்லப்படுவதில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழ்க் கடற்கரையோரங்களில், கிழக்கு இந்திய தீவுகளில், சுமத்ராவில் சுனாமி வீசிய காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தோமே. கடற்கரையோர சாலைகளில் கார்கள் மிதந்து கொண்டிருந்தன. காவிரியில் வெள்ளம் வந்தால் ஒரு வருடம் தான் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் நாசமாகும். ஆனால் அடுத்த வருடங்களில் விளைச்சல் அமோகமாக […]