Articles Posted by the Author:

 • நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் – அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில்

  [இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் மீள்பிரசுரமாகின்றது. – வ.ந.கி -] அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில் ‘தோர்ன்கிளிவ் பார்க்’… ‘டொன் மில்ஸ்ஸுக்கும் எக்ளின்டனுக்குமிடையில், அண்மையில் அமைந்திருந்த பகுதி. ‘ஷாப்பிங் மால்’ , பாடசாலை, பூங்கா, நூலகம் எனச் சகல வசதிகளுடன், ‘டொராண்டோ டவுண் டவு’னிற்கும் அருகில் அமைந்திருந்த […]


 • யமுனா ராஜேந்திரனுடன் சில மணித்தியாலங்கள்

  யமுனா ராஜேந்திரனுடன் சில மணித்தியாலங்கள்

    தற்போது ‘டொராண்டோ’ வந்திருக்கும் கலை, இலக்கிய விமர்சகரான எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனை தமிழ் கலை, இலக்கிய உலகு நன்கறியும். கோவையில் பிறந்த யமுனா ராஜேந்திரன் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். அரசியல், கலை, இலக்கிய விமர்சகத்துறையில், மொழிபெயர்ப்புத் துறையில் ஓய்வற்று அவர் ஆற்றிவரும் பணி என்னைப் பிரமிக்க வைப்பதுண்டு. பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றிவருமிவரை எழுத்தாளர் ‘கனவுச்சிறை’ தேவகாந்தனின் இருப்பிடத்தில் சந்திக்கும் வாய்ப்பு இன்று – மே 17, 2012 –  கிடைத்தது. இவர்களுடன் எழுத்தாளர் டானியல் […]


 • ‘ஜான் மார்டெலி’ன் (Yann Martel) ‘பை’யின் வாழ்வு (Life Of Pi)!

  கனடிய எழுத்தாளரான ஜான் மார்டெல் (Yann Martel) எழுதிய புகழ்பெற்ற நாவல் ‘பை’யின் வாழ்வு (Life Of Pi). இந்த நாவல் 2002ஆம் ஆண்டுக்குரிய ‘புக்கர்’ விருதினைப் பெற்றதுடன் பிரான்சின் புக்கர் விருதினை இதன் பிரெஞ்சிய மொழிபெயர்ப்பிற்காகப் பெற்றது. அத்துடன் தென்னாபிரிக்க நாவல் விருது, இலக்கியத்திற்கான ஆசிய/பஸிபிக் அமெரிக்க விருது (2001-2003)எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த நாவல் ஐந்து தடவைகள் பிரித்தானிய பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நான் வாசித்த நாவல்களில் மட்டுமல்ல, இதுவரையில் […]


 • காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!

  காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!

  – வ.ந.கிரிதரன் – விண்ணில் புள்! மண்ணில் புள்! வனத்தில் புள்! மனத்தில் புள்! புள்ளினம் பறந்து செல்லும். உள்ளமோ சிறகடிக்கும். அவற்றை அவதானிப்பதில் அளப்பரிய இன்பம். புல்லரிப்பில் களிக்குமென் உள்ளம். இறகசைப்பின் விரிவு கண்டு ஒரே பிரமிப்பு! அழுத்த வேறுபாடுகளை அவை கையாளும் இலாவகம்! எத்துணை அறிவு! புள்ளினம் தந்திரம் மிக்கவை. சிறகசைத்தலற்று விண்ணோக்கி அல்லது மண் நோக்கி விரைதலில் அவை பாவிக்கும் அறிவின் ஆழம்.. பிரயோகிக்கும் அறிவியலின் புரிதல்… இவை கண்டு வியக்காமல் ஒருவரால் […]


 • என்று வருமந்த ஆற்றல்?

  என்று வருமந்த ஆற்றல்?

  நள்ளிரவுக் கருமை; மூழ்கிக் கிடக்குமுலகு; தண்ணொளி பாய்ச்சும் நிலவு; ‘கெக்க’லித்துச் சிரிக்கும் சுடரு. விரிவான் விரிவெளி. ‘புதிர் நிறை காலவெளி. வெறுமைக்குள் விரியும் திண்ம இருப்பு. பரிமாண விலங்குகள் தாங்கும் அடிமை. பன்முறையெனினும் மீறி வியப்பதற்கெதுவுண்டு. படியளக்கும் படைத்தவரே! படைத்ததேன்? பகர்வீரா? அறிவுத்தாகம் மிகுந்த அலைவு; தாகசாந்திதான் எப்போது? அலையெனப் பரவும் நிலை வரும் வரையிலா? என்று வருமந்த நிலை? அன்றி ‘அதிவெளி’ கடக்கும் ஆற்றல் வரும் வரையிலா? என்று வருமந்த ஆற்றல்? ngiri2704@rogers.com


 • மழையைச் சுகித்தல்!

  மழையைச் சுகித்தல்!

  நள்ளிரவு மழை நண்பகல் கழிந்தும் பெய்தலை இன்னும் நிறுத்தவில்லை. எழுதற்குப் பிரியமின்றிப் புரண்டு படுத்தலிலும், பொழியும் வான் பார்த்திருப்பு கழித்துக் கிடப்பதிலும் தானெத்தனை களி! வினாத்தொடுத்து புரிதலை வினாக்களாக்குவதில் பேரவாக் கொள்ளும் மனது! இயற்கை நோக்கி, வாசித்து, கனவில் மூழ்கி இளகி விடுதலென் இயற்கையே. சதிராடும் மின்னற்கொடியாள் வனப்பில் தமையிழக்காத கவிஞரெவருளரோ? சிறகு சிலிர்த்து நீருதிர்க்கும் புள்ளினம், நினைவூட்டும் பால்யப் பொழுதுகள். காகிதக் கப்பல்களை மட்டுமா கட்டினோம்? கற்பனைகளை மட்டுமா பின்னினோம்? பெய்தலில் வரலாற்றைப் ‘ போதிக்கும் […]


 • குறுநாவல்: ‘பிள்ளைக்காதல்’

  குறுநாவல்: ‘பிள்ளைக்காதல்’

  1. ஸ்கார்பரோ நூலகக் கிளையொன்றில் பன்மொழிப் பிரிவினில் தமிழ் நூல்களைத் தேடிக்கொண்டிருந்த பானுமதியின் கவனத்தை “பானு” என்ற வியப்புடன் கூடிய ஆண் குரலொன்று கலைத்துவிடவே குரல் வந்த திசையினை நோக்கித் திரும்பினாள். அவளால் நம்பவே முடியவேயில்லை. எதிரிலிருந்தவன் சேகரனேதான். எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவனை அவள் சந்திக்கின்றாள். குறைந்தது இருபத்தைந்து வருடங்களாகவாவதிருக்கும். காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடி விட்டது. நாட்டு நிலைமை காரணமாகப் புலம்பெயர்ந்து வந்தது நேற்றுத்தான் போலிருக்கிறது. அதற்குள் இத்தனை வருடங்கள் கழிந்தோடி விட்டனவா! வியப்பு […]


 • நூல் மதிப்புரை: எங்கும் ஒலிக்கிறது காற்று! கூர் 2011 கலை இலக்கிய மலர்!

  நூல் மதிப்புரை: எங்கும் ஒலிக்கிறது காற்று! கூர் 2011 கலை இலக்கிய மலர்!

  “எங்கும் ஒலிக்கிறது காற்று” என்னும் நோக்குடன் வெளிவந்திருக்கிறது கனடாவிலிருந்து எழுத்தாளர்களான தேவகாந்தனை ஆசிரியராகவும், டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டுதோறும் வெளிவரும் கூர் 2011 கலை இலக்கிய மலர்.’ஒரு மக்களினத்தின் இருப்பு என்பது முதன் முதலாக அதன் பூர்வீகமான நிலம் சார்ந்தது. நிலத்தின் மீதிருந்தே  மக்களினமும் மொழியும் கூட கட்டமைவாகின்றன.  நிலத்தைத் தேடும் நெஞ்சுகளின் வலியை எப்படி விளக்கிட முடியும்? ஆனால் அத்தேடலின் மூர்த்தண்யத்தை  நாம் அடையாளப்படுத்த முடியும்.  அதன் வீச்சை கோடி காட்ட முடியும். […]