தோனி – நாட் அவுட் வருடிச்செல்லும் மயிலின் இறகினையொத்த இசையைப்பற்றி இப்போதுதான் ரசித்தகணத்திற்குள் இன்னுமொரு கூக்ளி ராஜா சாரிடமிருந்து “தோனி” வழியாக.முதலிலேயே சொல்லிவிடுகிறேன் , நீங்கள் ஒரு “நெஞ்சத்தைக் கிள்ளாதே”வையோ “மூடுபனி”யையோ அல்லது ஒரு “முள்ளும் மலரும்” போன்ற இசையை எதிர்பார்த்து இங்கு வந்திருப்பீர்களானால் உங்களை ராஜா இந்தத்தடவை திருப்திப்படுத்த மாட்டார் என்றே சொல்லுவேன்.கொஞ்சம் வித்தியாசமாக, கதைக்களனுக்குப் பொருத்தமான இசையாகத்தான் தோன்றுகிறது எனக்கு இந்த “தோனி-நாட் அவுட்”-ன் பாடல்கள் அனைத்தும்.அதிகப்பாடல்களும் இல்லை மொத்தமே நான்கு பாடல்கள்.அனைத்தும் ஒவ்வொரு […]
சித்தார்த் நடித்து, இந்தியில் ஸ்ட்ரைக்கர் என்றொரு படம் வந்தது. சுமாரான வெற்றி என்று சொன்னார்கள். அதேபோல் இதுவும், தெருவில் காரம்போர்ட் விளையாடுபவர் களைப் பற்றிய படம். சீனிவாசபுரத்தில், குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிக்கும், கம்பி மேஸ்திரி பொண்வண்ணன், அவரது நண்பர்கள் லிவிங்ஸ்டன், மயில்சாமி, அவர் மனைவி லட்சுமி. பொன்வண்ணனுக்கு காரம் விளையாடுவதில் ஆர்வம். கூடவே இருக்கும் நண்பர்களுக்கு, அதற்குப்பின், வென்ற பணத்தில் தண்ணியடிப்பதில் விருப்பம். அனாதையான சிறுவனை தத்தெடுக்கும் பொன்னு, அவனை எப்படி தன்னைப்போலவே தென்னிந்திய […]
டர்ட்டி பிக்சர் வித்யா பாலன் அளவிற்கு பெயர் வாங்கித் தருமா என்று தெரியாது, ஆனால் சோனியா அகர்வாலுக்கு இது செகண்ட் இன்னிங்ஸைத் துவக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு நடிகையின் டைரியைக் கொண்டு கதையை நகர்த்தும்போது, கொஞ்சம் ஷகிலாத் தனமான காட்சிகள் வைத்தால் கூட தவறில்லைதான். ஆனால் அதைக்கூட காட்டாத இயக்குனரின் கண்ணியத்தைப் பாராட்ட வேண்டும். இந்தப் படத்துக்கு திரை உலகத் திலிருந்து ஏகத்துக்கு கண்டனம் வரலாம். வி. சேகரின் ‘ நீங்களும் ஹீரோதான் ‘ படத்துக்கு அப்படித்தான் […]
சென்னையின் மெரினா கடற்கரை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தைத் தருகிறது. ஒரு முறை என் தம்பி தொலைந்து போய் கிடைத்ததும் அந்த மெரினா கடற்கரையில் தான். அந்த அரை மணி நேர, அரையிருட்டுத் தேடல், ஒரு திகில் அனுபவம். பாண்டிராஜுக்கு வேறு களம். சிறுவர்கள் மீது அக்கறை கொண்டவராக, பசங்க படத் தில் கிடைத்த பெயரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருக்கிறது அவருக்கு. கிளீன் மூவி கொடுக்க வேண்டும் என்கிற லட்சியமும் அதில் சேர்ந்து விடுகிறது. […]
சமஸ்கிருதம் 53 இந்த வாரம் रुचिवाचकाः शब्दाः (rucivācakāḥ śabdāḥ) அதாவது சுவைகளைக் குறிப்பிடும் சொற்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை உரத்துப் படிக்கவும். लवणम् (lavaṇam) உப்பு जम्बीरम् (jambīram) எலுமிச்சம்பழம் चाकलेहः (cākalehaḥ) சாக்லேட் मरीचिका (marīcikā) மிளகாய் कारवेल्लम् (kāravellam) பாகற்காய் आमकलम् (āmakalam ) நெல்லிக்காய் लवणस्य रुचिः लवणः। (lavaṇasya ruciḥ lavaṇaḥ |) உப்பின் சுவை உப்பு. जम्बीरस्य रुचिः आम्लः। (jambīrasya ruciḥ āmlaḥ |) […]
நான், சவுந்தர், ராமன், ஜானி, இந்த நாலு பேரும் ஒரு கேங்க். எங்களுக்குள் இரண்டு ஒற்றுமைகள். ஒன்று நால்வரும் ஒரே காலேஜ். இன்னொன்று நாங்கள் எல்லோரும் நாகேஷ் வெறியர்கள். அந்த காலத்திலேயே ‘ காதலிக்க நேரமில்லை படத்தை பன்னிரெண்டு தடவை ( இப்போது இருபதைத் தாண்டியிருக்கும்) பார்த்து பரவசமானவர்கள் நாங்கள். இத்தனைக்கும் அது நாகேஷின் முதல் படம். எங்களுக்கு அந்தப் படத்தில் வரும் நாகேஷின் வசனங்கள் ( சித்ராலயா கோபுவின் வசனங்கள் என்றாலும் ) மனப்பாடம். அதே […]
ஒளிப்பதிவாளர் மகிபாலன் தேசிய விருது பெற்ற ‘ வேதம் புதிது ‘ கண்ணனுக்குத் தெரிந்தவர். அவருடைய ஓளிப்பதிவில் வந்திருக்கிறது இந்தப் படம். அதனால் அன்பின் அடிப்படையில் நான், கண்ணன், முகமது அலி, சென்னை அண்ணா தியேட்டரில் நேற்று படம் பார்த்தோம். கிட்டத்தட்ட பாதி திரையரங்கு நிறைந்திருந்தது ஆச்சர்யம். இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று நேற்று குடியரசு தினம். விடுமுறை. பொங்கல் பொருட்காட்சிக்கு போக விரும்பாதவர்கள், நேரத்தைச் செலவிட, அங்கு வந்திருக்கலாம். அவர்கள் தேனி மாவட்டக்காரர்களாக இருந்தால், ஊர் […]
தரணியின் ‘ ஒஸ்தி ‘ க்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை இந்தப் படம். என்ன.. மாதவன் இருப்பதால், படம் கொஞ்சம் பிழைத்துக் கொள்கிறது. மாதவன் திரை உலகை விட்டு விலக நேர்ந்தால், அனுபம் கேர் மாதிரி, யதார்த்த நடிப்பிற்கு ஒரு பள்ளி ஆரம்பிக்கலாம். நிறைய மாணவர்கள் கிடைப்பார்கள் இப்போதிருக்கும் நடிகர்களிடையே.. இனிமேல் பாக்ஸ் ஆபிஸில், பட்டையைக் கிளப்ப, படம் எடுக்க விரும்பும் தோற்ற இயக்குனர்கள், ஆங்கில டிவிடி படங்களைப் பார்க்க வேண்டாம். லிங்குசாமியிடம் போனால் போதும். அவரே […]
அடிகளாசிரியர் அவர்களின் கோட்டோவியம் அடிகளாசிரியர் (குருசாமி) (17-04-1910 – 08-01-2012) தமிழறிஞர் ம்ற்றும் தமிழ்ப்பேராசிரியர் அன்புடன் சேது வேலுமணி செகந்திராபாத்
எந்த வேலைக்கும் போகாமல், பகட்டாக உடையணிந்து, ஊரை வலம் வரும் விதார்த். பணத்தேவைக்கு, சிறு சிறு திருட்டுகளைச் செய்து, அக்காவிடம் அடி வாங்குபவர். மூளை சரியில்லாத தங்கை. கோயில் நிலத்தைக்கூட வளைத்துப்போடும் வில்லன். புதுமுகம் சஞ்சிதா, பக்கத்து ஊர் டுடோரியல் மாணவி, விதார்த்தின் காதலி. கொட்டாவி வருகிறதா? பார்த்து பார்த்து புளித்த கதை போல இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா? உங்கள் ஊகம் சரிதான். ஆனால் படம் ஏதோ பரவாயில்லை என்று ஆக்குவதற்கு இரண்டு விசயங்கள் பயன்பட்டிருக்கின்றன. ஒன்று, […]