இலங்கை

  (1)   என்ன ஆனான் அவர்களிடம் அவன்?   காணவில்லை அவன்.   ’காணாமல் போய் விட்டானெ’ன்று ஏதோ தெரியாததைத் தெரிவிப்பது போல் தெரிந்ததே தெரிவிக்கப்படும்.   கரைந்த கனவா அவன்?   பொய்த்தவர் முதலில் தம்மிடம் தோற்றுப் போனவரென்று…

டிஷ்யூ பேப்பர்

    ஆழ்ந்த பரிமாற்றம் நிகழவில்லை ஒரு தலைப் பட்சமாகக் கொட்டித் தீர்த்தாள்   சிறகுகளின் பெருஞ் சுமை வலியை அவளிடம் பகிர முடியவில்லை   நுண்ணுணர்வில்லாதவன் நீ காகிதங்கள் மட்டுமே பூக்கும் கருவேல மரம் நீ   தழும்புகளைக் காயங்களாக்கவா…

மக்களாட்சி

    வாக்கு வெள்ளத்தில் முறிந்து வீழ்ந்தன சில நூற்றாண்டு மரங்கள் இடிந்துவிட்டன சில கொத்தளங்கள்   வெள்ளமும் வெயிலும் சுழற்சி மையத்தண்டாக மக்களாட்சி   ஆட்காட்டி விரல்களால் மாறியிருக்கிறது ஆட்சித் தோட்டத்தின் அதிகாரங்கள்   சில புதிய மரங்கள் சேர்க்கப்படலாம்…

நுரைத்துப் பெருகும் அருவி

கண்ணோரம் காக்கைக் கால்களாய்ச் சுருங்கி விரிந்து  கிடக்கின்றன காட்டு விருட்சங்கள்.. நுரைத்துக் கிடக்கும் அருவி பெருகி வீழ்கிறது அந்தரங்கம் திறந்த மனமாய். தவளைகள் முணுமுணுப்போது குதித்துச் செல்கின்றன கரையோரம். மினுமினுப்போடு  தாவித் தாவி நீந்திக் கொண்டிருக்கிறது நதி. முங்கிக் குளித்துக் கொண்டிருந்தன…

இதோ ஒரு கொடி

ருத்ரா இ.பரமசிவன் ஒரு கொடியில் முப்பட்டையாய் மூணு வர்ணம். ஒரு கொடியில் நெடுக்கில் பட்டைகள். வேறெரு கொடியில் நடுவில் வட்டம். இன்னொன்றில் நீளப்பட்டைகள் நட்சத்திரங்களுடன். ஒன்றில் சூரியன். மீண்டும் ஒன்றில் அரிவாள். சில‌ முக்கோணத்தொகுப்புகளுடன். அடுத்ததாய் பிறைநிலாவுடன். ஒன்றில் காலில் கட்டிய…

மராமரங்கள்

ருத்ரா இ.பரமசிவன்   மறைந்து கொள்ளத்தானே வேண்டும் உனக்கு. இதையே மராமரங்களாக்கிக்கொள்.   தெய்வம் காதல் சத்தியம் தர்மம் அதர்மம் ஜனநாயம் ஆத்மீகம் நாத்திகம் சாதி மதங்கள்.   எப்படி வேண்டுமானாலும் பெயர் சூட்டிக்கொள் மனிதனே! இவற்றிலிருந்து கள்ளிப்பால் சொட்டுவது போல்…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 75 வேர்களும், இலைகளும் தனித்தே உள்ளன !

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 75 வேர்களும், இலைகளும் தனித்தே உள்ளன !

(1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Roots & Leaves Themselves Alone) வேர்களும், இலைகளும் தனித்தே உள்ளன !   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா        வேர்களும், இலைகளும் தமக்குள் தனித்தே உள்ளன ! மனிதர்க்கும்  வனிதை யர்க்கும் நறுமணங்கள்,…

கையறு சாட்சிகள்

  சத்யானந்தன்   உயர்ந்த கட்டிடங்கள் மெலிந்த கைகளால் எழுப்பப் படவில்லை?   பலமாடிகள் கடக்கும் தசை வலிமை தேவையில்லை   மின் தூக்கி எண் வழி தளங்களுக்கு இட்டுச் செல்லும்     மின் தூக்கியில் முன்னே நுழைந்தது யார்…

தனியே

    இருட்டுப் போர்வையைத் தரை போர்த்திக் கொள்கிறது   எம்மை அணைக்க யாரும் இல்லையென இலைகள் கேவின   வியர்வை ஆறுகள் மறையும் மந்திரம் தேடினர் மாந்தர்கள்.   அணு அனல் நீரால் வரும் சக்தி வாசல்களும் அனல்கள் கக்கின…

விளைவு

ரிஷி வலியறியா மனிதர்களின் விகார மனங்கள் விதவிதமாய் வதைகளை உருவாக்கும்; வண்ணமயமாய் வக்கிரங்களைக் காட்சிப்படுத்தும். சின்னத்திரையிலிருந்து வழிந்தோடும் உதிரம் வீடுகளில் வெட்டப்படும் தலைகளில் இரண்டறக் கலக்கின்றது. மெகா தொடர்களில் தொலைந்துபோய்க்கொண்டேயிருக்கும் குழந்தைகள் கடற்கரை மணற்துகள்களை எண்ணிவிடக்கூடியதாக்கிவிடுகிறார்கள். அலைவரிசைகளெங்கும் யாராவது யாரையாவது அறைந்துகொண்டேயிருக்கிறார்கள்…