அந்தப் பாடம்

பூவைப் பறிக்கிறோம், செடி புன்னகைக்கிறது மறுநாளும்.. காயைக் கனியைக் கவர்கிறோம், கவலைப்படவில்லை காய்க்கிறது மறுபடியும்.. கிளைகளை ஒடிக்கிறோம், தளைக்கிறது திரும்பவும்.. தாங்கிக்கொள்கிறது புள்ளினத்தை- ஓங்கிக்கேட்கிறது பலகுரலிசை.. அட மரத்தையே வெட்டுகிறோம், மறுபடியும் துளிர்க்கிறதே ! மீண்டும் வெட்டாதே .. மனிதனே, உனக்கு…

புதிய பழமை

எதுவும் புதிதல்ல. சூ¡¢யன் சொடுக்கும் காலச் சுழற்சியில் பழையன எல்லாம் புதிதாய்த் திரும்பும். பெருவெளியில் பொதிந்த வேதமும் நாதமும் கழிக்க முடியாத பழையன தானே! கழிதல் என்பது கணிதத்தின் சாயல். காலக் கணக்கில் மனிதன் கழிவதும் மனிதக் கணக்கில் காலம் கழிவதும்…

சிறகின்றி பற

கனவுகளே காயம்பட்ட நெஞ்சத்தை வருடிக் கொடுக்கும் மயிற் பீலிகளே வேஷத்துக்கு சில நாழிகை நேரம் விடுதலை கொடுக்க வைக்கும் வடிகால்களே செலவின்றி தேவலோகத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் இன்பத் தேன் ஊற்றுகளே இறக்கையின்றி பறக்க கற்றுக் கொடுக்கும் உனது மாயாஜால தந்திரங்களே…

அறிதுயில்..

ஆயிரம் முறை சொல்லியனுப்பியும் இனிப்புடன் வரமறந்த தந்தையின் மீதான நேற்றைய கோபத்தை ஒரு கண்ணிலும்; .. உடன் விளையாட வரமறுத்த அன்னையின் மீதான இன்றைய கோபத்தை இன்னொரு கண்ணிலும் சுமந்துகொண்டு; கட்டிலிலேறி கவிழ்ந்துகொள்கிறாய்.. என்னுடைய எல்லா சமாதானமுயற்சிகளையும் புறந்தள்ளிவிடுகிறது…. உன்னுடைய செல்லக்கோப…

மழையைச் சுகித்தல்!

நள்ளிரவு மழை நண்பகல் கழிந்தும் பெய்தலை இன்னும் நிறுத்தவில்லை. எழுதற்குப் பிரியமின்றிப் புரண்டு படுத்தலிலும், பொழியும் வான் பார்த்திருப்பு கழித்துக் கிடப்பதிலும் தானெத்தனை களி! வினாத்தொடுத்து புரிதலை வினாக்களாக்குவதில் பேரவாக் கொள்ளும் மனது! இயற்கை நோக்கி, வாசித்து, கனவில் மூழ்கி இளகி…

கரைகிறேன்

கரைகிறேன் தண்ணீரில் அழுவதை போன்றுதான் தனிமையில் நான் அழுவது என்னைத்தவிர எவருக்கும் தெரியபோவதில்லை தண்ணீரில் கண்ணீர் தன் சுவையிழப்பதை போன்று தனிமையில் நானும் சுயம் இழந்துவிட தனிமையும் கண்களும் தாமரையை இரசிக்க பழகட்டும் . அ.இராஜ்திலக்

செதில்களின் பெருமூச்சு..

* பிடித்து உலுக்கும் கனவின் திரையில் அசைகிறது உன் நிழல் நீயுன் தூண்டில் வீசிக் காத்திருக்கிறாய் என் உரையாடலின் உள்ளர்த்தம் சிக்குவதற்கு மரப்பலகைகள் வேய்ந்த பாதையில் ஈரம் மின்னும் அந்தியின் இளமஞ்சள் நிறம் இந்த அறையெங்கும் பரவிய ரகசியத்தின் சங்கேதக் குறிப்புகளை…

பிணம் தற்கொலை செய்தது

அசைவற்று கிடந்தது பிணம் அதன்மீது அழுகைஒலிகள் தேங்கியிருந்தன வார்த்தைகளில் சொல்லமுடியாத துயரத்தின் ரேகை படர்ந்திருந்தது. எழுந்து நடந்து செல்ல முடியாதென்பது பிணத்திற்கு தெரிந்திருக்க கூடும் தன்னை எரிப்பதற்கோ அல்லது புதைகுழியில் அடக்குவதற்கோ எதுவாக இருப்பதற்கும் தயாராயிருந்தது. பிணங்களோடு வாழ்தலில் உள்ள ஆர்வம்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகமும் -2)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "என் எளிய தோழனே ! துயரை மிகுந்து உண்டாக்கும் வறுமை மட்டுமே நியாய அறிவுக்கு வழிகாட்டும் ஆதாரம் என்றும், வாழ்க்கை முறையை உணர்விக்கும் புரிதல் என்றும் நீ…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கீதம் (கவிதை -41)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா அறுபது ஆண்டுகளாக மறதி எனக்கு ஒவ்வொரு நிமிடமும் ! என் மீதுள்ள இந்த நோக்கம் நின்ற தில்லை ! வேகம் தணிவ தில்லை ! எதற்கும் தகுதி…