ஒற்றை எழுத்து

நீ அறுதியிட்டு உச்சரித்த ஒற்றை எழுத்தில் ரத்தம் கசிகிறது குத்திக் கிழித்த காயத்தின் வலியென இந்த அவமானம்.. ***** --இளங்கோ

முதுகில் பதிந்த முகம்

பால்கனியில் தொற்றியபடி கண்மறையும் வரை கையாட்டி உள்வந்து படுக்கை விரிப்புகளை உதறிச் செருகும்கணம் இரவு ஊடலில் திரும்பிப் படுக்க முதுகில் பதிந்த முகம் மீசையொடு குறுகுறுக்க வண்டியில் செல்லும் உன் முதுகில் என் மூக்குத்தியின் கீறல் சற்றே காந்தலோடு.

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)

  மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       "நான் அவனுக்குக் கிண்ணம் நிறைய ஆனந்தத்தை அளித்தேன்.  ஆனால் அவனோ அதைத் தரையில் கொட்டி விட்டான், அவனது அறியாமையால் !  பிறகு…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       இசை அரங்குக் குழுவில் எல்லோ ரையும் விட அதிட்ட வாதி யார் ? நாணல் தட்டை தான் ! அதன் வாய் உன்னிதழ்…

புள்ளி கோலங்கள்

என்னை சுற்றி அடுக்கு அடுக்காய் வரிசை கிரமத்தில் புள்ளிகள்.     கோலம் துவங்கும் நேரத்தில் புள்ளிகள் நகர்கின்றன.. மத்திய புள்ளியாகிய நானும் அடுத்த அடுக்குக்கு,பக்க அடுக்குக்கு கீழ் அடுக்கின் கடைபுள்ளியாகி கோல பலகையிலிருந்து விழுவோமோ என்ற அச்சத்திலிருந்து மீண்டும் நேர்வாட்டில்…

தியாகச் சுமை:

  நகர போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி நகர அனுமதிக்கும் விளக்கின் பச்சைக்காகக் காத்திருக்கயில்…   பல வேலை நிமித்தம் சிலர் சாலை கடந்தனர்!   கடந்தவர்களில் ஆண்களோ அலைபேசி அடிமைகளாய் தலை சாய்த்து முடங்கி நடக்க   பெண்களில் பத்துக்கு எட்டுபேர் எதையாவது…

இரண்டு கவிதைகள்

01 பள்ளிப் பேருந்துக்கு வழியனுப்ப யாரும் வராத இன்னொருவனைக் காட்டி எப்போதிருந்து நானும் அப்படிப் போவேனென்று கேட்ட மகனுக்கு எப்படி சொல்ல எனக்கு மட்டும் தெரியும் அவன் கண்களின் ஏக்கத்தை. O 02 தவறுதலாய் நான் அழுத்திய தளத்தின் எண் தனக்கானது…

கட்டங்கள் சொற்கள் கோடுகள்

கட்டங்கள் வரைந்து சொற்களை உள்ளே இட்டேன் அவற்றுக்குள் தொடர்பு ஏற்படுத்த கோடுகள் இழுத்தேன் கட்டங்கள் ஒன்றோடொன்று இணைந்தன சொற்கள் அடைபட்டுப்போய் பேச மறுத்தன கட்டங்களை நீக்கி விட்டு சொற்களையும் கோடுகளையும் இணைத்து விடலாம் என எண்ணினேன் கட்டி வைத்த சொற்களும், இணைக்க…

முதுகெலும்பா விவசாயம் ?

நல்லா செழித்து வளர்ந்துடுச்சு இந்தத் தலவாசல் வேப்ப மரம் .. போன வருஷம் மழை இல்லாமக் காஞ்சு கிடந்துச்சு இது தான் போக்கிடம் எனக்கும் மேக்காலவளவு  குப்புசாமிக்கும் ... மோட்டுவளைய பாத்துகிட்டு எவ்ளோ நேரம்தான் கட்டயக் கிடத்துறது ? ஆடுகன்னுகளப் பட்டில அடைச்சதுக்கப்பறம்…

சின்னாண்டியின் மரணம்

(இது வெறும் கற்பனை மட்டுமே. இருந்தோர், இறந்தோர் அல்லது இறக்கவிருப்போர் எவரையும் குறிப்பிடுவது அல்ல) எல்லோரையும் போலவே ஒருநாள் சின்னாண்டியும் செத்துப் போனார்.   அல்லோகலப்பட்டது புழுதிக்காடு.   செத்த சின்னாண்டி, சிலபேருக்குத் தலைவர் பலபேருக்குப் பகைவர். பெயருக்கு நேரெதிராக பெரும்…