Posted inகவிதைகள்
உறைந்திடும் துளி ரத்தம்..
* உன் துயரத்தின் சாயலை நகலெடுத்துக் கொள்ளும்படி உத்தரவிடுகிறாய் பிடி நழுவும் குறுவாளின் கூர் முனையில் உறைந்திடும் துளி ரத்தம்.. ஊடுருவி மீண்ட துரோகக் கணத்தின் சாட்சியென துருப்பிடித்துக் காத்திருக்கிறது உன் வரவுக்காக ******* --இளங்கோ