முகவுரை உலக அறிவின் சாரத்தையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி, ஐந்து விதமான தந்திரங்களைக் கொண்டு சிந்தையைக் கவரும் ஒரு சாஸ்திரத்தை விஷ்ணுசர்மன் வகுத்தான். இது எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம். தெற்குப் பிரதேசத்தில் மஹிளாரூப்யம் என்ற நகரம் ஒன்றிருக்கிறது. அதை அமரசக்தி என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் உலக அனுபவ சாஸ்திரத்தில் தேர்ச்சி மிகுந்தவன். வலிமை பொருந்திய வேந்தர்கள் பலர் அவனை முடி தாழ்த்தி வணங்குவார்கள். அப்படி வணங்குகையில் அவர்கள் அணிந்த மணி மகுடங்களில் பதித்த ரத்தினங்கள் […]
1. ஸ்கார்பரோ நூலகக் கிளையொன்றில் பன்மொழிப் பிரிவினில் தமிழ் நூல்களைத் தேடிக்கொண்டிருந்த பானுமதியின் கவனத்தை “பானு” என்ற வியப்புடன் கூடிய ஆண் குரலொன்று கலைத்துவிடவே குரல் வந்த திசையினை நோக்கித் திரும்பினாள். அவளால் நம்பவே முடியவேயில்லை. எதிரிலிருந்தவன் சேகரனேதான். எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவனை அவள் சந்திக்கின்றாள். குறைந்தது இருபத்தைந்து வருடங்களாகவாவதிருக்கும். காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடி விட்டது. நாட்டு நிலைமை காரணமாகப் புலம்பெயர்ந்து வந்தது நேற்றுத்தான் போலிருக்கிறது. அதற்குள் இத்தனை வருடங்கள் கழிந்தோடி விட்டனவா! வியப்பு […]
ப்ரிட்னி ஸ்பியர்ஸ் பாடிக்கொண்டிருந்தாள் எம்.டீவியில் “Bombastic love , So Fantastic ” என்று சத்தம் போட்டுக்கொண்டு., “அந்த வால்யூமத்தான் கொஞ்சம் கொறக்கிறது , உனக்கு என்ன காது செவிடா ? டீவி முன்னாலதான ஒக்காந்துருக்க? ” உள்ளேயிருந்து ஸ்வேதா இரைந்த சத்தம் அவனுக்கு கேட்கவேயில்லை. “Where I’m Completely yours and you are mine ” விறுவிறு வென வந்தவள் கையிலிருந்த ரிமோட்டை பிடுங்கி வால்யூமைக்குறைத்தாள். ” ஏன் நல்லாத்தான பாட்றா ?, கேக்கவிட்டா […]
கிளிப்பச்சை நிறத்தில் அந்த வாசனைக் குப்பி. கண் கொட்டாமல் பார்த்தால் ஒரு கிளி நெல் கொரிப்பதுபோல் இருக்கும். அத்தனை அழகு. ஒப்பனை மேசையில் அருகில் இருக்கும் உயரமான அலமாரித் தட்டில்தான் சதாசிவம் தன் சொந்த உபயோகப் பொருள்களை வைத்திருப்பார். அதில் அந்த வாசனைக் குப்பியும் ஒன்று. மகள் லதாவுக்கோ மனைவி சரோவிற்கோ அது எட்டாது. எட்டவேண்டிய அவசியமுமில்லை. சதாசிவம் வீராசாமி சாலையில்தான் வசிக்கிறார். சனி ஞாயிறுகளில் வெளியே செல்வதைத் தவிர்ப்பார். வார நாட்களில் ஏதாவது ஒரு நாளில் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நமது குடியரசு மெய்யான தில்லை ! ஆதிக்க அரசாங்கத்துக்கும் குடியரசுக்கும் இடையே முரண்பாடு இல்லை. எல்லாவித அரசாட்சி முறைகளும் ஆதிக்கத் தன்மை கொண்டவைகளே ! எத்தனை அளவுக்குக் குடியரசு உயர்ந்ததாய் உள்ளதோ அத்தனை அளவுக்கு ஆதிக்க வன்மையும் மிகையாய் உள்ளது. பொதுமக்களும் அவ்விதக் குடியரசுக்குப் பின்னணியாக இருந்தால், ஸார் (Tzar) மன்னர் அதிகாரத்தை விட இன்னும் கோரமாக ஆதிக்கம் ஆட்சி […]
“அம்மா இருட்டா இருக்கு”, ரமணி தன் அன்னையின் இடுப்பை கட்டி அணைத்துக் கொண்டான். “விளக்கு ஏத்த எண்ணெய் இல்லடா ராஜா. அம்மாவை கட்டி பிடிச்சுக்கோ; பயம் போயிடும்” “உனக்கு தான் தெரியும் இல்ல? நான் சின்ன வயசிலிருந்து இப்படி தான்-ன்னு. எண்ணெய் வாங்கி வெக்க வேண்டியது தானே?” ஒரே நேரத்தில் பயமும், கோபமும்; விசித்திர சேர்க்கை தான். “இந்த வாரம் வேலை கம்மி டா. கஞ்சிக்கே சரியா போச்சு. நீ ஆம்பள புள்ள! நம்மள மாதிரி ஏழைங்களுக்கு […]
கணேசன் விழுந்தடித்துக் கொண்டு சாமியார் மண்டபத்தை அடைந்த போது, தியாகராஜன் வந்திருக்கவில்லை. அவனே அரை மணி லேட் என்றால் தியாகு அவனை விட மோசமாக இருக்கிறானே என்று சுற்று முற்றும் பார்த்தான். தியாகுவின் சுவடே காணோம். மண்டபத்தைச்சுற்றி மரங்களும் கொடிகளும் செடிகளும் ‘ பசேல் ‘ என்று பரவிக் கிடந்தன. சாமியார் மண்டபத்துக்கு இடது புறமும், வலது புறமும் வயல்கள் வீசிக் கிடந்தன. காற்றில் ஆடிய நெற் பயிர்களின் பச்சை கண்ணை வந்து அடித்தது. சாமியார் மண்டபத்தில் […]
நூல் வரலாறு உலக இலக்கியத்தில் முன்வரிசையில் முதலிடம் பெற்று விளங்குவது பஞ்சதந்திரம். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1859-ம் ஆண்டில் இந்நூலை ஜெர்மன் மொழியில் தியோடோர் பென்•பே (Theodor Benfey) அவர்கள் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்துதான் பஞ்சதந்திரத்தின் வரலாற்றை ஆராய்வதில் பல அறிஞர்கள் ஈடுபட்டனர். பல்வேறு நாடுகளின் இலக்கியங் களை ஒன்றோடு ஒன்று ஒப்புநோக்கி ஆராயும் விஞ்ஞானத்துறை என்பதே இதிலிருந்துதான் ஆரம்பமாயிற்று என்று கூறப் படுகிறது. இந்நூலின் வரலாற்றை ஆராய்ந்த அறிஞர் யோஹான் ஹெர்டல் அவர்கள் இது […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “என் பீரங்கி வெடி மருந்து எதிரிகளைக் கொல்வது ! ஏராளமாய்க் கொல்வது ! அது என் நெறிப்பாடு ! ஆயிரம் ஆயிரம் பேரைக் கொல்லாமல் போர் ஏது ? உலகில் சமாதானம் ஏது ? எமது போர் நெறியே எமக்கு வணிக நெறி ! ஒரு பீரங்கி வெடி நூறு பேரைக் கொன்றால், வெடி மருந்து நல்முறையில் செலவாகியுள்ளது என்று […]
“ஓடு! மேல ஓடு! நிக்காதே”, நந்தினியின் தோளைப் பற்றித் தள்ளினார் வாசுதேவன். “நீங்களும் வாங்க. கிட்ட வந்திடுச்சு. வாங்க சீக்கிரம்”, படபடப்போடு அழுகையை கலந்தது ஒரு காரமான ரசத்துடன் வெளிவந்தது நந்தினியின் குரலில். தன் கணவர் கட்டளையை மீறாமல் கையில் இரு தலையணை மற்றும் ஒரு பாயுடன் மாடிக்கு ஓடினாள். இரண்டு ஆறறிவு ஜீவன்களையும், ஒரு ஐந்தறிவு ஜீவனையும் காப்பாற்றிவிட்டு அஃறினைகளை அடைகாக்க வீட்டின் உள்ளே ஓடினார். எல்லா திசையிலும் பரபரப்புடன் ஓடித் தேடியும் ஒன்றும் சிக்கவில்லை. […]