ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் ” நெய்தல்” ( கடலும் கடல் சூழ்ந்த நிலமும்)- பொன் விழா நிகழ்ச்சி

This entry is part 14 of 14 in the series 5 ஏப்ரல் 2015

  பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் தலைமையில் சப்தஸ்வரம் கோபால் குழுவினரின் இன்னிசை மழையில் நகைச்சுவையுடன் ஒரு கோலாகலக் கொண்டாட்டம். 18 பிப்ரவரி 2017- ஹாங்காங் நாம் சொங்கில் உள்ள ஸர் எல்லீஸ் கதுரி வளாகத்தில் 600 க்கும் மேற்பட்ட தமிழ்ப் பார்வையாளர்களுடன் பிற தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட அன்பர்கள் கலந்துகொண்ட , கிட்டத்தட்ட 6 மணி நேரம் நடந்த விழாவினை இனிய மாலைப் பொழுதில் அனுபவித்து மகிழ்ந்தனர். தலைமை உரையை 50 ஆவது ஆண்டின் தலைவர் திரு.முஜிபுர் ரஹ்மான் நல்க, அன்று அங்கு கூடியிருந்த முன்னால் தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கிய பின் 50 ஆண்டு கால முக்கிய […]

அவநம்பிக்கையின் மேல் நம்பிக்கை

This entry is part 13 of 14 in the series 5 ஏப்ரல் 2015

  சேயோன் யாழ்வேந்தன் வீட்டுக் கூரையினின்று காகம் கரைந்தால் விருந்து வருமென்று அம்மா சொல்வதை நான் நம்புவதேயில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை நீ வருவாய் என்ற நம்பிக்கை இருக்கிறது காகத்தின் மேல் ஏன் மூட நம்பிக்கை வைக்க வேண்டும்? பொழுது சாயச் சாய நம்பிக்கையும்… வேறு வழியறியாமல் வாசலில் காகத்துக்கு சோறு வைத்தேன் சோற்றைத் தின்ற காகம் கூரையில் அமர்ந்தது அமைதியாக நீ வரும் நேரம் கடந்ததும் காகம் பறந்தது எனது நம்பிக்கையைப் பொய்யாக்கி நீ என்னை ஏமாற்றிவிட்டதாக […]

படிக்கலாம் வாங்க… “ வகுப்பறை வாழ்விற்கானப் பந்தயமா..” ஆயிஷா நடராசனின் “ இது யாருடைய வகுப்பறை “ : நூல்

This entry is part 12 of 14 in the series 5 ஏப்ரல் 2015

  கல்வித்துறை சம்பந்தமான பல நூறு விதை   நெல்களின் தொகுப்புகளிலிருந்து புது பரிமாணமான விதைனெல்லாய் இத் தொகுப்பை ஆயிஷா நடராசன் கட்டமைத்திருக்கிறார்.உலக வகுப்பறைகளை ஒரு பார்வை பார்த்து மூச்சுவிட்டுக்கொண்டு  நம்மைப் பற்றியும் கொஞ்சம் யோசித்திருக்கிறார்.ஆசிரியர் மாணவர் உறவு பற்றியும் அந்த உறவு இன்றைக்கு அச்சுறுத்தலாய் மாறி வருவதைப் பற்றிய அபாய பெருமூச்சுகளையும் இத்தொகுப்பு கொண்டிருக்கிறது அந்தப் பெருமூச்சு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தரும் நெருக்கடியில் அவர்களை பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக மாற்றுவதில் வெற்றி கொள்கிற தோல்வியடைகிற இந்தியச் […]

இந்திரனின் நெய்தல் திணை

This entry is part 1 of 14 in the series 5 ஏப்ரல் 2015

“கவிதை அனுபவம் என்பது அழகியல் பார்வை மட்டுமல்ல. சமகால அரசியல், மானுடவியல், சமூகவியல் இவை அனைத்தும் சேர்ந்திருக்க வேண்டும் . நான் இப்படி சொல்லும் போதெல்லாம் அப்படியானால் கவிதைக்கு அழகுத் தேவையில்லையா? என்று கேட்கிறார்கள் சில கவிதைப் பிதாமகன்கள். கவிதை வெறும் அழகியல் சார்ந்தது மட்டும் தான் என்றால் ப்ளாஸ்டிக் ரோஜாக்கள் வந்தப் பிறகு தோட்டத்து ரோஜாக்கள் தேவையற்றுப்போயிருக்கும். ப்ளாஸ்டிக் ரோஜாவில் அழகு உண்டு. மிக நேர்த்தியாக வண்ணங்களும் மென்மையும் பனித்துளியின் காட்சிப்படிமமும் செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும், ஆனால் […]

ஆத்ம கீதங்கள் –23 மாறியது மேலும் மாறும் ..!

This entry is part 2 of 14 in the series 5 ஏப்ரல் 2015

  [Change upon Change]   ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     ஆறு மாதம் முன்பு நீரோடியது நதியில் மல்லிகை மலரும் புதர்களுக்குள்; இங்கு மங்கும் நடந்து உலவினோம்; பனிமேல் படும் தடம் தொடர மாட்டார் ! நதி ஓரத்தின் புதர் வேலிக் குள்ளே காதல் சுதந்திரக் களிப்போடு போ ! கால் தடச் சத்தம் கேளா விடில் உறைந்து போன ஊமை நதியால், மலர்கள் […]

மிதிலாவிலாஸ்-8

This entry is part 3 of 14 in the series 5 ஏப்ரல் 2015

  தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மைதிலி படுக்கை அறையில் மேஜையருகில் உடகார்ந்திருந்தாள். அவள் கண்கள் மேஜை மீது பரத்தி வைக்கப் பட்டிருந்த தொழிலாளர்கள் கோ ஆப்ரேடிவே சொசைட்டி பாலன்ஸ் ஷீட்டை கவனமாக பரிசீலித்துக் கொண்டிருந்தன. போன வருடத்தை விட இந்த வருடம் மெம்பர்கள் கூடி இருந்தார்கள். கடன் கொடுத்த ரொக்கமும் கூடியிருந்தது. ஆனால் வசூல் ஆன கடன் தோகையும், வருமானமும் குறைந்து விட்டது. இந்த நிலை நீடித்தால் சீக்கிரத்திலேயே பொருளாதார சிக்கல்களை […]

பிரபஞ்ச உருவாக்கத்தில் பேபி ஒளிமந்தைக் கொத்துக்கள் வடிப்பில் கரும்பிண்டத்தின் பங்கு

This entry is part 4 of 14 in the series 5 ஏப்ரல் 2015

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.dailymail.co.uk/sciencetech/article-2622616/Virtual-world-tops-cosmic-charts-scale-rigor.html#v-3546173097001 http://phys.org/news/2012-03-astronomers-distant-galaxy-cluster-early.html http://www.dailymail.co.uk/sciencetech/article-2871298/The-best-sign-dark-matter-X-ray-signals-neighbouring-galaxies-emitted-one-universe-s-greatest-mysteries.html#v-3938513637001 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=eUA5sgAfY7g http://covertress.blogspot.ca/2009/06/stephen-hawking-asks-big-questions.html ++++++++++++++++ பிரபஞ்சப் பெரு வெடிப்பில் பிறந்து வளர்ந்த பேபி ஒளிமந்தைக் கொத்துகளை வடித்தது கரும்பிண்டம். ஒளிமந்தை மையக் கருந்துளை சுற்றி வட்டமிடும் விண்மீன்கள் கோடான கோடி ! கண்ணுக்குப் புலப்படா கரும்பிண்டம் வடித்த ஒளிமந்தை விண்மீன்கள் ஒருமைப்பட்டு ஐக்கியமாகி உள்ளன ! கரும்பிண்டம், வெப்ப முகில் உருவாக்கிய ஒளிமந்தைக் கொத்துகள் ஈர்ப்பு விசையால் கை கோர்த்துக் கொள்ளும் […]

தொடுவானம் 62. நேர்காணல்

This entry is part 5 of 14 in the series 5 ஏப்ரல் 2015

அதிகாலையிலேயே விடுதி பரபரப்புடன் காணப்பட்டது. காலை வணக்கம் சொல்லிக்கொண்டு குளியல் அறைக்குச் சென்றோம். அங்கு வரிசையாக ஒருபுறம் கழிவு அறைகளும் எதிர்புறம் குளியல் அறைகளும் இருந்தன.நுழைவாயிலில் நீண்ட கண்ணாடியும் தண்ணீர்க் குழாகளும் இருந்தன. அங்கு சில சீனியர் மாணவர்கள முகச் சவரம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் என்னைப் பற்றி விசாரித்தனர். ஆர்தர் என்னை தன்னுடைய உறவினர் என்று அறிமுகம் செய்தார், நேர்முகத் தேர்வில் தேர்வு பெறவும் வாழ்த்து கூறினார்கள். அவர்கள் அனைவருமே குளிக்கும் அவசரத்தில் இருந்தனர். […]

மிதவை மனிதர்கள்

This entry is part 6 of 14 in the series 5 ஏப்ரல் 2015

கன்னையா இன்று ஓய்வு பெறுகிறார். அறுபது வயது தெரியாத தோற்றமும், சுறுசுறுப்பும் அவரது அடையாளங்கள். எந்நேரமும் ஏதாவது செய்து கொண்டே இருப்பது அவரது வழக்கம். கன்னையா வுக்கு கொஞ்சம் போலச் சங்கீதம் தெரியும். சிறுவயதில் மிருதங்கம் கூட வாசிக்கக் கற்றுக் கொண்டார். ஓய்வுக்குப் பிறகு முறையாக பயிற்சி எடுத்தபின், மெல்லிசைக் குழுக்களிலோ அல்லது கர்நாடகச் சங்கீதக் கச்சேரிகளுக்கோ வாசிக்கலாம் என்று ஒரு எண்ணம் அவருக்கிருந்தது. கன்னையா ஒரு அரசாங்க அலுவலகத்தில் எழுத்தராக சேர்ந்து, இன்று ஒரு அதிகாரியாக […]

வைரமணிக் கதைகள் – 10 ஓட்டங்களும் இலக்குகளும்

This entry is part 7 of 14 in the series 5 ஏப்ரல் 2015

மூன்று பேர் மட்டும்தான் உட்கார்ந்திருந்தோம். நான், ஒரு வயது முதிர்ந்த மெடிகல் ரெப்ரஸென்டேடிவ். ஸ்டூலின் மீது உட்கார்ந்திருந்த அட்டெண்டர் பையன். மற்றபடி விஸிட்டர் பெஞ்ச் காலி.   நான் இங்கே வரும்போது மணி பன்னிரண்டரை. அப்போதே மெடிகல் ரெப்ரெஸன்டேடிவ் உட்கார்ந்திருந்தார்.   நுழைகிற சமயத்தில் நாலைந்து நோயாளிகள்தான் இருந்தார்கள். கடைசி நோயாளி டாக்டர் அறைக்குள் நுழையும் போது சரியாக மணி 12.55 ஏறக்குறைய நாற்பது நிமிஷம்.   என் வேலை மணி பார்ப்பதல்ல. ஸர்ஜிகல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ், புதிதாக […]