இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நம்பிக்கை இல்லாத வாழ்க்கை பாழ்பட்டுவிடும்.நம்பிக்கை அதீதமாகவும் இருப்பது துன்பந்தரும். ஆனாலும் மனிதனுக்கு நம்பிக்கை என்பது மிகவும் இன்றியமையாதது. இந்நம்பிக்கையில் பெரும்பாலோரிடத்த்து அதிகமாகக் காணப்படுவது தெய்வங்கள் குறித்த நம்பிக்கையே ஆகும். தெய்வ நம்பிக்கை மனிதன் மனிதனாக வாழ உறுதுணையாக அமைகிறது. இவ்விறை நம்பிக்கை வாழ்க்கையில் மனிதனுக்கு மனச் சோர்வு ஏற்படாது காக்கின்றது. தெய்வ நம்பிக்கை தளரிக்னறபோது மனிதன் தன்னம்பிக்கையை இழக்கின்றான். தன்னப்பிக்கையை மனிதன் இழக்கின்ற நிலையில் விரக்தியின் […]
இரவில் ஏன் தூங்கணுமென்பாள் சின்ன மகள். குருவிகள் தூங்குகின்றன என்பேன். நட்சத்திரங்கள் தூங்கவில்லையே என்பாள். நட்சத்திரங்கள் பகலில் தூங்குமென்பேன். ’இரவில் பின் ஏன் தூங்கணும்’- இன்னும் சமாதானமாகாள் சின்ன மகள். ’சரி காத்தால பள்ளிக்கூடம் போகணும் தூங்கு’ என்பேன் ’ குருவிகள் பள்ளிக்கூடம் போவதில்லையே’ என்பாள். ‘நீ குருவியில்லையே பாப்பா’ என்பேன் ’பள்ளிக்கூடம் போன குருவிகள் தாம் பாப்பாக்களாச்சா?’ என்று இன்னும் கேட்பாள் சின்னமகள். (2) சின்ன மகளுக்குக் கதை சொல்லி ’அம்மா கத சொல்லு’- சின்ன […]
பொன் சுந்தரராசு, சிங்கப்பூர் வானை முட்டிநின்றது ‘வெஸ்டின்’ கட்டடம். அறுபதாவது மாடியில் தன் அறைக் கதவைத் திறந்து கொண்டு நளினமாக நுழைந்து நாற்காலியில் அமர்ந்தாள் அஞ்சலி. ‘அஞ்சலி ச்சீவ் எக்சகுட்டிவ்’ பெயர்ப்பலகை கண்சிமிட்டி அவளை வரவேற்றது. வானத்தின் நீலத்தை வாரிக் கொண்டிருந்த கண்ணாடிச் சன்னல்கள் குளுமையை வாரி இரைத்தன. தொலைபேசியைக் கையில் எடுத்தாள். “பீட்டர் நீங்க வரலாம்..” என்று அழகான ஆங்கிலத்தில் அழைப்பு விடுத்தாள். அடுத்த நிமிடம் பீட்டர் அவள் முன். “குட்மார்னிங் மேடம்..” பீட்டர் பிரியத்தோடு […]
(கௌரி கிருபானந்தன்) தெலுங்கு மூலம் : ஸ்ரீ வல்லி ராதிகா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “இருந்தால் என்ன?” நான் அடிக்கடி பயன்படுத்தும் கேள்வி இது. இந்த வார்த்தைகளை நான் முதல் முதலாக எப்பொழுது உச்சரித்தேனோ, யாரிடம் எப்படி கற்றுக் கொண்டேனோ தெரியாது. ஆனால் எல்லோரையும் சிலையாக நிற்க வைக்கும் அந்தக் கேள்வியை பல சந்தர்ப்பங்களின் நான் பயன்படுத்தி இருக்கிறேன். எனக்கு நன்றாக நினைவு இருக்கும் சம்பவம், நான் நான்காவது வகுப்பில் படிக்கும் போது நடந்தது. […]
புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை வாய்மையால் காணப் படும் சென்னை வாழ்க்கை ஆறு மாதங்கள்தான். ஆனால் கிடைத்த அனுபவங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவுகளைச் சுமந்து வருகின்றன.. 1962 வரை, அதாவது பிள்ளைப் பிராயத்தி லிருந்து கிடைத்த பயிற்சிகள், அனுபவங்கள் எல்லாம் என் வாழ்க்கைப் பயணத்திற்கு அஸ்திவாரம். சென்னையில் வரலாற்று நாயகிகளை நேரில் பார்க்கவும் மகிழ்ந்தேன். பெண்ணின் முன்னேற்றத்திற்குப் பெண்ணின் உழைப்பை நேரில் கண்ட பொழுது வியந்தேன். அவைகளை விளக்கமாகப் பின்னர் கூறுகின்றேன். இப்பொழுது நான் சென்ற பயிற்சி […]
ஸ்ரீதரின் “ காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, உத்தரவின்றி உள்ளே வா, கலாட்டா கல்யாணம் “ போன்ற படங்களைப் பார்த்தவரா நீங்கள்? வின்சென்டின் ஒளிப்பதிவு, கோபுவின் நகைச்சுவை வசனங்கள், மெல்லிசை மன்னரின் பாடல்கள், கண்ணதாசனின் வரிகள், சிவாஜி, நாகேஷ், பாலையா, முத்துராமன், ரமாபிரபா, சச்சு போன்ற இந்திய சாப்ளின்களின் நடிப்பு என, நகைச்சுவையின் உச்சத்தைத் தொட்ட படங்கள். இப்போது அம்மாதிரி இல்லையே என்று பெருமூச்சு வருகிறதா? கொஞ்சம் நிறுத்தி வையுங்கள், ‘ ஒரு கல் ஒரு […]
சதாசிவ சாஸ்திரிகளுக்கு மேலுக்கு முடியவில்லை. போளூர் கிராமத்தில் இருந்த சொற்ப அந்தணர்களும் பட்டணம் போய் விட்டார்கள் பிழைக்க. மனைவியில்லாத சோகம், வறுமை, யாசிக்காத வைராக்கியம் அவரை இன்னும் படுக்கையில் கிடத்தி விட்டது. இருந்த ஒரே ஓட்டுவீட்டின் வாசற்திண்ணையில் யாராவது கொஞ்சம் அரிசி வைத்து விட்டுப் போவார்கள். அதையும் அவர் தொடமாட்டார்தான். ஆனால் வாழ வேண்டிய மகன் பசியில் துடிப்பானே என்று எண்ணி எடுத்துக் கொள்வார். கொடுப்பது யாரென்று தெரிந்தால் தான் யாசகம். தெரியாத போது இறைவன் கொடுத்ததாக […]
பொம்மை முடித்ததும் மீதம் களிமண்.. தலைக்குள்….! ————————————– களிமண் நிலம்.. புதையலானது.. குயவனுக்கு….! ————————————— தோண்டத் தோண்ட தீரவேயில்லை…. களிமண்..! —————————————- களிமண்ணும் நீரும். குயவன் கைகளின் அட்சயபாத்திரம்…! —————————————— களிமண்ணும்.. சக்கரமும்.. குயவனானான் .. பிரம்மன்..! ——————————————– சுட்டதில் எந்தப் பானை.. நல்லப் பானை..! ———————————————- மண் ஒன்றுதான்.. வடிவங்கள் மட்டும்.. வேறு வேறு..! ———————————————- குயவன் செய்த பானைகள்…. அனைத்தும் காலி தான்..! ————————————————– குயவனின் பொன்னாடை… களிமண்ணாடை..! —————————————————— நினைத்ததைச் முடிப்பவன்… குயவன்..! […]
ஆச்சு….புனிதாவும் அவளது கணவன் ராஜேஷும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசிக் கொண்டு…. இன்றோடு மூன்றாவது நாள் முடிகிறது…. …! இப்படியே ராஜேஷை விட்டுப் பிரிந்து போகவும் புனிதாவுக்கு மனதளவில் சம்மதம் தான்…குழந்தை அருண் மட்டும் பிறந்திருக்கவில்லையென்றால் …..அவளது முடிவு அதுவாகத் தான் இருந்திருக்கும்…என்ன செய்வது…?.சிலரின் வாழ்க்கை….எப்பவுமே இன்னொருவரின் கைகளில் தான் இருக்குமோ என்னவோ? பார்க்கலாம்…இந்த விஷயம் இன்னும் எவ்வளவு தூரம் போகும் என்று. எண்ணியபடியே….அருணை இடுப்பில் இடுக்கியபடியே…கிண்ணத்தில் பிசைந்த தயிர் சாதத்தை நார்த்தங்காயைத் தொட்டு எடுத்து […]
(2000ஆம் ஆண்டு மலர்ந்த போது எழுதிய கட்டுரை; மு.வ.நூற்றாண்டில் நினைவுகூரப்படுகிறது) முன்னுரை: தமிழ்ச் சமூகத்தில் ஆழ்ந்து சிந்தித்த தீர்க்க தரிசன எழுத்துக்கள், இலக்கியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த காலத்தை அடிக்கடி திரும்பிப்பார்த்து நெஞ்சம் விம்முவது தவிர்த்து, முறையாகச் சிந்தித்து இப்படி இருக்கும் என்றோ, இப்படி இருக்க வேண்டும் என்றோ நமக்குச் சொன்னவர்கள் அதிகம் இல்லை. ஜோசியர்கள் தனிப்பட்டவர்களுக்குச் சொல்லுகிறார்கள். சமுகத்திற்குச் சொல்லுவதில்லை. அரசு பட்ஜெட்டில் மட்டும் அடுத்த ஆண்டு என்றும் அடுத்த ஐந்தாண்டுகள் என்றும் எதிர்காலம் சிந்திக்கப் […]