நாவல்  தினை              அத்தியாயம் பதினொன்று        CE 300

This entry is part 6 of 6 in the series 23 ஏப்ரல் 2023

   மீண்டும் பறவைக் கூச்சலில் விழித்தெழுந்தது மலைப் பிரதேசம். வழமை போல் மிருகங்கள் பறக்கத் தொடங்கின. ஆற்றங்கரை  இருமருங்கும் படித்துறைகளில் உடுத்திருந்த துணி தவிரக் கொண்டு வந்த விழுப்பைத் துவைத்து அலசவும், ஆற்று வண்டல் எடுத்து, அழுக்கும், படிந்திருந்த உடல்வாடையும் போயொழியக் கையிடுக்கிலும், அரைக்கட்டிலும், காலிடுக்கிலும் வெகுவாகப் பூசி, குளிர்ந்த நதி நீரில் மனக் கசடும், எண்ணக் கசடும், உடல் கசடுமெல்லாம் உதிர்ந்து, தூய்மை மீட்டு வரவுமாக எல்லா வயதினரும், ஆண்கள் தனியாகவும், எதிர்ப் படித்துறையில் பெண்களும் […]

அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதைத் திறனாய்வுப் போட்டி

This entry is part 5 of 6 in the series 23 ஏப்ரல் 2023

வணக்கம் இத்துடன் குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதைத் திறனாய்வுப் போட்டி – 2023 முடிவுகளை இணைத்திருக்கின்றேன். உங்கள் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி. அன்புடன் குரு அரவிந்தன். ………………………………………….            குரு அரவிந்தன் வாசகர் வட்டம் சிறுகதைத் திறனாய்வுப் போட்டி–2023, முடிவுகள்               1ஆம்பரிசு  முகம்மது நூர்தீன் பாத்திமா றிஸாதா                                 ரூபா 30,000   காத்தான்குடி-06 இலங்கை 2ஆம்பரிசு  ஜூனியர் தேஜ்,  வரதராஜன்                               ரூபா 25,000    சீர்காழி, தமிழ்நாடு 3ஆம்பரிசு  ஹஜிஸ்தா நூரி முஹம்மட் ஹிராஸ்                                ரூபா 20,000   காத்தான்குடி-5 இலங்கை 4ஆம்பரிசு  பர்வின் பானு. எஸ்                                 ரூபா 15,000 தேனாம்பேட்டை, சென்னை 5ஆம்பரிசு  கலாதர்ஷினி குகராஜா                               ரூபா 10,000   நுஹேகொடை, இலங்கை                     20  பாராட்டுப்  பரிசுகள் – தலா ரூபா 5000         1. திருப்பதி. தீ,  புதுக்கோட்டை, தமிழ்நாடு […]

காணிக்கை

This entry is part 4 of 6 in the series 23 ஏப்ரல் 2023

மீனாட்சி சுந்தரமூர்த்தி.   சுவர்க்கடிகாரம் ஆறு முறை  அடித்து ஓய்ந்தது ஒரு வழியாக  லேப்டாப்பை  மூடிவிட்டு எழுந்தவன் , கண்களில் கைநிறைய நீரை  அடித்து முகம் கழுவிக் கொண்டு வந்தான். அம்மா தந்த  காபிக் கோப்பையை  வாங்கிக் கொண்டு ஹாலுக்கு வந்து சோபாவில்  உட்கார்ந்து காலை எதிரிலிருந்த டீபாயின் மீது நீட்டினான். அன்று வெள்ளிக் கிழமை  ஆனதால் காலையிலேயே அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு  வீடுகள் பலவற்றிலிருந்து  ஊதுபத்தி வாசனையோடு கிணுகிணுவென மணியின் ஒலியும் எழுந்தது.தெருவில் பூ , […]

இஃப்தார்

This entry is part 3 of 6 in the series 23 ஏப்ரல் 2023

தமிழ் முஸ்லிம்களெல்லாம் எறும்பென்றால் அந்தப் பள்ளிவாசல்தான் கரும்பு. ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகைக்கும் அதற்கு  முன் நடக்கும் இஃப்தார் என்கிற நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கும் உற்றார் உறவினர்களுடன் இந்தப் பள்ளியில் கூடுவதும் கலைவதும் என்றென்றும் நீங்காத நினைவுகள். அதற்குக் காரணம் தமிழ்முஸ்லிம்களின்   கலாச்சார வழக்கப்படி நடக்கும் நிகழ்வுகள், மிகச்சிறந்த மார்க்க அறிஞர்களால் தமிழில் நடத்தப்படும் இறைச் சொற்பொழிவுகள் ஆகியவைதான் மாலை நேரத்தில் 5 மணிக்கெல்லாம் நோன்புக்கஞ்சி விநியோகம் தொடங்கிவிடும். அதற்கும் முன்னதாகவே இஃப்தார் வேலைகள் ஆரம்பமாகிவிடும். பள்ளிவாசலின் […]

தெரியாதது 2

This entry is part 2 of 6 in the series 23 ஏப்ரல் 2023

ஆர் வத்ஸலா தெரியும் அப்போதே உனக்கு எனது அருமைகளும் அசட்டுத்தனங்களும் தெரியும் அப்போதே உனக்கு எனது வலுக்களும் வலிகளும் அப்போது தெரியாத எது தெரிந்து விட்டது இப்போது உன் விலகலுக்குக் காரணமாய்?

தெரியாதது 1

This entry is part 1 of 6 in the series 23 ஏப்ரல் 2023

ஆர் வத்ஸலா கரிசனமாக விசாரிக்கத் தெரிந்திருந்திருந்தது உனக்கு மௌனமாக என் வலிகளை அனுப்பி வைக்கத் தெரிந்திருந்திருந்தது உனக்கு தொடாமல் தோள் கொடுக்கத் தெரிந்திருந்திருந்தது உனக்கு என்னை விட்டு நீ விலகினால் எனக்கு என்ன ஆகும் என்பது மட்டும் தெரியவில்லையே!