பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி ,ரமேஷ் கல்யாண் உரை

This entry is part 1 of 13 in the series 2 ஏப்ரல் 2017

  பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி (தமிழ்ப் பேராசிரியர், கிரைஸ்ட் பல்கலைக் கழகம்) ஆற்றிய உரை. இக்கூட்டத்தில் என். சொக்கன், ரமேஷ் கல்யாண், ஜடாயு ஆகியோரும் உரையாற்றினர். வாசகர் கலந்துரையாடலும் நடைபெற்றது.  

அசோகமித்திரனைக் கொண்டாடிய பொன்மாலைப்பொழுது

This entry is part 10 of 13 in the series 2 ஏப்ரல் 2017

  பிரயாணம் கதையில் கற்றதும் பெற்றதும் தேடலும்                                             முருகபூபதி – அவுஸ்திரேலியா   ”  என் குருதேவர் வாயைத் திறந்தபடி படுத்திருந்தார். அவரிடம் ஒரு வருடம் யோகம் பயின்ற நான் வாயை எக்காரணம் கொண்டும் மூச்சு விடுவதற்குப் பயன்படுத்தாமல்  இருக்கக் கற்றுக்கொண்டு விட்டேன். ஐம்பது, அறுபது வருட காலம் முதிர்ந்து  யோகியாகவே வாழ்க்கை நடத்திய என் குருதேவர், அந்நேரத்தில் வாயைத் திறந்து வைத்துக் கொண்டும்கூட  மூச்சு விடுவதற்குப் பெரும் உபாதைப்பட்டுக் கொண்டிருந்தார். பதினைந்து நாட்களுக்கு முன்பு […]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 6

This entry is part 2 of 13 in the series 2 ஏப்ரல் 2017

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)   வெளியே சென்றிருந்த சுமதியும் சுந்தரியும் வீட்டுக்கு வந்து சேர்கிறார்கள். இருவரும் கூடத்துக்குள் நுழையும் போது அங்கே சாப்பாட்டு மேஜையில் ஜானகிக்கு உதவியாய்க் காய்களை அரிந்துகொண்டிருக்கும் ஜெயராமன் அவர்களைப் பார்த்ததும் தலையசைத்துப் புன்னகை செய்கிறார். பதிலுக்குப் புன்னகை செய்தபின் இருவரும் பின்கட்டுக்குப் போய் முகம் கழுவித் துடைத்துக்கொண்டு திரும்பி வந்து சாப்பாட்டு மேஜையருகே அவருக்கு எதிரில் உட்காருகிறார்கள். செயற்கையான ஒரு புன்சிரிப்புடன் அவர்களை நோக்கித் தலையசைக்கும் ஜானகி அங்கு வந்து இருவருக்கும் முன்னால் […]

இயற்கையின் பிழை

This entry is part 3 of 13 in the series 2 ஏப்ரல் 2017

  நிலாரவிகோளபந்தொன்றுநுரை துப்ப நீர்தளும்பியதுகிளைவிரித்தது மரங்களாய்காற்று வெளியென கவழ்ந்திருந்ததுகான்கிரிட் இல்லாபறவை கூட்டில் பசியறியாதிருந்தன குஞ்சுகள்புகை கழிப்பில்லா இயக்கங்களில்கசடுகளற்றிருந்தது காற்றின் சுவாசம்மழை நீரை நிறம் சேர்க்காமல்வடித்தன மலர்கள்இரைச்சல்களில்லா இயற்கையின் மொழியைகேட்டது மரத்தில்ஏறிய அணில்நீரோடையில் முகம் பார்த்ததுநிலம்காண்அகம் என மலர்ந்திருந்தது பூமிஇயற்கையின் பிழைமனிதன்..

தொடுவானம் 163. மறக்க முடியாத மருத்துவப் பயிற்சி

This entry is part 4 of 13 in the series 2 ஏப்ரல் 2017

                   வெளிநோயாளிப் பிரிவிலும் மருத்துவ வார்டிலும் இந்த மூன்று மாதங்களும் கழிந்தன. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த அநேக நோயாளிகளை முறையாக குணமாக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து இங்கு நோயாளிகள் வருகின்றனர். இங்கு வருமுன் வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பலன் பெறாதவர்களாகவே இருப்பார்கள். எல்லா இடங்களிலும் பார்த்துவிட்டு கடைசியாக வேலூர் சென்று பார்க்கலாம் என்ற எண்ணம்கூட மக்களிடம் பரவியிருந்தது. இதனால் நோய் முற்றிய நிலையில்தான் பலர் வருவதுண்டு. இதனால் […]

ஏகாதசி கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஹைக்கூ தோப்பு ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 5 of 13 in the series 2 ஏப்ரல் 2017

    ‘ ஹைக்கூ தோப்பு ‘ கவிதைத் தொகுப்பை எழுதியவர் ஏகாதசி ! திரைப்படப் பாடலாசிரியர் — இயக்குநர். 80 பக்கங்களில் ஹைக்கூ கவிதைகள் தந்துள்ளார். இவர் கவிதைகளைப் பற்றி ச. தமிழ்ச்செல்வன் கூறுகிறார் : ” உணர்ச்சி அலைகளும் கிராமத்துக் காற்றும் மோதித் தெறிக்கும் இவ்வரிகள் கவித்துவமிக்க வெளிப்பாடுகள். ” கவிதைகள் நிறைவு தருகின்றன. வீட்டிற்குள் மழை தண்ணீரால் நிறைகிறது என் பள்ளிக்கூடத் தட்டு கிராமத்துச் சிறுவர்கள் பலருக்கும் இந்த அனுபவம் உண்டு. அடுத்து […]

இரண்டு பூதக்கருந்துளைகள் மோதும் போது எழுந்திடும் ஈர்ப்பலை கள் காலக்ஸி மையக் கருந்துளையை வெளியேற்று கின்றன.

This entry is part 6 of 13 in the series 2 ஏப்ரல் 2017

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ அகிலத்தின் மாயக் கருந்துளைகள் அசுரத் திமிங்கலங்கள் ! உறங்கும் பூத உடும்புகள் ! விண்மீன் விழுங்கிகள் ! சுழன்று சுற்றி வரும் இரண்டு கருந்துளைகள் மோதித் தழுவிக் கொள்ளும் ! எழுந்திடும் ஈர்ப்பலைகள் வலுப்பெற்று மையக் கருந்துளையை வெளித்தள்ளும், காலக்ஸி கருவிலிருந்து ! நூறு மில்லியன் சூப்பர் நோவா வெடிப்பாற்றல் தேவைப்படும் ஒரு கருந்துளை வெளியேற்ற ! இரு பூதக் கருந்துளை மோதி எழும் ஈர்ப்பலைகள் சாதிக்கும் […]

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்

This entry is part 7 of 13 in the series 2 ஏப்ரல் 2017

  நாள்: 7- 4 – 2017, மகநாள், வெள்ளிக்கிழமை, மாலை 5.00 மணி இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி தலைவர்:  பேராசிரியர் தி. இராசகோபாலன் இறைவணக்கம்             :திருமதி லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி மலர் வணக்கம்            : திருமதி ராதா ஜானகிராமன் கம்பன் அடிப்பொடி அஞ்சலி வரவேற்புரை               : திரு கம்பன் அடிசூடி தொடக்கவுரை              : பேராசிரியர் ந. விஜயசுந்தரி கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் எழுதி வானதி பதிப்பகம் வெளியிடும் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைச் […]

புனலாட்டுப் பத்து

This entry is part 8 of 13 in the series 2 ஏப்ரல் 2017

  இத்தலைப்பில் பத்துப் பாடல்கள் அமைந்துள்ளன. இவை நீராடுதலைக்குறிக்கும். மருத நிலத்தில் புனலாடல் மிகவும் முக்கியமானது. பரத்தையரோடு தலைவன் புன லாடுவதும், அதைக் கேட்டுத் தலைவி ஊடற் கொண்டு கூறுவதும், தலைவிக்காகத் தோழி கூறுவதுமாக அமைந்துள்ள செய்யுள்கள் நிரம்பி உள்ள பகுதி இதுவாகும். புனலாட்டுப் பத்து—1 சூதார் குறுந்தொடிச் சூர்அமை நுடக்கத்து நின்வெங் காதலி தழீஇ, நெருநை ஆடினை என்ப, புனலே; அலரே மறைத்தல் ஒல்லுமோ, மகிழ்ந? புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்ற தொளியே! [சூதார் குறுந்தொடி=உள்ளே துளை […]

பாக்கத்தான போறேன்…….

This entry is part 9 of 13 in the series 2 ஏப்ரல் 2017

  சோம.அழகு   எரிச்சலின் உச்சத்துக்கு என்னை இட்டுச் செல்லும் விஷயங்களில் முதலிடம் இவ்வாக்கியத்திற்குத்தான். முற்றும் உணர்ந்த ஞானி போல் எதிர்காலத்தைக் கணித்துக் கூறிவிட்டு  ‘பாக்கத்தான போறேன்…..’ என சில ஜந்துக்கள் எக்காளமிடும்போது , எனது அட்ரினல் சுரப்பி பன்மடங்கு வேகமாகச் செயல்படுவதைத் தடுக்க இயலவில்லை. அவ்வகை எக்காளங்களில் சில :   எனது பத்தாம் வயதில் உதட்டுச்சாயம் பூசிக்கொள்ள மறுத்தபோது, அத்தை ஒருத்தி, “அதெல்லாம் அந்தந்த வயசு வரும்போது தானா போட்டுக்குவா….கை தன்னைப்போல லிப்ஸ்டிக்கையும் க்ரீமையும் […]