அப்பால்…

This entry is part 1 of 7 in the series 12 ஆகஸ்ட் 2018

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இறுதியென்பது முடிவற்றதென அற்றைத்திங்களொன்றில் சொல்லப்பட்டபோது சிற்றறிவு நம்பிச் சிரித்து மகிழ்ந்தது….. முற்றுப்புள்ளி யுண்மையில் அடுத்திரு புள்ளிகளை யருவமாய்ப் பெற்றிருப்பதென சற்றும் பொய்யற்ற தொனியில் நற்றமிழ்க்கவிதையொன்று நடுமுற்றத்திலொரு மேடையில் எடுத்துரைரைத்தபோது சற்றும் தாமதியாதென்னிரு கைகள் தட்டத்தொடங்கின. பற்றின் பரவசம் அடியாழ மனந்தொற்ற….. நுழைவாயில் முன்கூடம் உள்ளறை, பின்கட்டு, விடைபெறல், வெளியேறல் _ எல்லாமிருக்கும் முப்புறம் சூழ்ந்த நீர்ப்பெருக்கிலும் எனக் கலங்கித்தெளிந்துய்யக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது காலம்.

வார்த்தைப்பொட்டலங்கள்

This entry is part 2 of 7 in the series 12 ஆகஸ்ட் 2018

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (*சமர்ப்பணம் : வாழத்தெரியாதவர்களுக்கு) எப்போதும் தயாராய் தேர்ந்தெடுத்த சில வார்த்தைகளை நான்கைந்து பொட்டலங்களாகப் பிரித்து முடிந்துவைத்துக்கொள்ள வேண்டும். தேவைக்கேற்றவாறு அவை சின்னதும் பெரியதுமாக இருக்கலாம். சிக்கென்று எஸ்எம்எஸ் டெம்ப்ளேட் போல் அல்லது, சித்தி தொடங்கி வாணி ராணி சாகாமெகா சீரியல்போல். மறந்துவிடாமலிருக்க அவற்றின்மேல் குறியீடுகள் அல்லது குறிப்புகள் தந்தால் நலம். கூடவே, செய்முறைவிளக்கங்களுமிருந்தால் மிகவும் உதவியாயிருக்கும் மற்றவர்களுக்கு; ஒருவேளை நீங்கள் மறந்துவிட்டால் உங்களுக்குமேகூட. என்றாலும் பொட்டலங்களின் பட்டியல்களையும் அவற்றின் பயன்பாடுகளையும் மனதில் உருப்போட்டுக்கொண்டுவிடுவதே […]

தொடுவானம் 234. பேராயர் தேர்தல்

This entry is part 3 of 7 in the series 12 ஆகஸ்ட் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் மலேசியாவிலிருந்து கடிதம் வந்தது. என் மனைவியும் மகனும் திரும்புகிறார்கள்.நான் தாம்பரம் சென்று அத்தை வீட்டில் தங்கினேன்.அத்தை மகன் பாஸ்கரனுடன் சென்னை துறைமுகம் சென்றேன். எம்.வி. சிதம்பரம் கப்பல் பிரம்மாண்டமாக நின்றது. பிரயாணிகள் இறங்கினர். அவள் கையில் என் மகனைப் பிடித்தவாறு படியில் இறங்கிவந்தாள் . நான் மகனைத் தூக்கினேன்.அவன் வராமல் திமிறினான். கொஞ்சம் சமாதானம் செய்தபின்பு அமைதியுற்றான்.அவன் என்னை ” அங்கள் ” என்று கூப்பிடடான்.அப்படிச் சொல்லாதே. அப்பா என்று சொல் என்று […]

2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது !

This entry is part 4 of 7 in the series 12 ஆகஸ்ட் 2018

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++   பூகோள வடிவம் கணினி யுகத்தில் பொரி உருண்டை ஆனது ! ஓகோ வென்றிருந்த உடல் மேனி இன்று உருமாறிப் போனது ! பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை பூச்சரித்துக் கந்தை ஆனது ! மூச்சடைத்து விழி பிதுக்க இன்று சூட்டு யுகப்போர் மூளுது ! நோய் தொத்தும் சூழ்வெளியைக் தூயதாக்கத் தொழில் நுணுக்கம் தேவை ! காலநிலை மாறுத லுக்குக் காரணிகள் பல்வேறு ! கரங் […]

ஞாபக மறதி

This entry is part 5 of 7 in the series 12 ஆகஸ்ட் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் முன்பெல்லாம் இந்தப் பிரச்னை வயது காரணம் என்றுதான் நம்பப்பட்டது. ஆனால் இப்போது மருத்துவ ஆய்வாளர்கள் வயதானாலும் நிதானமாக இருக்க முடியும் என்று நம்புகின்றனர். ஆனால் நினைவுக்குக் கொண்டு வருவதில் சற்று தாமதம் உண்டாகலாம் என்று கூறுகின்றனர். ஞாபக மறதி வெவ்வேறு அளவில் இருக்கலாம். சிலருக்கு சிறிய அளவிலும் வேறு சிலருக்கு பெரிய அளவிலும் இருக்கலாம். இது ஆபத்தான அளவை எட்டினால்தான் ஒருவேளை மூளையில் பாதிப்பு உள்ளதா என்பது சந்தேகிக்கப்படும். மூளையில் ” டீமென்ட்டியா […]

நீண்டு நெளிந்த பாதை ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 6 of 7 in the series 12 ஆகஸ்ட் 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++ நீண்டு நெளியும் பாதை நின் இல்லம் நோக்கிச் செல்லும் ! மறையாத ஒரு பாதை ! முன்னறிந்த பாதை ! என்னை என்றும் ஆங்கே முன்னிழுத்துச் செல்லும் பாதை. கடும் காற்று அடிப்பும், இரவைக் கழுவிச் சென்ற பேய் மழையும் அழுத கண்ணீர்க் குளமும் பகலில் காட்சி தந்து என்னை நிறுத்துவ தேனோ ? எனக்குப் பாதை தெரியும் ! ஏகாந்தனாய் நானும் ஒதுக்கப் பட்டேன் பன்முறை ! […]

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 18 – டேனிஷ் கேர்ள்

This entry is part 7 of 7 in the series 12 ஆகஸ்ட் 2018

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – டேவிட் எபர்ஷப் என்ற அமெரிக்கரால்,  2000 ஆம் வருடத்தில் எழுதப்பட்ட “டேனிஷ் கேர்ள்” என்ற நாவல்தான்,  2015 ஆம் வருடத்தில் “டேனிஷ் கேர்ள்” என்ற அதே நாவலின் பெயரோடு திரைப்படமாக வெளிவந்தது. டாம் ஹூப்பர் என்பவரால் இயக்கப்பட்ட இந்தப் படம்,  உலகின் பல்வேறு பிரபல திரைப்பட விருதுகளை அள்ளிக் குவித்த படம் ஆகும். ‘டேனிஷ் கேர்ள்’  என்ற அந்த நாவலுக்கும், அந்தப் படத்துக்கும் கதைக்கருவாய் இருப்பவர், 1900-ஆம் ஆண்டில் வாழ்ந்த […]