குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 23

This entry is part 30 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

ஜோதிர்லதா கிரிஜா ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு வந்து சேர்ந்த சங்கரன் வலத் தோளில் போடப்பட்ட கட்டுடன் ஓய்வில் இருக்கலானான். கட்டுப் போட்டுக்கொள்ள மருத்துவ மனைக்குச் செல்லும் வழியில், ரமாவோடு தொலைபேசினான். திரு¦நெல்வேலியிலிருந்து தயாவின் ராஜிநாமாக் கடிதம் அலுவலகத்துக்கு வந்துள்ளதாக அவள் தெரிவித்ததும் அவனுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது. ரமாவிடம் எதுவுமே பேசாமல் தொடர்பைத் துண்டித்தான். கண்கள் சிவக்க வீடு திரும்பினான். . . . நான்கு நாள்கள் கழித்து ரமணி ஈசுவரனின் வீட்டுக்கு வந்தான். திருமணத்தின் […]

தாகூரின் கீதப் பாமாலை – 78 அர்ப்பணம் செய் உன்னை .. !

This entry is part 29 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     இதற்கு முன் நான் என்றும் இதுபோல் அனுபவப் பட்ட தில்லை, தோழி சொக்கி* ! கண்ணீர் நிரம்பிய ஒரு வசந்த காலத்தை ! ஏக்கமுடன் நான்  இச்சைப் படுவது குருதிச் செந்நிற கின்சுக்* மலர் ! தாக்கும் நறுமண மல்லிகைப் பூக்கள் பூந்தோட்ட வாசலில் புது இலைகளை உடுத்தி  இருக்கும். இரவு, பகல் எல்லா நாள் முழுதும் கண் மூடாது […]

பூரண சுதந்திரம் யாருக்கு ?

This entry is part 28 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

சி. ஜெயபாரதன், கனடா பாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டிப் போராடினோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! பூகம்பம் நிற்காமல் மும்மூர்த்தி யானது பங்களா தேசமாய் ! கட்டுப்பாடுள்ள சுதந்திரம் கண்ணிய மானிடருக்கு ! கட்டவிழ்த் தோடும் சுதந்திரம், காட்டு மிராண்டி களுக்கு ! ராவணன் சீதையைத் தூக்கி ரதத்தில் போவான் ! கண்ணன் குளிக்கும் மாதர் புடவை களவாடு வான் ! பூரண சுதந்திரம் ஒரு போர்க்களம் ! […]

மங்கோலியன் – II

This entry is part 27 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

நரேந்திரன் உலக வரலாறு பெரும்பாலான நாடு பிடிக்கும் பேராசையுள்ள சர்வாதிகாரிகளை மிக மோசமான மற்றும் துயரமான முறையில் மரணத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. உலகைப் பிடிக்கப் புறப்பட்ட அலெக்ஸாண்டர் பாபிலோனில் மர்மமான முறையில் இறந்து போனார். அவரது விசுவான படைவீரர்களே அலெக்ஸாண்டரின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்றுவிட்டு, அவர் கைப்பற்றிய நாடுகளை பங்கு போட்டுக் கொண்டனர். ஜூலியஸ் சீசரின் நண்பர்களான அவரது செனட்டைச் சேர்ந்த பிரமுகர்கள் அவரை ரோமானிய செனட்டில் வைத்தே குத்திக் கொலை செய்தார்கள். தனது போரின் மோசமான தோல்விகள் […]

போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33

This entry is part 26 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33 ஹம்சிகா கண்ணீர் வடித்தபடி யசோதராவின் குடிலின் வாயிலில் அமர்ந்திருந்தாள். ஒரு முறை பிட்சுணிகள் பலரும் ஊருக்குள் வந்து பிட்சை எடுத்துத் திரும்பும் போது அவர்களைத் தொடர்ந்து ஹம்சிகா அவர்களது குடில்கள் வரை வந்தாள். அவள் வருகையைப் பொருட்படுத்தாமல் எல்லா பிட்சுணிகளும் தத்தம் குடிலுக்குள் சென்றனர். யசோதரா மட்டும் அவளருகே வந்து “சொல் மகளே உனக்கு யாரைப் பார்க்க வேண்டும்?” என்று வினவினார். ஹம்சிகா வெறும் […]

அசடு

This entry is part 25 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

 சாம்பவி கடந்த ஒரு வார காலமாகவே அவருடைய தினப்படி நடவடிக்கைகளில் பெரிய மாற்றத்தை பாக்கியலட்சுமி உணர்ந்து வருகிறாள். காலையில் ஒருக்களித்து படுக்கும்பொழுது கை மேல் படவில்லை. மனுஷருக்கு அரைமணி முன்பாகவே விழிப்பு தட்டி விடுகிறது. இரண்டு நிமிஷம் தாமதமான காபிக்கு பாக்கியத்திற்கு விழும் டோஸ் இல்லை. ‘ வை “ என்றொரு  அதட்டல் மட்டும். இந்த  அதட்டல் ஒன்றுதான் 50 வருட வாழ்வின் அடையாளம். மிரட்டல் ஒருவகை சாயல் என்றால் பணிதல் இன்னொரு வகை சாயல். ஒரு […]

சக்திஜோதி கவிதைகள்! ‘கடலோடு இசைத்தல்’ தொகுப்பை முன் வைத்து…

This entry is part 24 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

ஸ்ரீரங்கம் சௌரிராஜன். சக்திஜோதி கவிதைகளில் காதல், காமம், பெண்ணியம் மற்றும் தத்துவம் பேசப்படுகின்றன. இக்கவிதைகள் உயிர் எழுத்து, காலச்சுவடு, புதிய பார்வை, அவள் விகடன், சிக்கிமுக்கி.காம் எனப் பலவற்றில் வெளியாகியுள்ளன. மொழியைச் சாதாரணமாகவும், தனித்தன்மையுடனும் கையாளுகிறார். ஆங்காங்கே புதிய சிந்தனைகளும் காணப்படுகின்றன. ‘தேவ வார்த்தைகள்’ என்ற கவிதையில் நளினமும், எளிமையும் உயிர்ப்புடன் நல்லியல்புகளாகக் காணப்படுகின்றன. அவைதாம் தலைப்பாகியுள்ளன. பகலின் வெளிச்சத்தை மழைத் துளிகளை பூவின் வாசத்தை உயிரின் காமத்தைக் கடத்தும் இந்தக் காற்று சில நேரங்களில தானே […]

விரதமிருப்பவளின் கணவன் ; தூங்காத இரவுகள்

This entry is part 23 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

 சுப்ரபாரதிமணியன் ——– அவனுக்கு மூன்று நாட்களாக தூக்கமில்லை. அவன் அப்படி ஒன்றும் அழகானவன் இல்லை. அப்புறம் சொல்லிக்கொள்ளும்படியானவன் இல்லை.கதைக்கு வேண்டுமானால் கதாபாத்திரமாக்கி கொள்ளலாம். அப்புறம் அவன் அப்பா  பெயர் சுந்தரம். அம்மா பெயர் காத்தாயி. இரண்டு பேரும் செத்துப் போய் விட்டார்கள்..அப்புறம் .. அவன் செய்யும் தொழில் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியானது இல்லை.வாடகைக்கு தள்ளுவண்டி எடுத்துக் கொண்டு காய்கறி, பழங்கள் விற்பது.. அப்புறம் ..  அப்புறம்…அப்புறம் அவனைப் பற்றி சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை.அப்புறம் அவன் வயது […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை -37 என்னைப் பற்றிய பாடல் – 30

This entry is part 22 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

(Song of Myself) கடவுளைப் பற்றி .. !    (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா நான் சொல்லி இருக்கிறேன் ஆத்மா உடம்பை விட மிஞ்சிய தில்லை ! உடம்பும் அதன் ஆத்மாவை விட உயர்வான தில்லை ! இறைவன் கூட ஒருவன் சுயத்துவத் துவக்கு மேலான தில்லை ! இரு நூறடி தூரம் மனித அனுதாப மின்றி நடக்கும் ஒருவன், தன் சவப் போர்வையில் மரணம் […]