வளவ. துரையன் நான் உன்னை முழுதும்மறந்துவிட்டதாகநினைக்கிறேன்.ஆனாலும்உன் நினைவுகளெல்லாம்பலாச்சுளைகளைமொய்க்கப் பறந்து வரும்ஈக்களாக வருகின்றன.தண்ணீரில் மிதக்கவிட்டக்காகிதக் கப்பல்கவிழ்ந்து விடுமோவெனக்கலங்கும் சிறுவனின்மனமாய்த் தவிக்கிறேன்.மலர்த்தோட்டத்தில்எல்லாமேமணம் வீசினாலும்மனத்தில் ஒன்றுதானேவந்தமர்கிறது.இறுதியில் முன்னால்ஓடுபவனைவெற்றி பெற விட்டவனாய்த்தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.
வளவ. துரையன் எனக்குத் தெரியும்நீ எப்பொழுதும்உண்மையை நேசிப்பவன்.மண்ணால் சுவர் வைத்துபுறஞ்சுவருக்கு அழகாகவண்ணம் தீட்ட எண்ணமில்லை.வார்த்தை அம்புகளைத்தடுக்க உன்னிடம்வலுவான மனக் கேடயம்வாழ்ந்து கொண்டிருக்கிறது.பொய் மழை பெய்கையில்முழுதும் நனைந்தாலும்புறந்தள்ளிப் போகிறாய்.எதிரி நாகங்களைஎதிர்கொள்ளக் கைவசம்ஆடும் மகுடி உண்டு.ஆனால்துளைத்திடும் முள்கள்…
ஆர் வத்ஸலாநிலவைத் தொட்ட மணித்துளியைசிறைப்படுத்தி காட்டியதுதொலைக்காட்சிசிறு வயதில் நிலாச்சோறு தின்றதைஅசை போட்டார்அப்பாசோஃபாவில் சாய்ந்தபடிகைகொட்டி கொண்டாடினான்மகன்'பாப்கார்ன்' தின்று'கோக்' குடித்தபடி"அம்மா, பசிக்குது" என்றான்நடைபாதையில் உறங்கி எழுந்தசிறுவன்நீரற்ற கண்களுடன்நிலவை வெறித்தாள்பாப்பம்மா