. * சலுகையோடு நீட்டப்படும் கரங்கள் பெற்றுக் கொள்கின்றன ஒரு கருணையை மரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள் அடையத் துடிக்கின்றன இறுதி தரிசனத்தை இருப்புக்கும் இன்மைக்குமான பெருவழியில் சுவடுகளாகிறது திரும்புதலின் பாதையும் காத்திருந்து எரியும் தெருவிளக்கும் ***** –இளங்கோ ( elangomib@gmail.com )
அழிந்து வரும் இயற்கையின் மீதான தன்னுடைய வருத்தத்தை “இன்னும் பிறக்காத தலைமுறைக்காக” என்னும் நூலில் கனத்த இதயத்துடன் பதிவு செய்திருக்கிறார் திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள். தமிழ் நாட்டில் காட்டுயிர் பற்றிய ஆர்வம் குறைவாக இருப்பது பற்றியும், காட்டுயிர் தொடர்பான பல சொற்கள் தமிழில் வழக்கொழிந்து வருவது பற்றியும் வேதனை தெரிவிக்கிறார். புலிகள் ஏன் பாதுகாக்கப் பட வேண்டும் என்ற இவருடைய விளக்கம் தமிழ் நாடு அரசின் பாட புத்தகங்களில் இருக்க வேண்டும். ஆசிய சிங்கங்கள் குஜராத்தின் ஒரு […]
கவிதை எழுத அமர்ந்த நான் அதோடு மளிகைக்கடைக்கும் சேர்த்து லிஸ்ட் எழுதிக்கொண்டிருந்தேன் முக்கியமானவை , உடனடித்தேவைகள் முதலில் வைக்கப்பட்டன கொஞ்சம் இருப்பு உள்ளது,பரவாயில்லை வகைகள் அடுத்து இடம் பிடித்தன இன்னும் கொஞ்ச நாளைக்கப்புறம் தேவைப்படுபவை பின் தங்கின எப்போதும் இடம் பிடிப்பவை என்னாலேயே வரிசையின் கடைசியில் எழுதப்பட்டன. எழுதியவை அனுப்பப்படும் இடங்கள் எப்படியோ தவறுதலாக மாறி விட்டது உடனே ஒன்று திரும்ப வந்து விட்டது இன்னொன்றுக்காக காத்திருந்தேன் அது வெளிவந்து விட்டது. – சின்னப்பயல் ( chinnappayal@gmail.com […]
பிரசன்னா சண்முகம் முடி திருத்த ஏன் அன்றைய தினத்தை தேர்ந்தெடுத்தார்? அவரே இதை பின்னாட்களில் பலமுறை நினைத்து நொந்து கொண்டதுண்டு. இத்தனைக்கும் அது ஒரு ஞாயிறு. மயிறு திருத்த அனைவரும் படையெடுத்து தள்ளுமுள்ளு ஏற்படுத்தும் நாள். இருந்தாலும் அடிக்கும் வெயிலினாலும், நகக்கண் எல்லாம் கருப்பானதாலும் இதற்க்கு மேல் தள்ளி போட முடியாமல் அந்த ஞாயிறுதான் என முடிவெட்ட முடிவெடுத்தார் திரு சண்முகம். அன்று எனப்பார்த்து சில்லரையாக ஐம்பது ருபாய் இல்லாமல் போனது அவர் அப்பா செய்த பாவம் […]
அன்னா ஹாஜாரேவின் உண்ணாவிரதப்போராட்ட மேடை குழந்தைகளால் நிரம்பியது. இன்று (28.8.2011) காலை அவர் உண்ணாவிரதம் ஒரு சிறு குழந்தையால் முடித்துவைக்கப்பட்டது. குழந்தைகள் வீடுகளில் பெற்றொரின் அன்பரவணைப்பிலும் பள்ளிகளில் கல்வி கற்கவும்தான் செய்ய வேண்டும். அரசியல் சமூகச் சிந்தனைகள் அவரகளுக்குத் தேவையில்லை. இதைக்கருத்தில் கொண்டே பள்ளிப்பாடங்கள் எதையும் அடித்தளத்திலிருந்து அக்குவேறு ஆணிவேறாகப்பிரித்து உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாக எழுதப்படுவதில்லை. 10ம் வகுப்பிலிருந்தும் கூட அவர்கள் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும் பாடங்கள் எழுதப்படவில்லை. உண்மைகள் உள்ளவாறே அப்படியே சொல்லப்படும். ஆனால் ஹசாரே அதைப்பற்றியெல்லாம் […]
முதலில் இம்மாதிரி ஒரு தலைப்பில் ஆரம்பிப்பதே தவறு என்றுதான் தோன்றுகிறது. தலைப்பை வைத்தே அவரை யாருக்கும் தெரியாது என்பதை நாமே உறுதிப் படுத்துவதாக ஆகி விடுகிறது என்பதுதான் உண்மை. ஆனாலும் கூட இம்மாதிரி விஷயத்திற்கெல்லாம் இப்படித் தலைப்பிட்டுத்தான் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது. காரணம் நம் தமிழ்நாட்டின் நிலைமை அப்படி. அதாவது தமிழ்நாட்டிலுள்ள பல எழுத்தாளர்களின் நிலைமை என்று சொல்ல வந்தேன். கேரளா போன்ற மாநிலங்களில் ஒருவர் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தால் கூட அவரை ஊரறிய மேடை ஏற்றி […]