காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் ( 6)

This entry is part 13 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

( 6 ) அன்று ஆய்வுக் கூட்டம் இருக்கிறது என்ற நினைப்பே உடல் அயற்சியில் மறந்து போய் விட்டதை எண்ணியவாறே பரபரப்பாக எழுந்த பாலன் வேகவேகமாகக் குளித்துவிட்டு அம்மா நீட்டிய டிபனை அள்ளி வாயில் திணித்துக்கொண்டு, மதியச் சாப்பாடு வேணாம்மா என்றுவிட்டுப் பறந்தான் அலுவலகத்துக்கு. எதற்காக இப்படிச் சொல்லிவிட்டுப் போகிறான் என்பது புரியாமல் அவன் செல்வதையே பார்த்துக்கொண்டு நின்ற ஜெகதாம்பாள் அவனுக்கு முன்னால் எழுந்து ஓட்டமாய் ஓடிய தன் கணவனை நினைத்துக் கொண்டாள். இவன்தான் காலில் வெந்நீரைக் […]

இசை – தமிழ் மரபு – 3

This entry is part 2 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

(எஸ் ஜி கிட்டப்பா – கே பி சுந்தராம்பாள் ) பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தமிழர்களின் படைப்பு மேதைமை இசையிலும் நடனத்திலுமே தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பக்தி சகாப்தத்தின் இலக்கிய மேதைமை கம்பனில் தன் உச்சத்தை அடைந்து பின் சரிவடையத் தொடங்கி, 16 – ம் நூற்றாண்டுக்குப்பின் கிட்டத்தட்ட வறண்டு போனது அம்மேதைமை இசையிலும், நடனத்திலும் தன் கவனத்தை முழுவதுமாய் திருப்பியது, இதற்குப் பின் தமிழ் நாடு இவ்விரண்டு துறைகளிலும் கற்பனை, மேதைமை இரண்டிலும் மிகச் சிறந்து மலர்ந்தது. […]

‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ – தொடக்கவிழாவில் ”கணினித்தமிழ் நூல் வெளியீடு – அழைப்பிதழ்

This entry is part 3 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ – தொடக்கவிழாவில் ”கணினித்தமிழ் நூல் வெளியீடு – அழைப்பிதழ் அன்புடையீர் வணக்கம். SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின்கீழ் மாணவர்களின் தமிழ்த் திறன்களையும் தமிழ் சார்ந்த கலைத் திறன்களையும் ஊக்குவிப்பதற்காகவும் அவற்றை அரங்கேற்றுவதற்குரிய மேடை அமைத்துத்தரவேண்டும் என்பதற்காகவும்  ‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ என்ற ஒரு அமைப்பு தொடங்கப்படவுள்ளது. இதன் தொடக்கவிழா 03.09.2015 வியாழக்கிழமையன்று  பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை காட்டாங்குளத்தூர் வளாகத்தில் அமைந்துள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் […]

மைத்தடங்கண்ணினாய்

This entry is part 4 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

    குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்          மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்          கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்          வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்          மைத்தடங் கன்ணினாய் நீஉன் மணாளனை          எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்          எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்          தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய் இது திருப்பாவையின் பத்தொன்பதாம் பாசுரம். இந்தப் பாசுரம்தான் பட்டரின் ‘நீளாதுங்க ஸ்தநகிரி’ எனும் தனியன் ஸ்லோகம் உருவாகக் […]

ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் அகில நாட்டு அணுமின் உலைகளின் நிலைமை என்ன ?

This entry is part 6 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

  (Power Demand :1980 – 2035) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://bcove.me/pyhaicf3 https://www.youtube.com/watch?v=0nUtqHlQ0Hk ++++++++++++++ மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும். தாமஸ் ஹார்டி [Thomas Hardy 1840–1928] மின்சார உற்பத்தி பற்றி மாறாகப் பேசும் பேரளவு தொழிற்துறை வல்லுநருக்கு எதிராகப் பெரும்பான்மை உட்துறைக் குழுவினர் அணுமின்சக்தியே எதிர்காலத் தேவையைப் […]

தொடுவானம் 83. இறை நம்பிக்கை

This entry is part 7 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

  பேருந்து நிலையத்திலிருந்து தேவாலயம் செல்லும் வீதியின் இருமருங்கிலும் வரிசையாக கடைகள் இருந்தன. பெரிய கடைத்தெரு போன்ற  காட்சி அது. அழகுப் பொருள்களும், அலங்காரப் பொருள்களும், மாதா சிலைகளும் படங்களும், வேதாகம வசனங்களும், கிறிஸ்த்துவ கீதங்களின் குருந்தட்டுகளும், மெழுகுவர்த்திகளும், மணிமாலைகளும், தின்பண்டங்களும் என பலதரப்பட்ட கடைகள் அங்கு இருந்தன. தேவாலயத்தின் எதிர்புறத்தில் வரிசைவரிசையாக பூக்கடைகள் இருந்தன. அங்கு ஏராளமான மாலைகள் விற்றனர். அங்கும் நீண்ட மெழுகுவர்த்திகள் விற்றனர். வேண்டுதலுக்காக வருபவர்கள் மெழுகுவர்த்திகளும் மாலைகளும் வாங்கிச் செல்கின்றனர். தேவாலயத்தின் […]

ஸ்பரிஸம்

This entry is part 8 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

  நான் சிந்தனையில் இருந்து மீண்ட​ போது அந்தப் படகு இல்லை   என் பார்வையின் வீச்சுக்கு அப்பால் அது போய் விட்டது   எழுந்து நின்று கரையோரம் நீள​ நடந்து அந்த​ மேட்டில் ஏறி படகைத் தேடலாம் கவனத்தைக் கடலின் ஆர்ப்பரிப்பு கலைக்கிறது   ஆக​ உயரமாய் எழும்பும் அலை வந்து மோதி ஈரமணலை விரித்து மறைகிறது   மேகங்கள் பறவைகள் கவியும் மாலை நட்சத்திரங்கள் எதிலிருந்தும் தடம் மாற்றி விடும் ஆர்ப்பரித்து ஓங்கி வரும் […]

மின்னல் கீறிய வடு

This entry is part 9 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

        ரமணி பார்க்காதே என்கிறாள் கண்டிப்பான குரலில் அம்மா.   கண் இருண்டு போய்விடும் எனப் பயம் சொடுக்கும் அதிர்வில் கண்மூடிச் சொல்கிறாள் அக்கா.   மழைகூட இரண்டாம் பட்சமாய்ப் போகச் செய்யும் அந்த மின்சாரப் பாம்பை எப்படித்தான் பார்க்காமல் இருக்கமுடியும்?   இடியின் அபஸ்வர பய லயம் சேர்ந்த ஒளித்தெறிப்பு மனதிற்குள் நிரப்பும் அபூர்வ சங்கீதத்திற்காகவே மழைப்பொழுதுகள் மங்கலாக இருக்கையில் எப்படித் தவிர்ப்பது மின்னல் பார்ப்பதை?   தகதகக்கும் தங்க வாள் வானைத் துண்டாக்கிப் பிரபஞ்ச […]

ஜி. நாகராஜனின் சிறுகதைகள்

This entry is part 10 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

  நடேசன் சிறுகதைகள் மனித வாழ்வின் தருணத்தை மின்னலாக வெளிச்சமிடுபவை. சிறுகதைகளின் தொடக்கம் ஜாதகக்கதைகள், விவிலியம் ஈசாப் கதைகளிலிருந்து தோன்றினாலும் அமரிக்கா, இரஸ்சியாவில் 19ஆம் நூற்றாண்டிலே இலக்கியமாக வரையறை செய்யப்படுகிறது. சிறுகதைகளை மதிப்பிடுவதில் உள்ளடக்கம், மொழி, அமைப்பு, என்பவற்றுடன் நம்பகத்தன்மை, சர்வதேசியத்தன்மை, வாசிப்போரது உள்ளத்தில் உருவாக்கும் தாக்கம் எனப்பல கூறுகள் அடங்கியது ஜி நாகராஜனின் சிறுகதைகள் அவரது நாவல்கள் போல் உள்மன உணர்வுகளையும், கனவுகளையும் வெளியே கொணர்ந்து மனிதர்களின் மனதை கூறுபோட்டு மேசையில் காட்சிப்படுத்தும். அவருடைய சிறுகதைகளைக் […]