10வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிய சொப்கா குடும்ப மன்றம்.

This entry is part 12 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

யூலை மாதம் 13 ஆம் திகதி கனடா, ஒன்ராறியோ பீல் பிரதேச சொப்கா குடும்ப மன்றத்தினர் தங்கள் மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். மிசசாகா, 4300 கௌத்ரா வீதியில் உள்ள ஜோன் போல் 11 போலிஷ் கலாச்சார மண்டபத்தில் மாலை 6:00 மணியளவில் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவின் பிரதம அதிதிகளாக வைத்திய கலாநிதி இரத்தினசிங்கம் மோகன், திருமதி கௌரி மோகன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.  மாலை 6:00 […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 204 ஆம் இதழ்

This entry is part 11 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 204 ஆம் இதழ் சில தினங்கள் முன்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இதழ் மறைந்த ஜெர்மன் எழுத்தாளர் W.G. ஸீபால்ட் என்பாரைச் சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இதழை https://solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம். இந்த இதழில் காணக் கூடிய விஷயங்களின் பட்டியல் இது: பிரதிபலிக்கும் வளையங்கள்-ஸீபால்டின் ‘The Rings of Saturn’ குறித்து சில எண்ணங்கள்  – நம்பி ஸீபால்ட் எழுதிய த ரிங்க்ஸ் ஆஃப் ஸாடர்ன் என்ற நாவலைப் […]

சொல்ல வல்லாயோ….

This entry is part 10 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) சொல்சொல்லாய் உள்ளிறங்குகிறது……. சில நீர்த்துளிகளாய், சில தீக்கங்குகளாய், சில பூஞ்சிறகுகளாய், சில பெரும்பாறைகளாய், சில பூங்காற்றின் சிலுசிலுப்புத் தூவல்களாய், சில பேய்க்காற்றின் கொலைவாள் சீவல்களாய், சில இன்சொப்பனங்களாய், சில கொடுங்கனாக்களாய்…… சிலவற்றில் நாம் சொஸ்தமாகிறோம் சிலவற்றில் பஸ்பமாகிறோம் சில நட்பு பாராட்டுகின்றன சில நம்மை எதிரியாய் அடையாளப்படுத்துகின்றன பிறர்க்கும், நமக்கே நமக்கும். சொல்லில்லா இசை அமைதியென்பார் மனம் கேட்கும்போது எதையும் சொல்லாமலாயிருக்கும்? நினைவின் சொல்லுக்கு விலை நவரத்தினங்களிலென்றால் மறதியின் விலை நட்சத்திரம்! சொல்லில்லா […]

நிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்

This entry is part 9 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

FEATURED Posted on August 4, 2019 நிலாக் குடியிருப்புக் கூடம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++ நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில்கால் வைத்துநாற்பது ஆண்டுகள் கடந்துநாசா, ஈசா, சைனா,இந்தியா மீண்டும்விண்ணிலவுப் பயணத் திட்டம் !குடியேற்றக் காலனி ! பனிக்கட்டி நீர் உள்ளது ! உயிர் வாயு, எரிவாயு உண்டாக்கலாம் !பயிர் விளைவிக் கலாம்.கூடிய வெப்பம், துருவப் பகுதியில் நீடித்த சூரிய ஒளி !நீர், மின்சக்தி சேமிக்க வேண்டும். தளத்தின் கீழே வெப்பம்.தரைக்கீழ் இல்லம், வாழ்வு !  மண்ணுளவு செய்யக் கருவிகள்  !வெண்ணிலவில் […]

இந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய விண்சிமிழ் சந்திரயான் -2 ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கும்

This entry is part 8 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

Posted on July 28, 2019 சந்திரயான் -2  விண்சிமிழ்சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா++++++++++++++++++++ Chandrayaan -2 Launching July 22, 2019++++++++1.  https://youtu.be/OKagPLd3evQ2. https://youtu.be/OKagPLd3evQ3. https://youtu.be/ENQ-AvPx6U84. https://youtu.be/fv3nO9KTcLc5. https://youtu.be/o31oLzjDMjQ6. https://youtu.be/YoJJNT-cwaU7. https://youtu.be/s9t4ZTGnhx88. https://youtu.be/PGDKE3SX8AU++++++++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் வடதுருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் நாசாவும் ஆராயும்  !சந்திரனில் சின்னத்தை வைத்ததுஇந்திய மூவர்ணக் கொடி !யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்பந்தய மில்லை !விந்தை புரிந்தது இந்தியா !இரண்டாம் சந்திராயன்2019  செப்டம்பரில் விண்ணுளவிஇறக்கும்  தளவுளவி ! தளவூர்திபாரத விண்வெளித் […]

தேவதை துயிலும் கல்லறை

This entry is part 7 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

அலைமகன் 01                                                                                        நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் மீராவை முதன் முதலில் சந்தித்த போது அது ஒரு முன்பனி காலத்தின் மிக அற்புதமானகாலை வேளையாக இருந்தது.   மிக மெல்லிய ரம்மியமான குளிர் உடலை வருடிக்கொண்டிருந்தது. அது மிகப்பழைய, ஆனால் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு கலாசாலை. ஆங்கிலேயர்கள் அதனை மிகுந்த கரிசனத்துடன் விக்டோரியா காலத்துக் கலைநயம் குறையாமல் அமைத்திருந்தனர். அதன் பாதையோரம் பூத்துக்கிடந்த றோசாக்களில் பனித்துளிகள் சீராக்கப்பரவி பன்னீர் தெளித்து விட்டது போல காட்சியளித்தன. கலாசாலையின் நீண்ட […]

பிச்சை

This entry is part 6 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

கு. அழகர்சாமி காசுக்காக அல்ல- பசிக்காக சாப்பாட்டுப் பொட்டலம் பிச்சை கேட்கிறவனிடம் ’காசு கொடுத்து வாங்கிப் போ’ என்று கறாராய்க் கூறும் கடைக்காரன் பக்கத்திலிருந்து- காது இருக்கிறது தான்; ஆனால் காது கொடுக்காமல் கேட்கிற எனக்கு ’தானம் கொடு காசெ’ன்று -பிச்சை கேட்கிறவனுக்கல்ல- எனக்குத் தான் இன்னொரு விதமாய் இடித்துச் சொல்கிறான் கடைக்காரனென்று ஆகாய உடுக்களின் ஒளி போல் தாமதமாய் என் சிற்றறிவெட்டிய தருணத்தில் பிச்சைக்காரனைத் தேடக் காணோம்  அவன்- என்னிடம் அவன்  காசு கேட்டுக் கொடுக்காமலில்லையேயென்று […]

கலித்தொகையில் ஓரிரவு.. குறிஞ்சிக்கலி:29. முதுபார்ப்பான் கருங்கூத்து

This entry is part 5 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

மீனாட்சி சுந்தரமூர்த்தி துறை: அதுவே,(வரைவு கடாயது,–மணம் புரிந்து கொள்). களவொழுக்கம் நயந்தவனுக்கு நடந்ததாய் பொய் நிகழ்வு ஒன்று சொல்லி தோழி அறிவுறுத்துவது. இரவில் வந்து சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தான். தலைவன். ஒருநாள் அவன் தலைவியின் மனையின் பின்புறத்தில் காத்திருக்க அறியாதவர் போன்று தலைவி கேட்டிருக்கத் தோழி கூறுவது.(தலைவன் காதில் விழுமாறு) அதாவது இரவுக்குறி மறுப்பது.(இரவில் வந்து சந்திப்பதற்கு உடன்படாமை) “திருந்திழாய் கேளாய், நம் ஊர்க்கெல்லாம்           சாலும் பெருநகை  அல்கல் நிகழ்ந்தது         ஒருநிலையே; பொருள்: திருத்தமுற […]

நீ நீயாக இல்லை …

This entry is part 4 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

கவிதை நீ உன்னில் பெரும் பகுதியை இழந்துவிட்டாய் உன் குரல் மட்டும் உன்னை அடையாளம் காட்டுகிறது உன் திசை ஒரே புள்ளியில் நின்று கொண்டிருக்கிறது ஏழையின் தோள் அழுத்தும் கடனெனக் கனக்கின்றன நாட்கள் முதுமையிலிருந்து உன் மனம் குழந்தைமை கொண்டுவிட்டது நீ அறிந்தவை பல இன்று உருத்தெரியாமல் சிதறிக் கிடக்கின்றன உணவு நீர் ஊட்ட வேண்டியிருக்கிறது நீ நடப்பதற்கு ஒருவர் துணை தேவைப்படுகிறது கோலங்கள் உனக்குக் புள்ளிகளாய்த் தெரிகின்றன முகம் சோகத்தை அப்பிக்கொண்டு திகைக்கிறது வந்து பார்க்கும் […]

இந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் ஒன்று

This entry is part 3 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

அழகர்சாமி சக்திவேல் கல்வி முன்னேற்ற விசயத்தில், பிஜேபி எடுக்கும் பல்வேறு முயற்சிகளை நிச்சயம் பாராட்டியாகவேண்டும். முந்தைய ஆட்சியில் பிஜேபி கொண்டுவந்த சாத்தியா என்ற பாலியல் கல்வித்திட்டம், இப்போதைய பிஜேபி ஆட்சியில் கொண்டுவரப்படும் புதிய கல்விக் கொள்கை இவை இரண்டுமே பாராட்டுக்குரியவைகள். கூடவே உலக அரங்கில் இந்தியா பெருமையுடன் நடைபோட, நிச்சயம் பிஜேபியின் இந்தக் கல்விக்கொள்கை உதவி செய்யும். ஆனால், பொருளியல் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, மொழிவேற்றுமைகள் நிறைந்த இந்தியாவுக்கு ஏற்றவாறு, பிஜேபி சொல்லும் கல்விக்கொள்கையில் நிச்சயம் சில மாற்றங்களும் […]