விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூற்று ஒன்று

This entry is part 38 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

  1939 ஜனவரி 31 வெகுதான்ய தை 18 செவ்வாய்க்கிழமை   கோஷி வக்கீலை விட ரொட்டிக்கடைக் காரன் கோஷி சுறுசுறுப்பான மனுஷர். கடைக்காரன் கொஞ்சமும் கேரள வாசனை இல்லாத, எருமைப் பால் காப்பி சாப்பிடுகிற, தமிழ் டாக்கி நட்சத்திரங்களை அதுவும் வடிவான ராஜகுமாரியையும், லக்ஸ் பத்மாவையும் மாராப்பு பற்றி கவலைப்படாமல் பக்கவாட்டில் நிற்கச் சொல்லிப் பிடித்த படங்களை ரொட்டிக்கடை சுவரில் மாட்டி, தீப தூபம் காட்டாத குறையாக கும்பிட்டு குழைந்து சந்தோஷப்படுகிறவன். லக்ஸ் பத்மா வந்தால் […]

பஞ்சதந்திரம் தொடர் 55

This entry is part 37 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

புதையலைத் தேடிய நான்கு பிராம்மணர்கள் இப்பூவுலகில் ஒரு ஊரில் நான்கு பிராம்மணர்கள் பரஸ்பரம் திடமான நட்புடன் வசித்து வந்தனர். அவர்களும் மிகுந்த தரித்திரத்தால் பீடிக்கப்பட்டுத் தங்களுக்குள் யோசித்தனர். ‘’என்ன வறுமை இது?’’ நியாயமும் பராக்கிரமும் உள்ளவனானாலும் எந்த மனிதனிடம் தனம் என்பதில்லையோ அவனை, நன்கு பணிவிடை செய்தாலும் எஜமானர் வெறுக்கிறார். நல்ல உறவினர்கள் அவனை உடனே விட்டுவிடுகின்றனர், அவனுடைய குணங்கள் கோபிப்பதில்லை. குழந்தைகளும் அவனை திரஸ்கரிக்கின்றனர், ஆபத்துகள் அதிகமாகின்றன. உயர்குலத்தவளானாலும் மனைவி அவனைக் கவனிப்பதில்லை. நண்பர்களும் அணுகுவதில்லை. […]

தாகூரின் கீதப் பாமாலை – 25 ஆத்ம நாடகம்.

This entry is part 36 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன்னோடு நடத்தும் இந்த நாடகம் அந்தோ என் ஆத்மா வுக்கு ! ஓ காதலே ! நீ காண்பது என் காதலி மிக மிக ஆர்வமோ டுள்ளது இன்றென் இதயம் ! விளையாட்டுப் போட்டியில் இழப்பு களை நீ எளிதாய் ஏற்றுக் கொள்ளாய். இப்படி நீ ஒருத்தி தான் எப்போதும் எனக்கு வர்ணம் பூசி விட்டு ஏகி விரைவாயா ? பிடிபட்டுக் கொள்ள பிரபு […]

பாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்

This entry is part 35 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

  Silencing Pakistan’s Minorities By HUMA YUSUF (ஷபாஸ் பட்டி : இஸ்லாமிய தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைச்சர். கிருஸ்துவர்)   கராச்சியில், சென்ற வாரம் செவ்வாய்க்கிழமையில் நகரத்தின் முக்கிய தெருக்கள் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் எரிந்துகொண்டிருந்தன. கண்ணீர்ப்புகை குண்டுகள் வெடித்தன. நான்கு பேர்கள் காயமடைந்தார்கள். காரணம் ஷியா ஆக்‌ஷன் கமிட்டி Shia Action Committee (S.A.C.) அமைப்புக்கும் போலீஸுக்கும் நடந்த சண்டை. பாகிஸ்தான் டெலிகம்யூனிகேஷன்ஸ் அத்தாரிட்டி என்ற அரசாங்க அமைப்பு, பாகிஸ்தான் […]

2013 ஆண்டில் செந்நிறக்கோள் நோக்கி இந்தியா திட்டமிடும் விண்ணுளவி

This entry is part 34 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

  (கட்டுரை : 7) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா செந்நிறக் கோளுக்குச் செல்லும் பந்தயம் வலுக்கிறது ! முந்திச் சென்றது நாசா ! பிந்திச் சென்றது ஈசா ! இந்தியாவும் அடுத்தாண்டு செந்நிறக்கோள் சுற்றப் போகுது ! சந்திரனில் முத்திரை வைத்தது முன்பு இந்திய மூவர்ணக் கொடி ! யந்திரத் திறமை காட்டும் பந்தயம் தான் ! விந்தை புரிந்தது இந்தியா ! இரண்டாவது சந்திராயன் மூன்றாண்டில் சென்று இறக்கும் தளவுளவி ! […]

பா. சத்தியமோகன் கவிதைகள்

This entry is part 33 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

என் சொற்கள் எனக்குப்போதும் கொஞ்ச காலமல்ல — நீண்ட வருடமாய் நான் ஒரு மெல்லிய இறகு வைத்திருந்தேன் அதன் எடை மிகவும் இலகுவானது காற்றைவிடவும் மெலிசானதால் ஊதித் தள்ளப்பட்டு பள்ளத்தாக்கில் போய் ஆழத்தில் பறந்து விழுந்தது என்றாலும் பாருங்கள் அதன் எடையை இந்த உலகம் இழந்தபோது உலகத்தால் தாங்கமுடியவில்லை பறக்க என் சிறகைத் தேடுகிறது அது! நிச்சயமாய் எனக்குத்தெரியும் – மீண்டும் என் இறகு கிடைத்த பிறகுதான் உலகம் உருண்டையாகி தன் இயல்பில் இயங்குகிறது1 . ***** […]

மஹாளயத்தில் பொன்னம்மா யார்?

This entry is part 32 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

கணேசனின் தந்தை இறந்தபின் அவனுக்கு முன்னோர்கள் கடன் செய்வதில் சிரத்தைஅதிகம் ஏற்பட்டது. அம்மாவுக்கும் ரொம்ப திருப்தி. கருப்பு எள்ளு, பலாமூசு, வாழைத்தண்டு, என்று தேடித்தேடி வாங்கிவருவாள். நல்ல வெண்ணெயை வாங்கி காய்ச்சி ஹோமங்களுக்கும் சமையல் சாப்பாட்டுக்கும் பக்ஷணங்களுக்கும் வைப்பான். நுனிவாழைஇலை வாங்கி வருவான். வருடத் திதி வருகிறதென்றால் ஒருவாரம் முன்னாலிருந்தே அதே நினை வாக காய்ந்த வரட்டி, சிராய் என்று ஓமம் வளர்க்க தயார்ப்படுத்துவான்-அப்பா வருகிறார் என்று. அதை கர்மசிரத்தை என்பார்கள். அப்படிமுடிப்பான். ஐந்தாறு வருடங்கள் ஓடிவிட்டன. […]

தொலைந்த காலணி..

This entry is part 31 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

தி. ந. இளங்கோவன் சீறிச் செல்லும் வாகனங்களிடையில் ஒற்றையாய் சிதைந்து கிடந்ததந்த புத்தம்புதிய பிஞ்சுக் காலணி….. தாயின் வயிற்றை அணைத்துப் பிடித்து இரு சக்கர வாகனத்தின் இசைவில் உறங்கிப் போன வேளையில் காலணியைத் தவறவிட்ட குழந்தை வீடு போய் விழித்தவுடன் வாங்கிய அன்றே தொலைந்து போன காலணிக்காய் அழும்போது சோகமாய் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு துக்கம் அனுஷ்டித்தது தொலையாத இன்னொரு காலணி ! தி. ந. இளங்கோவன்

ரமளானில் ஸகாத் சுட்டெரித்தலும் – வளர்ச்சியும்

This entry is part 30 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

இஸ்லாத்தின் புராதன பொருளியல் கோட்பாட்டின் நோக்கம் என்பதே துவக்க காலத்தில் நாடோடி மேய்ச்சல் சமூக வாழ்வியல் முறை சார்ந்த மக்காநகர் குறைஷிகளுக்கும், வணிக வாழ்வியலில் மேம்படுத்தப்பட்டிருந்த மதினாவாசிகளுக்கும் இடையேயான பொருளியல் ஏற்றத்தாழ்வையும் முரண்பாட்டையும், பகைமையும் சரிப்படுத்தும் விதத்தில் செல்வத்தை சமபங்கீடு செய்தலை நோக்கிய பயணமே ஆகும்.இதுவே பின்னர் உலகியல் கோட்பாடாக உருவாகிறது ஸகாத் என்பதற்கு தூய்மையையும் வளர்ச்சியையும் உருவாக்குதல் என்பது உள்ளார்ந்த பொருளாகும். இதுஏழ்மையின் பிடியில் சிக்கி பலவீனப்பட்டுக் கிடக்கும் ஏழை எளிய மக்களுக்கு வசதி படைத்தோரை […]

மாத்தி யோசி…!

This entry is part 29 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

“என்னப்பா, வேலு என்ன முடிவு செய்திருக்கே.. 300 ரூவா பணம், பிரியாணி பொட்டலம், தண்ணி பாக்கெட்டு, ஒரு குவார்ட்டர்.. ஆறு மணிநேரம் ஜே போடோணும் அவ்ளோதான். என்ன வர்றயா .. இல்லையா?” “அண்ணே.. எனக்கு இதெல்லாம் பயக்கமில்லண்ணே… வேற எதனாச்சும் வேலை இருந்தா சொல்லுண்ணே.. “ “ஏன்..துரை அரசாங்க உத்தியோகந்தான் பாப்பீகளோ… ?” “இல்லண்ணே.. மூட்டை தூக்கற வேலையா இருந்தாலும் தேவல.. குழந்தைக்கு உடம்பு சரியில்ல. ஆசுபத்திரிக்கு கூட்டிப்போகக் கூட காசு இல்லண்ணே. கொஞ்ச்ம் மனசு வையிண்ணே..” […]