ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஆணாக வாழ்வதி லிருந்து ஆண்மை உட்கரு தானாகத் தோன்றுவ தில்லை ! ஆணுக்கு ஆதரவு அளிக்கும் தோழ மையி லிருந்தும் சேருவ தில்லை ! “வெளுத்துப் போய்த் தெரிகிறாய் ! பள்ளிக்குச் செல்லாதே” என்று பாட்டி போதிப்பாள் ! ஒட்டம் பிடி நீ அதைக் கேட்ட வுடனே ! உன் தந்தை கொடுக்கும் உதை அதை விட உன்னத மானது ! உடம்பில் […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “என் ஆத்மா வாழும் வாழ்க்கைக்கு “இரவு வழிகாட்டி” போன்றது. எத்தனை விரைவாக அது பயணம் செய்கிறதோ அத்தனை அருகாமைல் உள்ளது காலைப் புலர்ச்சி !” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ அறிவும். பகுத்தாய்வு நெறியும் உனது தகுதியை நீயே மதிப்பிடு உனக்கு மரணம் இல்லை ! பகுத்தாய்வு செய்வாய் உனது ஒளிக் கதிரை ! சத்தியத்தின் சமிக்கை அது ! தகுந்த […]
ஆர் கோபால் வி எஸ் ராமச்சந்திரன் என்ற அறிவியலாளரை பற்றி தமிழர்களுக்கு அதிகம் தெரியாது என்று கருதுகிறேன். ஆகவே அவரை பற்றிய சில அறிமுக வார்த்தைகள். விலயனூர். எஸ்.ராமச்சந்திரனது விக்கி பக்கம் அவரை பற்றிய ஏராளமான தகவல்களை தருகிறது. http://en.wikipedia.org/wiki/Vilayanur_S._Ramachandran சாண்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மனவியல் துறை பேராசிரியராகவும், நியூரோசயன்ஸ் க்ராசுவேட் புராகிராமின் இயக்குனராகவும் இருக்கிறார். நியூஸ்வீக் பத்திரிக்கை இவரை 1997இல் உலகத்தில் மிக முக்கியமான நூறு பேர்கள் பட்டியலில் இவரது பெயரையும் சேர்த்திருந்தது. 2011இல் […]
ஒரு காட்டில் வஜ்ரதம்ஷ்டிரன் என்றொரு சிங்கம் இருந்தது. அதனிடம் கிரவ்யமுகன், சதுரகன், சங்குகர்ணன் என்ற பெயருள்ள ஒரு ஓநாயும், நரியும், ஒட்டகமும் மந்திரிகளாக இருந்தன. ஒருநாள் ஒரு மதயானையோடு சிங்கம் சண்டை போட்டது. யானையின் கூர்மையான தந்தங்கள் அதன் உடம்பைத் துளைத்துவிட்டன. அதனால் சிங்கம் ஒதுங்கித் தனிமையில் வசித்து வந்தது. ஏழு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வேதனைப்பட்டது, பசியால் உடம்பு இளைத்துப் போயிற்று. அதன் மந்திரிகளும் பசியால் வாடிப்போயின. அவற்றைப் பார்த்துச் சிங்கம், ‘’எந்த மிருகத்தையாவது தேடிப் […]
ஆடு மேய்க்கிற ஆத்தா போயி அர நாழி ஆயிருச்சு சில்லுவண்டும் கூட்டுசேந்து சத்தம் போடக் கெளம்பிருச்சி கோழிகளும் பத்திரமா தன் கொடப்புக்குள்ள பதுங்கிருச்சி செனை மாட்டத் தேடி வந்த சின்னய்யாவும் போய்த்தாரு மோட்டிலேறிப் பாக்கையில கண்ணுக் கெட்டுன தொலைவுவர மனுச நடமாட்டம்னு எதுவுமில்ல கூத்துப் பாக்க கூட்டம் ஒன்னு பந்தம் கொளுத்தி நவந்து போவுது சுள்ளி பொறக்கி சுடவச்ச கஞ்சிப் பான காஞ்சுக் கெடக்கு கறிக்கி கொண்டாரப் போன அத்தான் பொழுதாயும் குடுசை திரும்பல-காளியாத்தா! எங்கத்தானுக் கொன்னும் […]
இந்த ப்ளாட்டுக்கு வந்தது முதல் இதுவரை எந்த பிரச்சனையும் வந்த்தேயில்லை என்கிற சந்தோச பலூனின் சின்னதாய் ஓட்டை. 1. லிப்டிலிருந்த என்னைக் கையைப்பிடித்து இழுக்காதாவாறு இழுத்து தனது இல்லத்தை நோக்கி இழுத்து சென்றார் நாயர். நாயர் உயரம். பின்னாலிருந்து தள்ளாத குறை. “ தும் ஆக்கே காலி தோக்கோ “ [ நீ வெறுமன வந்து பாரு ] நான் ஏன் அவர் வீட்டுக்கு போய் ஏன் வெறுமனே பார்க்க வேண்டும். அதுவும் அலுவல அவசரத்தில். ’முடியாது’, […]
பாவனைகளும் தோரணைகளும் எங்கோ கண்டதின் சாயலில் வழிகாட்டியோ பின் தொடர்ந்தோ அருகுணர்த்தும் நம் நிழல் போல் சுவர்களை மீறி வரும் ஒலி அறையின் வெக்கையாய் அனல் பரத்தும் நெஞ்சக்கூட்டினுள் உஷ்ணப்பந்தை விழுங்குதல் போல் ஒளிரும் நினைவுகளில் உள்ளக்கிடக்கை விழித்திருக்கும் தன் கண்களை உருட்டியபடி கனல் நீரில் தத்தளிக்கும் துடுப்பற்ற பொத்தல் படகாய் என் அன்னியோன்யத்தில் உலவும் எனக்கே அல்லாத உறவின் முகம் எப்போதுமே கதைத்திருக்கும் தான் கரைந்ததும் கனத்ததுமாய் கண்கள் காணாத முகமற்றவனின் பேச்சொலி செவிகளில் பதியும் […]
வெட்கமின்றி எனக்கு முந்தானைவிரித்தபோது இதையெல்லாம் யோசித்திருக்கவேண்டும். இப்போது சஞ்சலப்பட்டு என்ன பயன்? நான் கூறியதைப்போல பரியாரிவீட்டு பச்சையைப்போய் பார். அவள் ஏதாவது உபாயம் வைத்திருப்பாள். 7. செண்பகத்திற்கு சங்கடமாக இருந்தது. சித்ராங்கியை நினைக்கப் பரிதாபமாக இருந்தது. இருக்கட்டுமே பரிதாபத்துக்குரியவர்களாக ஏழைகள் மட்டுமே இருக்க வேண்டுமா என்ன? சித்ராங்கிக்காக கோபுரவாசலிலும், கொடிக்கம்பத்தருகேயும், பிரகார வெளிகளிலும், ஆயிரங்கால் மண்டபத்திலும் பல ஜெகதீசன்கள் காத்திருக்கிறார்கள். இவளுக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் ? வல்லம்படுகையில் ஒர் அத்தை மகனிருக்கிறான். உற்சவகாலங்களில் வீட்டில் கற்பூர […]
– கெரபொத்தா தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் வரலாற்றில் அதிகமாகத் தண்டனைகள் வழங்கப்பட்ட பூமியை அணைத்தபடி ஏ9 வீதி சாய்ந்திருக்கிறது. பாரிய கலவரமொன்றில் யுத்த டாங்கிகளாலும் கனரக வாகனங்களாலும் துளைக்கப்பட்ட காயங்கள் எக்கணத்திலும் மீண்டும் கிளரப்பட இடமிருக்கிறதெனத் துப்பாக்கிகளும் பங்கர்களும் இராணுவ முகாம்களும் எதிர்வு கூறுகின்றன. முட்புதர்களிடையே ஒளிந்திருக்கும் நிலக்கண்ணி வெடிகள் குறைந்தபட்சம் ஒரு பனங்காயாவது தனது உடலின் மீது விழும்வரை காத்திருக்கின்றன. நாற்புறத்திலும் கேட்கும் சிங்களக் குரல்கள் ‘இம்முறை வந்திருப்பது விருந்தாளிகளாகவல்ல, நிரந்தரமாகத் தங்குவதற்கே’ எனக் […]
ஆங்கில நாவல்களில் காணக்கிடைக்கும் மெலிதான செக்ஸ் எனக்குப் பிடிக்கும். தமிழில் நான் படித்தவரை அது அறவே இல்லை என்று எனக்கொரு கருத்து இருந்தது. அதை மாற்றியவை சுஜாதாவின் கதைகள். அதற்கு முன்னாலெல்லாம் பி.டி.சாமி வர்ணனைகளில் ‘ அவளது மேலுதட்டில் லேசாக ரோமம் பூத்திருந்தது‘ என்ற அளவ்¢லேயே பெண்கள் இடம் பெற்றார்கள். சாண்டில்யன் கொஞ்சம் போல ‘ வழுவழுப்பான வெண்ணைப் பிரதேசம் ‘ என்பார். இதற்கே குமுதம் அவரைச் சுவீகரித்தது. புஷ்பா தங்கதுரை { ஆன்மீகத்துக்கு வேணுகோபாலன் } […]