ஈரத் தீக்குச்சிகள்

This entry is part 4 of 11 in the series 25 டிசம்பர் 2016

  சிறந்த சாதனையாம் சீரிய தலைமையாம் எடுசேவ் விருதப்பா எனக்கு இது மகனின் பெருமை   நன்னடத்தையில் நான்தான் முதலாம் எடுசேவ் விருது எனக்கும் தானப்பாப்பா இது மகளின் பெருமை   பெற்ற பெருமையை அப்பாவிடம் பகிர்வது பிள்ளைக்குப் பெருமைதானே   வீட்டுப் பிரச்சினைகளா? அம்மாவுக்கும் அப்பாதானே   என்னங்க… நாலு அடுப்பிலே மூணு தூங்குது ஒன்னுதான் எரியுது தண்ணீர்க் குழாய் கசியுது அடுத்த வாரம் மாமாவும் அத்தையும் வாராங்க…   குடும்பத் தலைவனுக்கோ தலை போகும் […]

அன்பு ஜெயாவின் திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை – நூல் அறிமுகம்

This entry is part 5 of 11 in the series 25 டிசம்பர் 2016

முனைவர் மு.பழனியப்பன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை கோயில்கள் மாபெரும் கலைப்படைப்புகள். அவை கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, பாடல்கலை, ஆடல்கலை, இயல்கலை போன்ற கலைகளின் இருப்பிடம். அவை சார்ந்து எழுந்த வேதம், ஆகமம், திருமுறை, தத்துவம், திருப்புகழ் போன்றன கோயில்களின்  ஒலிநிலை உயர்வுகள். புராணம், இதிகாசம், சிற்றிலக்கியங்கள் போன்ற படைப்புக்கலை உயர்ச்சிகள். கோயில் பற்றியதான கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றன அழியாத வரலாற்றுச் சான்றுகள். கோயில் அமைவிடம், சுற்றுச் சூழல், […]

ஒரு திரைப்படத்தின் பல உள்வாங்கல்கள்; Via கமல் ஹாஸன்

This entry is part 6 of 11 in the series 25 டிசம்பர் 2016

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் •••••••••••••••••• “”கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய உருவம் என்னைப் போலவே தோற்றம் மாறி நகரத்தில் குறுக்கும் நெடுக்குமாக உலாவுகின்றன.”” ரமேஷ்-பிரேமின் இந்தக் கவிதைக்குள் ஒளிந்திருக்கும் கமல் ஹாஸனின் திரைப்படம் சார்ந்த முற்போக்குச் செல்வாக்கு இன்னும் கடைக்கோடி மக்கள் வரை சென்றடையவில்லை என்பதுதான் உண்மை. ஏனைய தமிழ்ப் படைப்புக்களுடன் ஒப்பிடுகையில் தமிழில்  வெளிவந்த உலக சினிமா அன்பே சிவம் (2003) என்றால் அது மிகையல்ல. உலகின் பல்வேறுதரப்பட்ட Magnum Opus தர படைப்புக்களை தன் ஒரே படைப்பில் […]

தொடுவானம் 150. நெஞ்சில் நிறைந்த அண்ணா.

This entry is part 7 of 11 in the series 25 டிசம்பர் 2016

மீண்டும் விடுதி வாழ்க்கை. தேர்வு முடிவுகள் வந்திருந்தன. எதிர்பார்த்தபடியே சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியியலும்  பாடத்தில் நான் தேர்ச்சி பெறவில்லை. மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து எழுதி தேர்ச்சி பெறலாம். நஞ்சியியலில் அதிகம் கவனம் செலுத்தினால் போதும். ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டாலும், நான் ஐந்தாம் வருடம் வகுப்பில் சேரலாம். இது எங்களுக்கு இறுதி ஆண்டு! இந்த ஆண்டு இறுதியில் மருத்துவம், அறுவை மருத்துவம், பிரசவமும் பெண்கள் நோயியலும் ஆகிய மூன்று முக்கிய பாடங்களில் தேர்ச்சி பெற்றாக வேண்டும். […]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் – 7, 8 , 9

This entry is part 8 of 11 in the series 25 டிசம்பர் 2016

கி.பி. [1044  – 1123] உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1 பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. உமர் கயாம் பழம்பெரும் பாரசீகக் கவிஞர்;  கணித. வானியல், சித்தாந்த விஞ்ஞானி. அவரது புகழ்பெற்ற ‘ருபியாத்’ என்னும் ஈரடிப் பாக்கள் பல மொழிகளில் பல கவிஞர்களால் மொழி பெயர்ப்பாகி உள்ளன. ஆங்கிலத்தில் பலர் மொழி பெயர்த்துள்ளார்.  அவற்றுள் தனித்துவம் பெற்றவை எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு […]

தமிழ்க் கவிதையின் வெளிகள் விரிவடைகிறதா?

This entry is part 9 of 11 in the series 25 டிசம்பர் 2016

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் “பறவைகளைப் படைத்தபின் கடவுளுக்கு வானத்தை விரிவுபடுத்தும் வேலை வந்து சேர்ந்தது” -கலாப்ரியா கவிதைகள். இதுபோன்ற தலைப்புக்களை இடும்போது சமகாலத்தினூடாக பயணிக்கின்ற கவிதையின் சாராம்சங்கள் என்ற அர்த்தத்தில் தான் ஆராயவேண்டும். இருபதாம் நூற்றாண்டில் பிறந்த நான் இருபத்தோராம் நூற்றாண்டிலும் வாழ்கிறேன். இது நூற்றாண்டுகளுக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால் எனது பார்வையில் இது பெரும் சாதனையாக இருக்கலாம். அதே போல கவிதைகளும் இருக்கமுடியாது. சங்ககால மரபையோ, கம்பன் கால விருத்தப்பாவையோ, பாரதிகால புரட்சியையோ மட்டும் கவிதையில் இன்றும் […]

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இலக்கியப் போட்டிகள்

This entry is part 10 of 11 in the series 25 டிசம்பர் 2016

அன்புடையீர் வணக்கம் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இலக்கியப் போட்டிகள் பற்றிய அறிவிப்பினைத் தங்களின்தளத்தில் இட்டு பரவாலக்க வேண்டுகிறேன். அன்பு மு.பழனியப்பன் மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் ரூபாய்க்கான பரிசுப் போட்டிகள் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணப் போட்டிகள் – கம்பராமயண ஒப்பித்தல் போட்டி -1 பேரா. மு.பழனியப்பன் தன் தந்தையார் பெயரால் நிறுவியுள்ள தமிழாகரர் பழ. முத்தப்பனார் பரிசு. பிரிவு -9,10,11,12 மாணாக்க மாணக்கியர்களுக்கானது. நாள்- 28.1.2017 நேரம் 0 9.30 மணி இடம்- கிருஷ்ணா […]

ஈழக்கவிஞர் கருணாகரனின் கவிதைகளில் நிலம் சார்ந்த பார்வை…..

This entry is part 3 of 11 in the series 25 டிசம்பர் 2016

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் ================= “மிளாசி எரிந்தது பனங்கூடல். காற்றில் எரிந்தன பறந்த பறவைகளும் அவற்றின் கூடுகளும்” -‘நடனம்’- கருணாகரன் கவிதைகள். ● 2007 ம் ஆண்டில் வவுனியாவில் நான் சாதாரணதரம்(தரம் 10) கற்றுக்கொண்டிருக்கும் போது கருணாகரன், சேரன், ஒளவை, சோலைக்கிளி, முல்லை முஸ்ரிபா, செழியன், அனார், ஊர்வசி, மைத்திரேயி, ஆழியாள்  முதலான ஈழக்கவிஞர்களின் கவிதைகளுடன் சேர்த்து ஆபிரிக்கக் கவிஞர் கெப்ரியல் ஓகராவின் கவிதைகளும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தது. கவிதைமீது உண்டான பெருவிருப்பினால் தட்டிக்கழிக்காது அனைத்தையும் வாசித்துவிடுவதுண்டு. அந்த வாசிப்பினால் […]

திரும்பிப்பார்க்கின்றேன் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் இளங்கீரன்

This entry is part 11 of 11 in the series 25 டிசம்பர் 2016

முருகபூபதி – அவுஸ்திரேலியா   இலங்கைத்தமிழ்ச்சூழலில்     ஒருவர்    முழு நேர    எழுத்தாளராக வாழ்வதன்    கொடுமையை    வாழ்ந்து     பார்த்து   அனுபவித்தால்தான் புரியும்.     எனக்குத்தெரிய     பல      முழுநேர      தமிழ்    எழுத்தாளர்கள்  எத்தகைய    துன்பங்களை,     ஏமாற்றங்களை,     தோல்விகளை, வஞ்சனைகளை,     சோதனைகளை      சந்தித்தார்கள்     என்பதை     மனதில் பதிவு செய்யத்தொடங்கியபோது      அவர்களின்       வாழ்வு       எனக்கும்  புத்திக்கொள்முதலானது. நான்      எழுத்துலகில்    பிரவேசித்த     காலப்பகுதியில் மினுவாங்கொடையைச்சேர்ந்த     நண்பர்      மு.பஷீர்,       எங்கள் இலக்கியவட்டத்தின்        கலந்துரையாடல்களின்போது       குறிப்பிடும்    பெயர்:-     இளங்கீரன்.      இவரது      இயற்பெயர்      சுபைர்.      இவரும்     முழு நேர    எழுத்தாளராக     […]

வண்ணதாசனுக்கு வாழ்த்துகள்

This entry is part 2 of 11 in the series 25 டிசம்பர் 2016

  எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டு எங்கெங்கும் அவரைப்பற்றிய உரையாடல்கள் பெருகிப் பரவிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் சாகித்ய அகாதெமி விருதும் அவரைத் தேடி வந்திருக்கிறது. அவருடைய ஒரு சிறு இசை என்னும் சிறுகதைத்தொகுதிக்காக அவர் இவ்விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது அவருடைய பன்னிரண்டாவது சிறுகதைத்தொகுதி. இதையடுத்து நாபிக்கமலம் என்னும் தலைப்பில் ஒரு தொகுதியும் வந்துள்ளது. கலைக்கமுடியாத ஒப்பனைகள் தொடங்கி நாபிக்கமலம் வரைக்கும் அனைத்துத் தொகுதிகளுமே தமிழுக்குப் பெருமை சேர்ப்பவை. சங்க காலத்தில் குறிஞ்சித்திணையைப் பாடிய கபிலரைப்போல, பாலைத்திணையைப் […]