SAVE THE DISTRESSED AT UDAVUM KARANGAL

This entry is part 1 of 17 in the series 6 டிசம்பர் 2015

THE TITANIC EXPERIENCE  ………….. SAVE THE DISTRESSED AT UDAVUM KARANGAL I am sure you are all aware that one of our Units – Karunai Illam at Maduravoyal was totally sunk last week and all the 150 women patients were evacuated over night and relocated at our Unit – SHANTHIVANAM at Thiruverkadu.  Since then, all the […]

சென்னை மழையில் ஒரு நாள்

This entry is part 5 of 17 in the series 6 டிசம்பர் 2015

கடந்த ஒரு மாதமாக சென்னையை மழை புரட்டி போட்டு வருகிறது.தீபாவளிக்கு முந்தைய மழையிலேயே தாம்பரத்தில் உள்ள எங்கள் வீட்டின் உள்ளே தண்ணீர் வந்து விட்டது.54 ஆண்டுகளுக்கு முன் தாம்பரத்தில் அப்போதைய தபால்துறை அமைச்சர் டி டி கே பெயரில் உருவாக்கப்பட்ட நகர்.அப்பா தபால்துறை ஊழியர். 33 ஆண்டுகளுக்கு முன் வீடு கட்டப்பட்ட போது நகரை சுற்றிலும் வயல்கள் தான்.நகரே ஒருவருடைய வயல் தான்.கிராமம் இரும்புலியூர்.வீட்டுக்கு பக்கத்துக்கு மனை தேசமுக்தி அம்மன் கோயில் நிலம்.தனியார் வசம் இருந்த கோவில் […]

அய்யனார் கதை

This entry is part 6 of 17 in the series 6 டிசம்பர் 2015

  சேயோன் யாழ்வேந்தன்   அய்யனாரும் ஒரு காலத்தில் பக்காவான கோபுரம் வைத்த கருங்கல் கட்டட கோயிலுக்குள் சப்பாரம் தேர் என்று சகல வசதிகளுடன் இருந்தவர்தான். கோயிலுக்குள் இவன் நுழையக்கூடாது, தேர் அவனிருக்கும் தெருவுக்குள் போகக்கூடாது என்பன போன்ற சண்டைகளால் தேர் எரிந்து கோபுரம் தகர்ந்து தெருவுக்கு வந்துவிட்டார். இப்போது பாகுபாடில்லை பண்டிகை மோதல் இல்லை ஊருக்கு வெளியில் இருந்தாலும் எல்லோர் உள்ளத்திலும் அய்யனார். seyonyazhvaendhan@gmail.com

மாமழையும் மாந்தர் பிழையும்!

This entry is part 2 of 17 in the series 6 டிசம்பர் 2015

மேகலா இராமமூர்த்தி   தமிழகத்தின் நீராதாரத்திற்கு அடிப்படையான வடகிழக்குப் பருவமழை (Northeast monsoon) இவ்வாண்டு பொய்யாமல் பெய்துள்ளது. வந்த ஓரிரு நாட்களிலேயே விரைவாய் விடைபெற்றுச் சென்றுவிடும் கடந்த ஆண்டுகளின் மழைபோலல்லாது, இவ்வருடத்திய மழை மிக்க வாஞ்சையோடு தமிழகத்தில் ஓரிரு வாரங்கள் தங்கிப் பெய்திருக்கின்றது.   விளைவு…? சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், புதுவை, சிதம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான வட மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன; மக்களோ கண்ணீரில் மிதக்கின்றனர். ’அமிழ்தம்’ என்று வள்ளுவரால் வர்ணிக்கப்பட்ட பெருமைமிகு மழைக்குச் […]

பிரபஞ்சம் தொடர்ந்து விரிவதை நோக்கிய வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள்

This entry is part 4 of 17 in the series 6 டிசம்பர் 2015

  (1889-1953) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/bPMW7Q77p74 https://youtu.be/k8fS_W4ZI1A  https://youtu.be/mUNP1Zd_IuM ​                             ​ https://youtu.be/dB4-hoe8KDI விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன!  அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக  வைத்துள்ளது! […]

படித்தோம் சொல்கின்றோம் – குழந்தைப்போராளி நவீனம்

This entry is part 3 of 17 in the series 6 டிசம்பர் 2015

முருகபூபதி – அவுஸ்திரேலியா சாவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த குழந்தைப் போராளிகளின் மௌனத்தை உடைக்கும் புதினம் வழி தவறிச்சென்ற ஒரு ஆட்டுக்குட்டியின் கதை அம்மாவை இழந்து துப்பாக்கியை ஏந்திய சைனா கெய்ரெற்சியின் குழந்தைப்போராளி நவீனம் ” ஏகே 47 துப்பாக்கியுடன் ஒவ்வொரு குழந்தையும் மூன்று ரவைக் கூடுகளை அணிந்துகொள்கிறார்கள். சிலர் ஆறு ரவைக் கூடுகளைக்கூட கட்டியிருப்பார்கள். இந்தச் சுமையைப்பற்றி எங்களுக்கும் கவலையில்லை. எங்கள் தலைவர்களுக்கும் கவலையில்லை. எந்தப்பாரத்தைச் சுமந்தாவது, என்ன வித்தை காட்டியாவது தலைமையின் கவனத்தைப் பெற்றுவிடுவதில் குழந்தைகள் […]

நித்ய சைதன்யா – கவிதை

This entry is part 7 of 17 in the series 6 டிசம்பர் 2015

நித்ய சைதன்யா 1.வெறும் நகரம் எதிர்கொண்டழைக்க யாருமற்ற நகரத்தின் சாலைகளில் எங்கும் இல்லை மண்வாசம் தேவதைகள் வாழும் அறைகளற்று தாள்சிக்கிக் கிடக்கிறது நகரத்தின் வாசல்கள் தெருக்கள்தோறும் தெய்வங்கள் வெறித்து நிற்கின்றன உக்கிரம் தகிக்கும் கொடைகள் ஏங்கி பேய்கள் சுமக்கும் மரங்களற்றும் இசக்கிகள் வாழும் வனங்களற்றும் வெம்பரப்பாய் விரிந்துள்ளது நகரத்தின் வீதிகள் பலர்கூடி வாழும் இந்நகரத்தின் ஓர் இளிப்பு என்னை வெறியேற்றிக் கொண்டே இருக்கிறது. பா.சங்கரநாராயணன் (நித்ய சைதன்யா) தாமிரபரணி நகர் விக்கிரமசிங்கபுரம் திருநெல்வேலி 7418425626    

தொடுவானம் 97. பிறந்த மண்

This entry is part 8 of 17 in the series 6 டிசம்பர் 2015

  தரங்கம்பாடியில் தங்கியிருந்தபோது அண்ணியும் நானும் வேளாங்கண்ணி கோயில் சென்றுவந்தோம். அண்ணி மாதா மீது நம்பிக்கை கொண்டவர். நாங்கள் மெழுகுவர்த்தியும் மாலையும் வாங்கிச் சென்றோம். எனக்கு தேர்வில் வெற்றி கிட்டவேண்டும் என்று என்று அண்ணி வேண்டிக்கொண்டாராம். இதெல்லாம் ஒருவிதமான நம்பிக்கைதான். தேர்வில் தேறுவது நம் கையில் உள்ளது. ஒழுங்காகப் படித்தால் தேறலாம். படிக்காமல் சாமிக்கு காணிக்கைப் படைத்தால் போதுமானது என்று படிக்காமல் தேர்வுக்குச் சென்றால் தோல்வி நிச்சயம்தான்!           கோயிலிலிருந்து கடல்கரை வரை உள்ள வீதியின்  இரு […]

காடு சொல்லும் கதைகள்

This entry is part 9 of 17 in the series 6 டிசம்பர் 2015

  ஆதிகால மாந்தன் இயற்கையைக் கண்டுதான் முதலில் அச்சப்பட்டான். அதனால்தான் அதைத் தெய்வமாக வணங்கத் தலைப்பட்டான். இறைவன்தான் இயற்கையின் வடிவாய் இருக்கின்றான் என்று பல சமயச் சான்றோர்கள் கருதியதால்தான் “வானாகி, மண்ணாகி, வளியாகி ஒளியாகி” என்று பாடினர். நிலம், நீர், தீ, காற்று, மண் என்று எல்லாமே நமக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாம்தான் அவற்றை முழுக்கச் சுரண்டும் பணியை மெதுவாகச் செய்து கொண்டிருக்கிறோம். குறிப்பாகக் காடு நமக்கு இயற்கை அளித்த […]