ஓர் எழுத்தாளனின் வாசலில்… “யதார்த்தமாய்….பதார்த்தமாய்…”

This entry is part 22 of 23 in the series 15 பெப்ருவரி 2015

ராஜ்ஜா, புதுச்சேரி [ கட்டுரையாளர் புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி மையத்தின் ஆங்கிலப் பேராசிரியர். தற்போது ஓய்வு பெற்றுள்ளார். ‘Transfire’ என்ற ஆங்கில மொழிபெயர்ப்புக் காலாண்டிதழின் ஆசிரியர் ] கடலூருக்குப் பக்கத்தில் உள்ள பாலூருக்குப் போக வேண்டியிருந்தது. அந்தக் கிராமத்தில் இருக்கிற ஜோசியக்காரரைப் பார்க்க வேண்டுமாம் என்மனைவி பெரியநாயகிக்கு. எல்லாம் எங்கள் மகள் திருமணம் சம்பந்தமாய்த்தான். எனக்கு இந்த ஜோசியத்திலும் கீசியத்திலும் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை என்றாலும் யாருடைய நம்பிக்கையிலும் […]

இலக்கியப்பார்வையில் திருநங்கைள்

This entry is part 23 of 23 in the series 15 பெப்ருவரி 2015

வைகை அனிஷ் இந்தியவரலாற்றில் கறைபடிந்தவர்களாக, தீண்டத்தகாவர்களாக கருதும் மனோபாவம் அனைத்து தரப்பினரிடமும் உள்ளது. நமது தமிழ் மற்றும் இலக்கிய நூல்களிலும், மதங்களின் பார்வையிலும் திருநங்கைகள் எவ்வாறு பார்க்கப்படுகின்றார்கள். காலனிய அரசியலில் திருநங்கைகள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள், காலனிய அரசியலுக்கு முன்பு அவர்களின் மதிப்பு எவ்வாறு இருந்தது என்பதைப்பற்றியம் திருநங்கையர் சமூகம் குறித்து இரக்கமற்ற அரசு அதிகார வர்க்கத்தினரும், அதற்கு உடந்தையான ஆதிக்க சாதியினரும் திருநங்கைகளை எவ்வாறு அலைக்கழிக்கப்படுகின்றனர் என்றும் தற்பொழுது அவர்களின் நிலை என்ன என்பதைப்பற்றியும் குறிப்பாக சங்ககாலத்தில் […]

பண்பாட்டு நோக்கில் பாதாதி கேசம், கேசாதி பாதம் ஆகிய சிற்றிலக்கியங்களின் வளர்ச்சி

This entry is part 1 of 23 in the series 15 பெப்ருவரி 2015

  முனைவர் மு.பழனியப்பன் இணைப்பேராசிரியர் அரசு தலை மற்றும் அறிவியல் கல்லூரி தேவகோட்டை   பதிற்றுப் பத்து, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை போன்ற சங்க இலக்கியப் பனுவல்களில் பாடினி, விறலி பாத்திரம் மிக முக்கியமான பாத்திரமாக இடம்பெற்றிருக்கும். இப்பாத்திரம் கேசம் முதல் பாதம் வரை வருணனை செய்யப்பட்டுள்ள திறம் படிப்பவர் மனதில் விறலி பற்றிய அழகான சித்திரத்தை படியச்செய்யும். இவ்வருணனை பிற்காலத்தில் ஒரு சிற்றிலக்கிய வகையாகத் தோற்றம் பெற்றது. சங்க இலக்கியத்தின் அடிப்படையில் தமிழ் இலக்கிய வகைமையில் […]