(Subduction Zones Drift & Sea-Floor Spreading) [2] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா கால்பந்து ஒட்டுபோல் தையலிட்ட கடற் தளத்தின் மேல் கோல மிட்டுக் காலக் குயவன் எல்லை வரைந்த ஓவியப் பீடங்கள் நடம் புரியும் கடலில் மிதந்து ! நண்டு போல் நகர்ந்து, கண்டத் தட்டுகள் இங்குமங்கும் துண்டு துண்டாய்ச் சேரும், பிரியும் கடல் சூழ்ந்திட ! நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முந்தி இந்தியா உந்தி நகர்ந்து ஆசியாவுடன் முட்டிப் படிப் […]
43-வயதான முகம்மது அப்ஜல் குரு(Mohammad Afzal Guru) தூக்கிலிடப்பட்டுள்ளான். 2001-ல் பாராளுமன்றத்தின் மேல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் சதிப் பின்ணணியில் முக்கிய பங்கு வகித்த குற்றத்திற்காக உச்ச நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட பின் அப்ஜல் குருவின் தூக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. முகம்மது அஜ்மல் அமீர் கசாப் (Mohammad Ajmal Amir Kasab) தூக்கிலிடப்பட்டு மூன்று மாதங்களுக்குள் இன்னொரு தூக்கும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மரணதண்டனைக்கெதிரான வலுவான வாதங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தான். திண்ணையில் வெளியிடப்பட்ட […]
குரான் அடிப்படையிலான இறைச் சட்டம் மாறாத் தன்மை கொண்டது. குரான்,ஹதீஸ் இவற்றோடு இஜ்மா,இஜ்திஹாத் இணந்த ஷரீஅ மாறும்தன்மை கொண்டது.ஷரீஅ என்ற சொல்லுக்கு பாதை என்று பொருள். ஏனெனில் இதன் உருவாகத்திலும் வடிவமைப்பதிலும் அந்தந்த நாடுகளின் மார்க்க அறிஞர்களின் பங்களிப்பு உள்ளது. அதுபோல் குரானையும் ஷரீஆவையும் வாசித்து பொருள்கொள்வதில் வெவ்வேறு அர்த்த நிலைபாடுகள் உள்ளன என்பதையும் புரிந்து கொள்ளமுடியும். இது தொடர்பான குறிப்பாக ஒன்றிரண்டை மட்டும் மாதிரிக்காக சொல்லலாம். 1) குரானிய சட்டத்தில் பாலியல்குற்றத்திற்கு கல்லெறிந்து கொள்ளும் தண்டனை […]
முஷர்ரப்( முஷாபி ) இலங்கை அண்மையில் அதிக கவனம் பெற்ற விஸ்வரூபம் திரைப்படத்தை சென்னை ‘வூட்லன்ட’; திரையரங்கில் முதல் நாளன்றே பார்க்க முடிந்தது. பெரும் விமர்சனத்திற்கள்ளான இத் திரைப்படத்திற்கான டிக்கட்டுக்களை பெறுவது குதிரைக் கொம்பாகவே இருந்தது. தமிழ் நாடு முழுவதும் ரஜினிகாந்த் படத்திற்கு இருக்கும் வரவேற்பை கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் வழங்கியிருந்தமைக்கு இத்திரைப்படம் தொடர்பாக எழுந்த எதிர்ப்புகளும், அரசியல் ஊடுறுவல்களுமே காரணம் எனலாம். இதற்காக முஸ்லிம் அமைப்புகளுக்கும், ஜெயலலிதாவிற்கும் கமல் ரசிகர்கள் நன்றி சொல்லக் […]
கோசின்ரா வேலிக்குப்பால் நின்றிருந்த மனிதன் மேற்கு திரிபுராவிலிருக்கும் கமலா சாகரின் மா காளி கோவில் முன்னால் பெரிய சதுர குளம் குளத்தின் இரண்டு பக்கத்தில் இரண்டு ஆள் உயர இரும்பு வேலிகள் போகின்றன வேலிக்கு அந்தப்பக்கம் வயலில் வேலை செய்கிறார்கள் அழைத்து சென்றவன் சொன்னான் அவர்கள் பங்களாதேசத்தவர்கள் வேலிக்குப்பால் நின்றிருந்த மனிதன் என்னை வேடிக்கை பார்க்கின்றான் நான் அவனை பார்ப்பதைப் போல பார்க்குமளவுக்கு எதுவுமில்லை இருவரிடமும் வேடிக்கை பார்த்தவனின் தாத்தா வாழும் பொது அவன் நிலத்திற்கு பெயர் […]
மங்கையைப் பாடுவோருண்டு மழலையைப் பாடுவோருண்டு காதலைப் பாடுவோருண்டு கருணையைப் பாடுவோருண்டு அன்னையைப் பாடுவோருண்டு அரசினைப் பாடுவோருண்டு கைராட்டினத்தைப் பாடுவாருண்டோ? கதரினைப் பாடுவாருண்டோ? என வியக்கலாம். கவிஞர்களின் கற்பனையில் உதிக்கும் கவிதைகளின் பாடு பொருட்களுக்கும், பாட்டுடைத் தலைவர்களுக்கும் வரம்பில்லை என்பதைத் தெளிவாக்குகிறார் பாரதிதாசன். இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில், இருபது பக்கமேயுள்ள கவிதை நூல் ஒன்றினை “கதர் இராட்டினப்பாட்டு” என்ற தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறார் பாரதிதாசன். அக்கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் போற்றுவது கதரையும் கைராட்டினத்தையும். புதுவை […]
“நேற்றிரவு இளவரசி யசோதரா மாளிகையில் ராஜ வைத்தியர் விரைந்து வந்தாராமே? இரவில் நீங்கள் யாருமே தூங்கவில்லையா?” என்றாள் ரத்ன மாலா. பெரிய மர உரலில் கெட்டித்தயிர். அதன் மத்தியில் மூன்றடி நீளமுள்ள ஒரு மத்து. அவள் லாகவமாக கயிற்றால் கட்டி முன்னும் பின்னுமாய் அசைக்கக் கடைந்து கொண்டிருந்தது மத்து. அது சரியாமல் சுவரிலிருந்து நீண்ட ஒரு வெண்கலக் கொக்கியின் முனையில் இருந்த வளையத்துள்ளே சுழன்றது. “அதை ஏன் கேட்கிறாய்? இளவரசிக்கு சித்தார்த்தர் காடுகளில் வைராகியாகத் திரிகிறார் என்று […]
சார்… என்னை மாதிரி ஒரு முட்டாள நீங்க பார்த்து இருக்கீங்களா… இருக்காதுன்னு தான் நெனக்கறேன்… என்ன நடந்துச்சுன்னு நீங்க கேட்டீங்க.. உங்களுக்கும் அந்த நம்பிக்கை என் மேல உறுதியா வந்தே தீரும்… வாழ்க்கையில எப்பவாவது ஒரு தரம் அதிர்ஷ்டம் வரும்ன்னு சொல்வாங்க.. அதுவும் அலாவுதீனுக்கு கெடைச்ச அற்புத விளக்கு மாதிரி ஒரு பொருள் நம்ம கைக்கு கெடைச்சி… அதனால நமக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டோன்னு கொட்டிச்சினா… சொல்லவே வேண்டாம்… அப்படித்தான் எனக்கு ஒரு பொருள் கெடைச்சது… அது […]
பூமி நோக்கி ஒலிமிஞ்சிய வேகத்தில் வந்த விண்கல் வெடித்து ரஷ்யாவில் 1200 பேர் காயம் [பிப்ரவரி 15, 2013] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும். இந்நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக்கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 30 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர்கல்லூரி, புதுக்கோட்டை.E. Mail: Malar.sethu@gmail.com காப்பிய நூல்களுள் காலத்தால் முற்பட்டது சிலப்பதிகாரம் என்னும் காப்பியமேயாகும். சிலம்புக் காப்பியம் தமிழகத்தின் மூவேந்தர்களாகிய சேரர், சோழர், பாண்டியர் என்பார் மூவர்க்கும் உரியதாகும். காப்பியத் தலைவியாகிய கண்ணகி சோழநாட்டில் பிறந்தாள். பாண்டிய நாட்டில் தன் கற்பின் பெருமையை நிறுவினாள். சேரநாடு சென்று வானகம் அடைந்தாள். இதனால்தான் காப்பிய ஆசிரியர் சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டு வந்த மூன்று நாடுகளின் பெருமையையும் முறையாக எடுத்துரைக்கின்றார். இதனை சீத்தலைச் சாத்தனார், ‘‘முடிகெழு […]