ஆசை வெட்கமறியாதோ..?

This entry is part 1 of 5 in the series 18 பிப்ரவரி 2024

 குரு அரவிந்தன் (நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள். ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது,மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது.சரியா பிழையா தெரியவில்லை. ) எழுபது கிலே மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள். இப்படியான முகஅலங்காரங்களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் […]

கூடிய காதல் 

This entry is part 2 of 5 in the series 18 பிப்ரவரி 2024

ஆர் வத்ஸலா ஒன்று விட்ட அத்தை பையன்  சிறு வயதில் அவனுக்கு‌ இணையாக மரமேறி விழுந்து பாட்டியிடம் “கடங்காரி” திட்டும்  அம்மாவிடம் அடியும் மருத்துவர் அப்பாவிடம் மாவு கட்டும் கிடைத்தன தாவணி போடுகையில் சினிமாத்தனமான ரோஜா நிறக் கனவுகளில் அவனுடன் பேசி இருக்கிறாள் விழித்தவுடன் பயந்திருக்கிறாள் அம்மாவை நினைத்து புடவை உடுத்திய பின் அவன் வீட்டுக்கு வருகையில் அம்மா சொல்படி அவள் கொடுக்கும் காபியை விரல் படாமல் வாங்கிக் கொள்வான் அவன் மணப் பேச்சை அம்மா எடுத்த […]

என்னுடைய உடல் நோய் மனதின் வீடாக இருக்கிறது

This entry is part 3 of 5 in the series 18 பிப்ரவரி 2024

ஹிந்தியில் : முஸாபிர் பைட்டா தமிழில் : வசந்ததீபன் ______________________________ நான் எங்கும் சுற்றித் திரிய விரும்பமில்லை இங்கே வரை என எனது பிறந்த பூமி பங்க்ராஹா வீட்டின் அருகே தான் அமைந்துள்ளது சொல்லப்படும் சீதாவின் பிறந்த இடம் சீதாமடீயும் ( தோதி வந்தனை சிறந்தாக இல்லை சமூக காரியங்களின் சம்பந்தத்தில் தான் இருக்கிறது )  நான் ஊனமுற்ற நம்பிக்கையில் விசுவாசம் வைப்பதில்லை .  என்னுடைய இரண்டு கைகள் பாதுகாப்பானதாக இருக்கின்றன ஆதாராமாக இருக்கின்றன ஆனால் இவைகள் […]

தள்ளாமை

This entry is part 4 of 5 in the series 18 பிப்ரவரி 2024

ஆர் வத்ஸலா தள்ளாடி தள்ளாடித் தான் நடக்க முடிகிறது இப்போதெல்லாம் என் கால்களின் வழியே  ஏற‌ முயற்சித்துக் கொண்டிருக்கிறது தள்ளாமை அதனை தோற்கடிக்கும் முயற்சியில் தீவிரமாக நானும் எதற்கும் இருக்கட்டும்  என்று என்னவர் வாங்கி வைத்த சக்கர நாற்காலி   அமர்ந்திருக்கிறது எங்கள் அறையின்  ஒரு மூலையில்  என்னை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு வீட்டுக்குள்  நடக்கிறேன்  அடி கணக்கு ஒப்பிக்கும் கருவியை சுமந்தபடி தினமும் மும்முறை மருத்துவர் சொன்னபடி மைல் கணக்கில் நடந்தாலும் இரண்டாயிரம் அடிகளே நடந்ததாக  கூறுகிறது […]