முந்தி வசப்படுத்த வழியில்லை என்றால் வாய்ப்பு என்றதற்குப் பெயரில்லை நாற்காலியின் கால்களாய் உறவு முறைகள் உள்ளார்ந்து அதிகாரம் சுமக்கும் பெயர்களில் வாய்புக்கள் பரிமாறா உறவினன் ஆயிரம் பாதங்கள் பட்டதால் ஒற்றையடிப் பாதையில் முளைக்காது ஒதுங்கிய செடி தற்செயலாய் அமைவதில்லை தடங்கள் வாய்ப்புக்களின் மறுபக்கமாய்ட அல்லது வழித் தடமாய் வெகுஜனமில்லாத் தடம் நேரம் உருவம் பாத ஒலிகள் எதிரொலிக்கும் குரைச்சல்கள்
கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக ‘நவீன விருட்சம்’ என்ற சிற்ரிதழை நடத்திக்கொண்டுவருபவர் எழுத்தாளர் அழகியசிங்கர். ( இயற்பெயர் சந்திரமௌளி) முதலில் விருட்சம் என்ற பெயரில் மாத இதழாக வெளிவந்தது பின்னர் நவீன விருட்சம் என்ற பெயரில் காலாண்டிதழாக வரத் தொடங்கியது. இதன் இணையதளமும் இப்போது தொடர்ச்சியாக இயங்கிவருகிறது. குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் குறும்பேட்டிகளை காணொளி வடிவில் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவருகிறார். மேலும், ’விருட்சம் வெளியீடு’ சார்பில் கணிசமான எண்ணிக்கையில் சக எழுத்தாளர்களின் படைப்பாக் கங்களைத் தொடர்ச்சியாக நூல் வடிவில் […]
அன்புடையீர் வணக்கம். எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் நடத்தப்படவிருக்கும் அனைத்துலக பெண்கள் தின விழா தொடர்பான செய்தியை இத்துடன் இணைத்துள்ளோம். இதனை தங்கள் இதழில் இணைத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் மிக்க நன்றி. அன்புடன் லெ.முருகபூபதி (துணைத்தலைவர்) அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம். மெல்பனில் அனைத்துலக பெண்கள் தின விழா மறைந்த பெண்ணிய ஆளுமைகள் அருண்.விஜயராணி – தமிழினி நினைவுரை அனைத்துலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் எதிர்வரும் மார்ச் 06 ஆம் […]
அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 425க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள். நன்றி. சித்ரா சிவகுமார்
திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம், 2015சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்புக்கான விருது தமிழில் எனக்கு கிடைத்திருப்பதாக செய்தி வந்துள்ளது. ( } http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/Press_Release_(English)_SATA_2015.pdf கௌரி கிருபாநந்தன்
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அடைக்கலாபுரம் [ தூத்துக்குடி மாவட்டம் ] என்ற ஊர்க்காரர் வைகறை ; பள்ளி ஆசிரியர் . இத்தொகுப்பில் 26 கவிதைகள் உள்ளன. காதல் கவிதைகள் சுயமானவை. இவருக்குக் கவிமொழி வாய்த்திருக்கிறது. பெண் தொடர்பான புதிய சிந்தனைகள் , படிமங்கள் அமைந்துள்ளன. கவிதைத் துறைக்குப் புதியவர் என்பதால் சில சறுக்கல்களும் உள்ளன. தாஜ்மகால் பல கவிதைகளில் இடம் பெற்றுள்ளது. ‘ பூங்காவே … ‘ என்னும் கவிதையில் … சவுக்கியமாய் அமர்ந்து சங்கதி கேட்டபோது பூங்கா […]