நடுவுல கொஞ்சம் “பட்ஜெட்டை”க்காணோம்.

This entry is part 3 of 26 in the series 22 பெப்ருவரி 2015

  கொஞ்சம் என்ன‌ நெறயவே காணோம். பைண்டு பண்ணுன புத்தகத்த‌ தெறந்தா முதல் அட்டையும் கடைசி அட்டையும் மட்டும் தான் பத்திரமா இருக்கு! அறுபது ஆண்டுகளுக்கும் மேலாய் இந்த “பண்டோரா” பெட்டியை திறந்து கொண்டே திறந்துகொண்டே இருக்கிறார்கள். திறக்கும் போதே மூடிக்கொண்டே திறந்து கிடப்பது போல் காட்டும் அற்புதப்பெட்டி இது. வறுமைக்கு கோடு போட்டவர்கள்….. எல்லாருக்கும் எல்லாமும் இதோ என்று கனவுகளை பிசைந்து தின்னச்சொன்னவர்கள்…… ஐந்தாண்டு திட்டங்களின் ரங்கோலி வரைந்தவர்கள்….. ராமராஜ்யம் எனும் அதிசயம் உள்ளே அடைந்து […]

மணமுறிவைச் சந்திக்கும் ஒரு பெண்ணின் அவஸ்தை ஆத்மதாகம்- இடைமருதூர் கி.மஞ்சுளா நாவல்

This entry is part 4 of 26 in the series 22 பெப்ருவரி 2015

  சுப்ரபாரதிமணியன்   ஆணின் துணையில்லாமல்  வாழ்வது பெண்ணுக்கு தரும் சிரமங்கள் அளவில்லாத்துதான். தநதையின் இழப்பு அது போன்ற சம்யங்களில்  பெரிய இடிதான். அப்படியொரு பெண்ணின் அனுபவங்களை விவரித்திருக்கிறார் இடைமருதூர் கி.மஞ்சுளா இந்த நாவலில். நீதிமன்ற வாசலில் அவள் சந்திக்கும் வெவ்வேறு நபர்கள் இன்னும் வேதனை தருகிறவர்கள். விவாகரத்து முடிந்து விட்டால் போது  . நீதிமன்றத்திற்கு வந்து போகும் செலவாவது மிஞ்சுமென்று  ஏக்கப்படும் சில iபெண்கள். குழந்தைக்காக விட்டுக்கொடேன் என்று ஏங்கும் சிலர்.சில உறவுகளை நகங்களை வெட்டுவது போல் […]

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்

This entry is part 21 of 26 in the series 22 பெப்ருவரி 2015

  வைகை அனிஷ் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலை உள்ளது. இந்தியா வல்லரசுக்கு இணையாக நவீன தொழில்நுட்பத்தையும் தொலைதூரத்தில் எதிரிகளை இனம் கண்டு தாக்கும் ஏவுகனைகளை தயாரித்தாலும் மனிதனின் மான்பை இழிவுபடுத்தும் வகையில் கையினால் மலம் அள்ளுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. நகரப்பகுதிகளில் திரையரங்குகள், அடுக்குமாடி வீடுகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப்பகுதிகளில் இயந்திரங்களைக்கொண்டு கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இவை […]

விளக்கு விருது அழைப்பிதழ்

This entry is part 5 of 26 in the series 22 பெப்ருவரி 2015

              கோணங்கியின் விருப்பப்படி 28.2.2015 அன்று கோவில்பட்டியில் விளக்கு விருது விழாவை ஏற்பாடு செய்துள்ளோம். அன்றைய தினம் விளக்கு விருது சான்றிதழ் மற்றும் தொகையை வழங்குகிறோம். அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறேன். நன்றி. அன்புடன், பொன். வாசுதேவன்

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : கரும் பிண்டத்தின் ஊடே பரிதி மண்டலம் சுழல்வதால் பூமியில் நேரிடை உயிரினப் பாதிப்பு, மாறுதல் நேர்கிறது

This entry is part 6 of 26 in the series 22 பெப்ருவரி 2015

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ http://www.educatedearth.net/video.php?id=3459 http://education-portal.com/academy/lesson/hot-cold-dark-matter-wimps.html http://www.dailymail.co.uk/sciencetech/article-2959836/Could-DARK-MATTER-lead-demise-Mysterious-particles-trigger-volcanic-eruptions-comet-strikes-Earth.html#v-3938513637001 ++++++++++++++++++++ காலக் குதிரையின் ஆழியைச் சுற்றுவது பரிதி. ஊழியின் கரம் பூமியில் வண்ண ஓவியம் வரைவது ! பால்வெளி மந்தை சுற்றும் போது கரும்பிண்டம் சேர்ந்து, பூமியின் உட்கருவில் சூடு மிகும் ! தொடரியக்கம் தூண்டி வெடிக்கும் எரிமலை,  இடிக்கும் பூகம்பம் ! உயிரினப் பாதிப்புகள் உண்டாகும் ! பூமி ஒரு வெங்காயம் ! உடுப்புத்  தட்டுகள் அடுக்கடுக் காய் அப்பித் […]

சீஅன் நகரம் -3 உலகின் எட்டாம் அதிசயம்

This entry is part 7 of 26 in the series 22 பெப்ருவரி 2015

  சீ’அன் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதே, அங்கு அகழ்ந்து எடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டெரகோட்டா என்று கூறப்படும் களிமண் வீரர்களும், குதிரைகளும், தேர்களும் தான். அதைப் பற்றி அறிந்த சமயத்திலிருந்தே, அதைச் சென்று பார்த்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் அடிக்கடி வந்து போகும். ஹாங்காங்கின் அருங்காட்சியகத்தில் டெரகோட்டா வீரர்களின் உருவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு பலரும் சென்று கண்டு வந்த போதும், அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியாத போது, எப்போதாவது […]

செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை புதுக்கோட்டை செய்திக்குறிப்பு

This entry is part 8 of 26 in the series 22 பெப்ருவரி 2015

புதுக்கோட்டை பிப். 21 புதுக்கோட்டையில் செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பிப்.20 மாலை கீழ 3ஆம் வீதியில் உள்ள பாலபாரதி மழலையர் தொடக்கப்பள்ளியில் இதற்கான அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் சண்முக பழனியப்பன் தலைமைவகித்தார். ‘பாரதி’ சுப்பிரமணியன் கவிஞர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். அமைப்பின் கொள்கை செயல்பாடுகளை முன்மொழிந்து முனைவர் சு.மாதவன் உரையாற்றினார் அவர் பேசியதாவது: “உலக அளவிலும் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் மொழி, கலை, இலக்கியத் […]

அதிர்வுப் பயணம்

This entry is part 9 of 26 in the series 22 பெப்ருவரி 2015

    பள்ளி ஆசிரியர் முன் வரிசை வகுப்புத் தோழன் தோழி அப்பா மூத்த சகோதர சகோதரி தொடங்கி வைத்தார் கல்லூரியில் உச்சக் கட்டம்   மேலதிகாரி வாடிக்கையாளர் சகவூழியன் மேலெடுத்துச்செல்ல   மகன் மகள் மனைவி அண்டை அயல் தரும் அதிர்வுகள் ஓய்வதில்லை   தனியே பயணம் செய்தால் கைபேசி வழி தாக்குதல் தொடரும்   மின்னஞ்சல் முகனூல் மேலும் எண்ணற்ற செயலிகள் உறக்கத்தின் எதிரிகள்   அதிர்வின் அதீதம் பழகி அபூர்வ மௌனமே அச்சம் […]

உதிராதபூக்கள் – அத்தியாயம் -3

This entry is part 10 of 26 in the series 22 பெப்ருவரி 2015

இலக்கியா தேன்மொழி சிந்து தனது படுக்கையில் அமர்ந்து, நகங்களை சீராக்கிக்கொண்டிருக்கையில், மாடியில் துணி காய போட்டுவிட்டு வாளியுடன் நுழைந்தாள் கிரிஜா. ‘ஹேய், என்னடீ…இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட?’ என்றாள் ஆச்சர்யமாக. சிந்து பதிலேதும் பேசாதது கண்டு சற்றே கலவரமாகி, சிந்துவின் அருகில் வந்து அமர்ந்தாள் கிரிஜா. ‘என்னடீ ஆச்சு… மேட்டர் முடிச்சிட்டானா?’ என்றாள். சிந்து கிரிஜாவை கண்களில் பார்த்துவிட்டு, நடந்ததை முழுவதும் விவரித்தாள். ‘நினைச்சேன் சிந்து.. இந்த ஓவர் படிப்ஸெல்லாம் இப்படித்தான் இருக்கும்… நான் அப்பவே சொன்னேன்.. நீ […]

நினைவுகளைக் கூட்டுவது

This entry is part 11 of 26 in the series 22 பெப்ருவரி 2015

    காலம் தன்னிடம் மண்டியிட்டு அகாலமாய் இறுகியது போல் முகம் கொண்டு கைகளில் குச்சியில் கட்டிய துடைப்பத்தை ஏந்தி, அணி வகுத்து நிற்கும் மரங்களிடம் முன் பின் சொல்லாமல் உதிரும் சருகு மேல் சருகு சேர்ந்த சருகுக் குவியலின் இரகசியத்தைக் கலைத்துப் பார்த்து விட்டு மறுபடியும் குவித்து வைப்பது போல் சருகுகளைக் கூட்டிச் சேர்க்கிறானே முதியவன் அவனைப் பார்.   தன் முகச் சுருக்கங்களில் காலம் தன் மடிப்புக்களைச் சேர்க்க, விழிகளின் தீட்சண்யத்தில் சூரிய ரேகைகளைச் […]