ஊர் மாப்பிள்ளை

This entry is part 5 of 7 in the series 23 பெப்ருவரி 2020

தான் வேலை செய்யும் சமூக நல நிறுவனத்தில் பதவி உயர்வு கிடைத்தபின்தான் திருமணத்தைப் பற்றி சிந்திக்க வேண்டுமாம். அதுவும் ஆலமரம்போல் விரிந்து பரந்த ஓர் ஊர்க் குடும்பத்தின் விழுதாகத்தான் இருக்க வேண்டுமாம். உறுதியாக இருந்தார் சாந்தினி. அவர் நினைத்தபடியே பதவி உயர்வு கிடைத்துவிட்டது. திருமணத்திற்கான ஏற்பாடுகள், மாப்பிள்ளை தேடும் வேலைகள் தொடர்கின்றன. திருச்சியில் ஒரு பெரிய உணவுக்கடை வைத்திருக்கும் புண்ணியமூர்த்தியின் மகன் சாமியப்பாவுக்கு சாந்தினி பற்றிய தகவல் கிடைக்கிறது. கேட்டரிங் முடித்துவிட்டு அப்பாவோடு தொழிலுக்கு துணையாக இருப்பதாக […]

டியோ ச்யூ ராமாயி

This entry is part 1 of 7 in the series 23 பெப்ருவரி 2020

அழகர்சாமி சக்திவேல் கைகேயி : “தசரத மன்னர் ஆன என் கணவரே.. முன்னர் எனக்குக் கொடுத்த வரத்தின் படி, ராமன், பதினான்கு வருடம், காட்டில் வாசம் செய்ய வேண்டும். என் மகன் பரதன், இந்த அயோத்தியை ஆள வேண்டும்” ராமன் ஆகிய நான் : “உத்தரவு தாயே. தங்கள் கட்டளைப்படியே செய்கிறேன்.” “    சிங்கப்பூரில், சீனப் பேய்த்திருவிழா ஆரம்பித்துவிட்டது. சீனச் சந்திர நாட்காட்டியின், ஏழாவது மாதத்தில், நரகத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, ஆவிகள் சிங்கப்பூர் முழுவதும் அலைய ஆரம்பித்துவிட்டன. சிங்கப்பூர் […]

பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை

This entry is part 6 of 7 in the series 23 பெப்ருவரி 2020

தமிழகத்தில் எது இன்று அதிகாரப்பூர்வமான “சரியான அரசியல்” politically correct என்பதை சமீபத்தில் ஆர்.எஸ் பாரதி என்னும் திமுக தலைவரின் தனது பேச்சில் உறுதி செய்திருக்கிறார். அரசியல் ரீதியில் அவர் இரண்டு விசயங்களை பேசியிருக்கிறார்.ஒன்று தலித் நீதிபதிகள் நியமிகப்பட்டது திராவிட இயக்கத்தின் பிச்சை என்று சொல்லியிருக்கிறார்.இரண்டாவது பத்திரிக்கைக்காரர்கள் ரெட்லைட் ஏரியாக்காரர்கள் போல காசுக்கு விலைபோவதாக குறிப்பிட்டிருக்கிறார். இரண்டுமே இன்றைய தமிழகத்தில் “சரியற்ற அரசியல்” politically incorrect. இரண்டையுமே பேச கூடாது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் […]

சூதும் அன்பும் சேர்ந்ததே உலகம்…………..

This entry is part 7 of 7 in the series 23 பெப்ருவரி 2020

 எஸ்.ஜெயஸ்ரீ. கடலூர்         எழுதிய நூல்களும்,பெற்ற விருதுகளும் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையில் இருக்க, தமிழ் கூறும் நல்லுலகில், ஆன்மிக, பக்தி இலக்கியத்திற்கும், சங்க இலக்கியத்திற்கும், நவீன இலக்கியத்திற்கும் குறைவே இல்லாத பல வடிவங்களில் தன் பங்கைத் திறம்பட ஆற்றி வருபவர் வளவ.துரையன் அவர்கள். சங்க இலக்கியங்களை எளிமையான முறையில் அனைவரும் படிக்கும் விதமாகச் செய்ய வேண்டும் என்று பெரும் ஆவல் மிக்கவர். அதே ஆவலோடு, மனித உறவுகளின் வாழ்வியல் சிக்கல்களையும் போராட்டங்களையும், தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களையும், […]

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நான் ஆதரிப்பது ஏன் ?

This entry is part 4 of 7 in the series 23 பெப்ருவரி 2020

என்.எஸ்.வெங்கட்ராமன்                                                                                                        வேதியல் பொறியாளர் மின் அஞ்சல்: nsvenkatchennai@gmail.com ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நான் ஆதரிப்பது ஏன் ? விவசாயிகளும், சில அரசியல் கட்சிகளும், சில சமூக  ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்ததால், ஹைட்ரோ கார்பன் திட்டம் டெல்டா பகுதிகளில் கைவிடப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது சாதக பாதகங்கள் தீவிரமாக ஆராயப்படாமலும், மூத்த விஞ்ஞானிகள், பொறியாளர்களிடம் விளக்கம் கேட்காமலும் எடுக்கப்பட்ட முடிவு என்பது என்னுடைய கருத்து. எனது கருத்துகளுக்கு ஆதாரமாக கீழ் கண்ட விவரங்களை கூறியுள்ளேன். மீதேன் […]

இந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது

This entry is part 3 of 7 in the series 23 பெப்ருவரி 2020

Posted on February 22, 2020 வெஸ்டிங்ஹவுஸ் AP-1000 MWe அணுமின்சக்தி நிலையம் Obama, Modi Kick Start the Westinghouse Nuclear Deal +++++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அமெரிக்கா இந்தியாவில் கட்டும் ஆறு 1000 MWe அணுமின்சக்தி நிலையங்கள்  2020 பிப்ரவரி 20 ஆம் தேதி இந்திய வெளிநாட்டு அமைச்சு செயலாளர் விஜய்  கோகலேயும் அமெரிக்க  அகில் நாட்டுப் பாதுகாப்பு, ஆயுதக் கட்டுப்பாடு துணைச் செயலாளர் ஆன்டியா தாம்ஸன் ஆகியோர் கலந்துரையாடலில் வெளியான […]

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 2 of 7 in the series 23 பெப்ருவரி 2020

1.முட்டாள்பெட்டியின் மூளை TELE FACTORYயில் டஜன்கணக்காகத் தயாரிக்கப்படும் மாமியார்களின் முறைத்த கண்கள்; முறம்போன்ற தடிமனான நகைகள் எங்குபார்த்தாலும் ஒட்டுத்துணிகளும் பட்டுக்குஞ்சலங்களும் கட்டுக்கடங்காத நிறச்சேர்க்கைகளுமாய் அவர்கள் படுக்கையிலும் அணிந்திருக்கும் கெட்டிச் சரிகைப் பட்டுப்புடவைகள் மூச்சுவிடாமல் அவர்கள் வெளித்தள்ளும்  சாபங்கள் காச்சுமூச்சென்ற அவர்களின் பேச்சுக்கள் பழமொழிகள் ஃபிலாஸஃபிகள் பிக்கல்பிடுங்கல்கள் ‘பப்ளிமாஸ்’ முகங்கள் புஸுபுஸு சிகையலங்காரங்கள்; மேலும் மேலும் மேலும் மேலும் என நீளும் அவர்களின் ஆர்வக் கிசுகிசுக்கள்; அவதூறுகள் அழுகைகள்; அசிங்கம்பிடித்த சதித்திட்டங்களை சகிக்கவும் ரசிக்கவும் எதிர்பார்க்கவும் ஓ போடவும் […]