உயிர்த்தலைப் பாடுவேன்!

This entry is part 45 of 45 in the series 26 பிப்ரவரி 2012

கிளைகளுக்கு நீரூற்றிக்கொண்டே வேர்களை வெட்டியெறியும் ஒரு தோட்டக்காரன்! மனச் சருகு மிதிபடும் சத்தம் இரும்புச் சப்பாத்துக்களின் செவிகளை எட்டவேயில்லை! கெல்லிக் கெல்லி – என் கணுக்களைச் சிதைக்கிறாய் – மீள உயிர்த்தலைத் தவிர்த்திடும் நஞ்சினைப் புதைக்கிறாய்! கொத்திக் குதறும் – உன் மண்வெட்டிக் கைப்பிடிக்கு எந்தன் முதுகெலும்பையே இரவலாய்க் கேட்கிறாய்! காதலின் கருணையின் காணிக்கை என்று சொல்லி – என் நாளையை, வாழ்தலை கனவுகளைப் பறிக்கிறாய், நீ ! சுவர்களை, மதில்களை உயரமாய் எழுப்பியோர் இருள்வெளிக் குகையுளெந்தன் […]

மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்: கருத்தரங்கம்.

This entry is part 44 of 45 in the series 26 பிப்ரவரி 2012

மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்: கருத்தரங்கம். (சிதனா, கோலாலம்பூர்) மலேசியாவில், ஆண்களின் இலக்கியப் படைப்புகளுக்கு ஈடாக, நவீனம், குறு நாடகம், புதினம், கட்டுரை, கவிதை என மலையகத்துப் பெண் படைப்பாளர்களும் தங்கள் பங்கினை நிறைவாகவே வழங்கி வந்துள்ளனர். புத்தாக்க சிந்தனைகளும் எழுத்தாற்றல் திறமைகளும் கொண்ட பெண்கள் நாடு முழுவதும் பரவி இருக்கின்றனர் என்ற போதிலும், அவர்களைப் பற்றிய செய்திகள் அதிகம் பேசப் படாமல் இருப்பதற்கு, இவர்களுடைய படைப்புகள் முறையாக ஆவணப் படுத்தப்படவில்லை என்பதை முக்கியக் காரணமாகக் கொள்ளலாம். […]

விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தெட்டு

This entry is part 42 of 45 in the series 26 பிப்ரவரி 2012

1916 ஜனவரி 30 ராட்சச வருஷம் தை 17 ஞாயிற்றுக்கிழமை வைத்தாஸே, ரெண்டு வாரம் இடைவெளி விட்டு இதை உனக்கு எழுதறேன். எழுதாட்ட என்ன? சதா உன் நினைப்பு தான். பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து, நல்ல நல்ல கலாசாலைகளிலே படிச்சு புத்தியோடு சர்க்கார் உத்யோகத்தில் உட்காரணும். அதுகள் கல்யாணமும் கழிந்து குடும்பத்தோடு கூடி இருக்கணும். எல்லாத்தையும் பார்த்து அனுபவிச்சபடி, வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து அப்பன்காரன் ஹாலாஸ்ய மகாத்மியத்தைப் படிச்சு ஒப்பேத்திண்டு கிடக்கணும். அந்த வயசாயிடுத்து எனக்கு. ஆனா, […]

விளிம்பு நிலை மக்களின் உளவியல்: நீர்த்துளி: சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல்

This entry is part 41 of 45 in the series 26 பிப்ரவரி 2012

உலகமயமாக்கல் கிராம மக்களை நகரங்களுக்குத் துரத்துகிறது. அவர்கள் நகரங்களில் அகதிகளாகத் திரிகிறவர்களாக இருக்கிறார்கள். ஆறுதலாய் சக தொழிலாளர்களின் நட்பும் ஆறுதல் வார்த்தைகளும் தொடர்ந்து இயங்க வைக்கிறது. வருமானம் வேண்டி வரும் “ ஒற்றைப் பெற்றோர்கள்” அடையும் மன்ச் சிதைவும், பாலியல் உளவியல் சிக்கல்களும் நீர்த்திதுளி நாவலின் மையப் பாத்திரங்களுக்கு ஏற்படுகின்றன. நீதிமன்றத்தீர்ப்பை ஒட்டி திருப்பூர் சாயப்பட்டறைகளின் மூடலுக்கு பின் தொழில் நகரம் சந்திக்கும் பிரச்சினைகள் விளிம்பு நிலை பனியன் கம்பனி தொழிலாளர்களின் வாழ்க்கையோடு சொல்லப்பட்டிருக்கிறது.சாயத்திரை நாவல் மூலம் […]

“தா க ம்”

This entry is part 40 of 45 in the series 26 பிப்ரவரி 2012

வருஷங்கூடி தீபாவளிக்கென்று மட்டும் வெறும் நூறு ரூபாய்தான் நான் அவனுக்குக் கொடுத்திருக்கிறேன். அதற்கு மேல் என்னவோ எனக்கும் கை வந்ததில்லை. அவனும் மேற்கொண்டு கேட்டதில்லை. ரொம்பச் சந்தோசம் சார்…இவ்வளவுதான் அவன் வார்த்தை. துளி மனக்குறை இருக்காது அதில். இத்தனைக்கும் அவனுக்கு ஒரு துணைப்பொட்டலம் வேறு உண்டு. அவன் வேறு அம்மாதிரி நாட்களில் கூடவே வந்து கொண்டிருப்பான். சைக்கிளைப் பிடித்துக் கொண்டு அவன் வீதியில் நிற்க, இவன்தான் வீடு வீடாக ஏறி இறங்குவான். இவன் லீவு போட்ட நாட்களில்தான் […]

இஸ்லாமிய அரசியலில் மாற்றுவாசிப்பு

This entry is part 39 of 45 in the series 26 பிப்ரவரி 2012

சமகால இஸ்லாமிய அரசியல் குறித்த விவாதத்தில் கீழ்கண்டவாறு ஒரு குறிப்பை ந.முத்துமோகன் எழுதிச் செல்கிறார். “”பல நபிகளை, பல சமூகங்களை, பல கலாச்சாரங்களை, பல வேதங்களை இஸ்லாம் கோட்பாட்டு ரீதியாக ஒத்துக் கொள்கிறது. ஆனால் வளர்ந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதம் ஏகத்துவத்தை வைத்தே தன்னை கட்டமைக்கிறது. இக்கூற்றில் இடம் பெறும் உண்மைகளையும் விடுபட்ட உண்மைகளையும் நாம் இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. உலக அளவில் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம் நாடுகள் மீதும், அதன் பெட்ரோல் வளங்கள் மீதும் […]

சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பிர்த்வ்ஸ் ராஜகுமாரன் – மீரான் மைதீன் பதிவுகள்

This entry is part 38 of 45 in the series 26 பிப்ரவரி 2012

சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பிர்த்வ்ஸ் ராஜகுமாரன் – மீரான் மைதீன் பதிவுகள் ஹெச்.ஜி.ரசூல் சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் குறித்த இருநாள் கருத்தரங்கம்படைப்பாளிகளின் நாவல்கள்கவிதைகள் கதையுலகம் என ஒரு விரிவான பரப்பை தமிழ் வாசகப் பரப்புக்கு அறிமுகம் செய்தது. இது வெறும் ஆய்வுக்கட்டுரைகளின் அரங்கமாக மட்டும் இல்லாமல் ஒரு சுதந்திரமான உரையாடலுக்கான களமாகவும் அமைந்திருந்தது. இந்த பதிவுகளில் உள்ள கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதல்ல. இக்கருத்துக்களோடும் படைப்பாளிகளின் படைப்புலகம் குறித்த விமர்சனங்களோடும் கூட நாம் […]

அதையும் தாண்டிப் புனிதமானது…

This entry is part 37 of 45 in the series 26 பிப்ரவரி 2012

மெல்லிய குளிர் பரவிய அறையில், டிக்… டிக்… டிக்… கடிகார முள் நகரும் சப்தம் இரவின் அமைதியை கிழித்து பயமுறுத்திக் கொண்டிருந்தது. என்றும் போல விமலாவிற்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துத் தூக்கத்திடம் தோற்றுப் போனவளாக… வயதாக… வயதாக தூக்கம் தொலைந்து வர அடம் பிடிக்கிறதே..இதே…எனக்குப் பெரிய கவலை…நினைத்தபடியே.. மெல்ல கடிகாரத்தை உற்றுப் பார்க்கிறாள் . இரவு விளக்கின் ஒளியில், மணி இரண்டைத் தாண்டி விட்டதை அறிந்து…அட ராமா..இன்னுமா தூக்கம் வரலைன்னு…அலுத்துக் கொண்டாள். “மெத்தைய வாங்கலாம்…தூக்கத்தை […]

மீண்ட சொர்க்கம்

This entry is part 36 of 45 in the series 26 பிப்ரவரி 2012

இத்தனை தூரம் கவிதையற்று வந்தவன் மனதில் தீக்குச்சி உரசிய சிரிப்பில் நீ விதைத்த வார்த்தைகள் வனவாச காலத்து முடிவைச் சொன்னது. கழைக்கூத்தாடியின் கவனமாய்ப் பின்னிய வார்த்தைகள் கொண்டு எழுதாமலேயே போன அந்தப் பத்தாண்டுகளின் சூன்யம் ஞாபகத் துளைகளில் வழிகிறது. காலத்தின் மிரட்டல் கேட்டு வாழ்க்கைக் காட்டில் பயணமே உறைந்திருந்தது. இளமையின் வாசலில் காத்திருந்த கேள்விகளில் நெஞ்சக்கூட்டினுள் ஸ்னேகம் சுமந்து நின்றதில் நினைவே மிச்சம் என்றாலும் எனக்குள் திரும்பிய கவிதை அரும்புகள் வாடிப்போயிருக்கவில்லை. முகவரி தொலைத்த காலப்புறாவின் கால்களில் […]

ஆலமும் போதிக்கும்….!

This entry is part 35 of 45 in the series 26 பிப்ரவரி 2012

போகும் வழியில் புரிந்து போனது.. சமுதாயம்..ஜனநாயகம்.. சமத்துவம்..கற்றுத்தந்தது.. வழியிலொரு ஆலமரம்..! சுமை தாங்கும் நிம்மதியில் தான்.. எத்தனை விழுதுத்தூண்கள்..! மரத்தின் விழுதுகளா…? அத்தனையும் மதவிழுதுகள்… தாங்குகிறது இந்தியா..! நடுப்பரப்பை பிடிக்கவென்றே… பறவையாய் விரித்தது கிளைகள்.. அத்தனையும் சாதிக்கிளைகள்… விழுதுகளை தாங்குமா….கிளைகள்..? மரத்தின் நடுமுதுகில்… எதையோ…எதிர்த்து கொத்திவிடும் மரங்கொத்தி… பொந்துக்குள்ளே .புதையலாய் நாகம்..! ஊரஊர தேயாத பாதை நீ…! கலவரக் கட்டெறும்பின் கட்டாயப் படையெடுப்பு..! கிளைகொன்றாக… வண்ணக் கொடிகள்.. தாவும் குரங்குகள் சண்டையிட்டு விளையாட ஊழல் அரசுகள்… வந்துபோன […]