மொழிபெயர்ப்புக் கதை மலையாள சிறுகதை ஆசிரியர் -சி.வி.பாலகிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்ப்பு; நா- தீபா சரவணன் கடைசியில் மோனிகா விமான நிலையத்திற்குச் சென்றே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தாள். அவள் முகம்கூட கழுவவில்லை அவசர அவசரமாக உடை மாற்றிக்கொண்டு கைகாளாலேயே பரந்து கிடந்த முடியை ஒதுக்கிக்கொண்டு வேகமாக படியிறங்கினாள். வரும்போதே டிரைவர் ஸ்டான்லியை சத்தமாக கூப்பிட்டுவிட்டு, காரைத்திறந்து பின்சீட்டில் வலது புறமாகச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டாள். ரோயித்தோமஸ் ப்ளோரிடாவிலிருந்து அட்லாண்டிக் […]
வித்யாசாகர் 1, அம்மா எனும் மனசு.. வாட்சபில் அழைக்கிறேன், என்னப்பா அழைத்தாய என்கிறாள் அம்மா இல்லைமா, இதோ உனது பெயரனைப் பாரேன் ஒரே அமர்க்களம் தான் செய்கிறான் அதனால் பார்ப்பாயே என்றழைத்தேன் என்றேன், அம்மா நினைத்துக் கொண்டிருப்பாள் அப்போ என்னிடம் பேச அழைக்கவில்லையா என்று, எனக்கும் உறுத்தியது, உன்னிடம் பேசத்தானேம்மா அழைதேனென்று சொல்லியிருக்கலாமே.. ———————————————————— 2, விடுமுறைக்கு வந்த மகனும் அப்பாவும்.. கோடை விடுமுறையில் ஊருக்குப் போகிறோம் பிள்ளைகள் வந்ததும் பெட்டியைப் பிரிக்கிறோம் அம்மா அண்ணி தங்கை […]
ஒருத்தி மகனாய்ப் பிறந்தோ ரிரவில் ஒருத்தி மகனா யொளித்து வளரத் தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் இது திருப்பாவையின் இருபத்தைந்தாவது பாசுரமாகும். இப்பாசுரம் முழுக்க முழுக்க கிருஷ்ணாவதாரம் பற்றிப் பேசுகிறது. “கடந்த பாசுரத்தில் என்னை மங்களாசாசனம் செய்தீர்கள்; அது சரி, பறைகொள்வான் என்று சொன்னீர்களே! அது என்ன” என்று […]
நமக்கு இரண்டு சிறுநீரகங்கள் இடுப்பின் பின்புறம் அமைந்துள்ளது.சிறுநீர் உற்பத்தி செய்வது இதன் முக்கிய வேலையாகும். அதோடு இரத்தத்திலிருந்து கழிவுப் பொருட்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுவது இவற்றின் முக்கிய செயலாகும்.இந்த சிறுநீரகம் கெட்டுப்போனால் இந்த இரண்டு முக்கிய வேலைகள் தடை படும், அல்லது நின்று விடும் . அப்படி ஆகிவிட்டால் சிறுநீர் உற்பத்தி குறைவதோடு கழிவுப் பொருட்கள் இரத்தத்தில் கலந்து நச்சுத் தன்மையை உண்டுபண்ணி உயிருக்கு உலை வைத்துவிடும். இதனால்தான் நமது […]
பிறந்த மண்ணின் பெருமையை வளரும் மண்ணில் காட்டும் பிடுங்கி நடப்பட்ட நாற்றுக்கள் இவர்கள் தனக்கு மட்டுமின்றி எல்லார்க்குமாய்ச் சேர்க்கும் தேனீக்கள் இவர்கள் எங்கிருந்தோ அள்ளிவந்து – நீரை இங்கு வந்து பொழியும் மேகங்கள் இவர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பூங்குன்றனாரை பொய்யாக்காதோர் இவர்கள் குளம், ஏரி, நதி, கடல் பெயர்கள்தான் வேறு தண்ணீராக இவர்கள் ஒட்டுக் கன்றுகளில்தான் உயர்ந்த கனிகளும் உயர்ந்த பூக்களும் ஒட்ட வந்தவர்கள் இவர்கள். […]
சொன்னதைக் கூட்டிக் கழித்து நீ சொன்னதில்லை இரகசியங்களை என் அனுமதியின்றி நீ அவிழ்த்ததில்லை நீ இல்லாவிட்டால் ஊனமாகிவிடுகிறேன் என் உடல் உறுப்பு நீ பசித்தால் மட்டுமே புசிக்கிறாய் சொடுக்கும் நேரத்தில் சிரிக்க அழ வைக்கிறாய் உன் சாட்சி போதும் உலகம் கைகட்டும் நான் கண்கலங்கும்போது என் கைக்குட்டையாகிறாய் மாயக் கண்ணாடி நீ ஆசையைச் சொன்னால் காண்பிக்கிறாய் கண்ணகியின் காற்சிலம்பாய் எல்லார் கையிலும் நீ […]
ஜெயஸ்ரீ சாரநாதன் தமிழை ஆண்டாள் என்னும் ‘ஆய்வுக் கட்டுரையை’ மூன்று மாத ஆராய்ச்சிக்குப் பின், ஆசைப்பட்டு எழுதினார் கவிப் பேரரசு வைரமுத்து. அவர் செய்த ‘ஆராய்ச்சியின்’ அழகை முந்தின கட்டுரையில் கண்டோம். ஆண்டாள் தமிழைப் பற்றிப் பேசும் அவரது அற்புதத் தமிழை இந்தக் கட்டுரையில் காணலாம். தமிழை ஆற்றுப்படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் கவிப் பேரரசுவைரமுத்து அவர்கள் தமிழை எவ்வாறு ஆண்டார்? தமிழை எந்த அளவு அறிந்திருந்தார் என்பதை அறிய விரும்புபவர்கள் இந்தக் கட்டுரையைக் கட்டாயம் படிக்க வேண்டும்.. கதையெழுத அவருக்குச் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. பல காலம் தமிழில் தொழில் செய்து வந்தவர். அது தீட்டிய திறமையை வெளிப்படுத்தும் வண்ணம் […]
” வெங்காயம் — தக்காளீ…” என்ற தள்ளுவண்டி வியாபாரி ராஜசேகரின் கம்பீரமான குரல் அவ்வூருக்கு மிகவும் பரிச்சயமானதுதான் விளையாட்டு போல் இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன ராஜசேகருக்குச் சில வாடிக்கையாளர்கள் உண்டு அதிலும் கட்டிட ஒப்பந்தக்காரர் ஸ்ரீராம் வீடு முக்கியமானது மிக முக்கியமானது வாரத்திற்கு இரண்டு கிலோ வெங்காயம் இரண்டு கிலோ தக்காளி வாங்குவார் அவர் விலை ஏற்ற இறக்கம் பற்றிய எந்தக் கவலையும் இல்லை பணம் மாதா மாதம் மிகச் […]
திருப்பூர் நூறாண்டைத்தொட்டு இருப்பது அது நகராட்சியாக உருவாக்கப்பட்டு இருப்பதைக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது ( டிசம்.1, 1917 ) ஜன 1 2008 ல் மாநகராட்சியானது. . தற்போது பின்னலாடைத்துறை ஏற்றுமதியால் 30,000 கோடி ரூபாய் அந்நியச் செலவாணியைக் கொடுக்கும் நகரம். 18,000 கோடி ரூபாய் உள்நாட்டு வர்த்தகத்தால் பெறுகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் moமொத்தமாய் அது 1 லட்சம் கோடியாக உயரும் வாய்ப்புகள் உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கருதுகிறார்கள். பல்லடம் தாலுக்காவின் சிறு கிராமமாக ஒரு காலத்தில் […]
அவுஸ்திரேலியா “தமிழ் அம்மா”வின் கனவுகளை நனவாக்குவோம்! முருகபூபதி – அவுஸ்திரேலியா இந்தப்பதிவில் நான் “அம்மா” எனக்குறிப்பிடுவது, “அவுஸ்திரேலியாவிலும் உலகடங்கிலும் எதிர்காலத்திலும் தமிழ் வாழவேண்டும்” என்ற கனவுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர் பற்றியே! பொதுவாகவே அம்மாமாருக்குத்தான் அதிகம் கனவுகள் இருக்கும். அவை தமது சந்ததி குறித்தும் அவர்களின் வளமான வாழ்வுபற்றியதுமாகவே தொடரும். எனக்கு இலங்கையிலும் புகலிட தேசத்திலும் நீண்டகாலமாக நன்குதெரிந்த ” தமிழ் அம்மா” திருமதி பாலம் லக்ஷ்மணன் அவர்கள், பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த […]