(நூலாக்கம் பெறாத சில உதிரிக் கட்டுரைகள் தவிர ‘ஏழாம் சுவை’, ‘ச்சிங் மிங்’ ‘கனவிலே ஒரு சிங்கம்’, ‘பெருஞ்சுவருக்குப் பின்னே’, ‘கூட்டுக்குள் அலையும் தெனீக்கூட்டம்’ ஆகிய 5 நூலகளின் ஒட்டு மொத்தத் தொகுப்பான ‘பறந்து மறையும் கடல்நாகம்’ புத்தாண்டு அன்றைக்கு திருவான்மியூர் பனுவல் அரங்கில் எளிமையாக வெளியிடப்பட்டது.) ஏற்புரை அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். கம்யூனிசம் குறித்தும், சீன அரசியல் குறித்தும் அதிகம் பேசாதது ஏன் என்று பேராசிரியர் அரசு அவர்களும் ஜென் பற்றி இன்னும் எழுதிருக்கலாம் என்று […]
வணக்கம், ப்ரதிலிபியும் அகம் மின்னிதழும் இணைந்து கட்டுரைப்போட்டி ஒன்றினை நடத்தவிருக்கிறோம். அதற்கான அறிவிப்பை திண்ணை தளத்தில் வெளியிட்டால் மேலும் பலருக்கு அதுபற்றி தெரிய வரும். வாய்ப்பிருந்தால் வெளியிடவும். நன்றி. ப்ரதிலிபி எழுத்தாளர்களுக்கான சுய இணைய பதிப்பகம் (Self Publishing Platform). தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளின் எழுத்துலகில் வாசகர்களையும், பெருகி வரும் படைப்பாளிகளையும், தொழில்நுட்பத்தின் துணையோடு ஒரே இடத்தில் இணைப்பதே எங்களின் நோக்கம். மேலதிக விவரங்களுக்கு – www.pratilipi.com அகம் மின்னிதழ் , அகம் மீடியா குழுமத்தில் இருந்து வெளிவரும் மாதாந்திர மின்னிதழ். சமூக வலைத்தளங்களில் பல்வேறு துறைகளை சார்ந்த […]
ஸிந்துஜா தொகுப்பு : சிட்டி , ப.முத்துக்குமாரசுவாமி ‘ மணிக்கொடி’ யின் மறைவுக்குப் பின், மறுமலர்ச்சி இலக்கியத்துக்கு என்று ஒரு தனிப் பத்திரிகை தேவைப் பட்ட போது, வி. ரா, ராஜகோபாலன் ( சாலிவாஹனன் ) மிகுந்த தைரியத்துடன் , ” கலாமோகினி ” என்ற மாதம் இருமுறை பத்திரிகையை ஆரம்பித்தார் . 1942 ஜூலை மாதம் முதல் இதழ் வெளியாயிற்று . ” இது லட்சியவாதிகளின் கனவு , நீண்ட […]
( 7 ) டேவிட், டேவிட்…- மகனைக் கட்டிக்கொண்டு புலம்பினார் ராபர்ட் மைக்கேல். முழுசாகப் பையனைப் பார்த்தது அவருக்கு நிறைவைத் தந்தது. எங்கே என் ஒரே பிள்ளையையும் இழந்திடுவேனோன்னு மலைச்சுப் போயிட்டேம்ப்பா… – சிறு குழந்தையாய் திக்கித்திக்கிப் பேசினார். என்ன டாடி இப்படி? – உங்களுக்கு ஏத்த பள்ளையாத்தானே சாமர்த்தியமா இந்த வேலையை முடிச்சிட்டு வந்திருக்கேன்? என்னைப் பாராட்டுவீங்கன்னு எதிர்பார்த்தா அழறீங்களே? சரி, சரி…விடு. நீ மட்டும் எப்படி போலீஸ்லேயிருந்து தப்பிச்சே? அதை முதல்ல சொல்லு… நடந்த்தை […]
0 ஜே.டி.எட்ஸன் இங்கிலாந்தின் டெர்பிஷயர் அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவர். சிறுவனாக இருக்கும்போது தாய் வேலைக்கு சென்று விட பொழுது போகாமல் எட்ஸன் பார்த்த லோன் ரேஞ்சர், ஃப்ளாஷ் கார்டன் படங்களே அவரை தப்பித்தல் சாகச கதைகளை எழுதத் தூண்டியது. 137 வெஸ்டர்ன் நாவல்களை அவர் எழுதியிருக்கிறார். 2014ல் நோய் மற்றும் மூப்பு காரணமாக அவர் மரணமடைந்தார். 0 ( பகுதி 1 ) 0 சபாட் அந்த […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=-Ro7rprA9EM https://youtu.be/dLG0-tmimsc https://youtu.be/VOz4PkdY7aA https://youtu.be/ofI03X9hAJI https://youtu.be/4eKIjkk0NVY https://youtu.be/g-MT4mIyqc0 ++++++++++++++++ ஒவ்வொரு கோட்பாடும் ஒருவேளை மெய்யாக இருக்கலாம் என்று விஞ்ஞானத் தேடலில் யூகித்து எழுதுவதைத் தவிர நமக்கு எதுவும் உறுதியாகத் தெரியவில்லை என்பதே என் நிலைப்பாடு. கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் ஒற்றைத்திணிவு [Singularity] என்பதிலிருந்து வேதாளங்கள் [Dragons] பறந்து வந்திருக்கலாம் என்று எல்லா பௌதிக விஞ்ஞானிகளுக்கும் தெரியும். மேல்நிலைப் பரிமாண விண்மீன் சிதைவில் [Collapsing Higher-Dimensional Star] எழும் பெரு […]
வெய்யில் முகத்தில் சுட்டு எழுப்பி விட்டது குதிரையைத் தேடின விழிகள் செங்குத் து மலையில் நேற்று எங்கோ புரவி நின்று விட்டது நினைவுக்கு வந்தது இரவில் அவள் தென்பட மாட்டாள் ஆனால் தேடி வருவதற்குள் பொழுது சாய்ந்து விட்டது அவளே ஒரு கனவோ? இல்லை. நெஞ்சில் இருந் து வாளை உருவி அவள் ஆற்றிய புண் தழும்பாயிருந்ததே கவசங்களைக் கழற்றினான் உடைவாளையும் முன்கைக் காப்புப் பட்டைகளையும் நெஞ்சில் தழும்பு […]
உடற்கூறு பயிலும் பிரேதங்கள் நிறைந்த கூடத்தில் டாக்டர் ஹர்ஷாவை அறிமுகம் செய்துவைத்தார் வகுப்பு ஆசிரியை கிரேஸ் . அவர் சிவப்பாக நல்ல உயரமாக சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்றார். அவர்தான் பிரேதங்களை அறுத்து பயில்வதைச் சொல்லித்தருவார். உடன் வகுப்பறைக்குத் திரும்பினோம். உடற்கூறு பாடம் துவங்கியது. மனித உடலின் அமைப்பு பற்றி கிரேஸ் ஓர் அறிமுகவுரை நிகழ்த்தினார். அதை நாங்கள் அனைவரும் ( உறங்காமல் ) உன்னிப்பாகக் கவனித்தோம். நான் அவற்றை வேகமாக […]
காலை இளவெயில் சூடாக ஒத்தடம் கொடுக்கச் சாய்வு நாற்காலியில் படுத்திருந்தேன். சுற்றுப்புறச் சுவர் மீது ஒரு காக்கை “உள்ளே வரலாமா?” என்று கேட்பது போல் உட்கார்ந்திருந்தது. மணல் ஏற்றிய ‘டயர்’ வண்டிகள் சென்று கொண்டிருந்தன. கட்ட வண்டிகள் எனப்படும் மரச் சக்கர வண்டிகளின் காலம் முடிந்து விட்டது. காய்கறி வியாபாரி தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு போனார். அவிழ்த்து விடப்பட்ட ஆடுகள் யார் வீட்டில் மேயலாம் என்று வேவு பார்த்துக் கொண்டு சென்றன. திடீரென ஒரு பத்துப் […]
உடம்பும் மனசும் அப்படியொரு பரபரப்பிற்கு ஆட்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது அவனுக்கு.அழகானப் பெண்களைப் பார்க்கிற போது அவ்வகைப் பரபரப்பு ஏற்படும் . அப்போதும் ஏற்பட்டது. இன்னும் கொஞ்சம் விபரீதத்துடனே. மைதிலி என்று வாய் விட்டுதான் அலறியதாக அவனுக்குத் தோன்றியது.ஆனால் அலறல் சப்தம் கேட்டு நடந்து கொண்டிருந்தவர்கள் யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. ஓடிக்கொண்டிருந்த வாகனங்கள் எதுவும் நின்று விடவில்லை. புகைக் காற்று அதன் திசையை மாற்றிக் கொண்டு அலறவில்லை. அப்படியானால் குரல் சரியாக எழும்பி அடையாளம் காட்டவில்லையா. அப்படியெல்லாம் நிகழ […]