சங்கத்தில் பாடாத கவிதை

This entry is part 32 of 42 in the series 1 ஜனவரி 2012

  எழுதிக்கொண்டிருந்த கவிதையை தென்றல் அடித்து கலைத்துக்கொண்டிருந்தது   எழுதி முடித்த சொற்களின் மேல் பல இடங்களில் அது தன் புள்ளிகளை கோலங்களை இட்டுச்சென்றது   சில வரிகளில் சந்திகளில் ஒற்று மிகுந்து அவற்றை வலுவாக்கியது   சில வரிகளில் ஒற்றுகளை சேதப்படுத்தி சொற்களைத் தனிமையில் நிற்கச்செய்தது.   இப்படி எல்லாம் செய்த தென்றல் பாதியிலேயே விட்டுச்சென்றுவிட்டது   கவிதையை முடித்து வைக்க இன்னொரு தென்றலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் யாரேனும் அதைக்கண்டால் கொஞ்சம் என்னிடம் அனுப்பி வையுங்கள். […]

கவிப்பொழுதின் அந்திமக்காலம்…

This entry is part 31 of 42 in the series 1 ஜனவரி 2012

ஒரு பறவையின் கடைசி சிறகு   இலை உதிர்த்த மரம் சப்தமின்றி மறைந்து போன செப்புக்காசு மணி அற்றுப்போன கால் கொலுசு எதுவாகவும் இருக்கக்கூடும்   விடியல் என்பது குஞ்சுப் பறவையின் பிசுபிசுத்த இறகாயும் தளிர் இலை தாங்கிய புது மரமாயும் படபடக்கும் புது பணத்தாளாயும் சிணுங்கும் மணிகளோடு சிலிர்க்க வைக்கும் நாதமாயும் பிரபஞ்சத்தையே ஆட்கொள்ள விழையும் சப்தமற்ற சில்லரைகளாகவும் பரிணமிக்கலாம்   இருக்கைகள் காலியாவதில்லை அவை மதிப்பு கூட்டுபவை என்றும் கூடுபவை வசீகரமும் வனப்புமாய் ஆகர்ச்சிப்பவை   […]

பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை

This entry is part 30 of 42 in the series 1 ஜனவரி 2012

                        முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை பெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை  பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாசிப்பு எனப்படும். ஆண்படைப்பில் எழுப்பப்பட்டுள்ள ஆண்சார்பு  அரசியலை  இனம் காட்டுவதாக இவ்வாசிப்பு அமையும். ஆணால் எழுதப் பெற்ற ஒரு இலக்கியத்தில் ஆண் சார்பு கருத்துகளே அதிகம் இருக்கும் என்பது உறுதி.  சில ஆண்படைப்பாளர் தன்னுடைய ஆண் […]

வம்சி சிறுகதைப் போட்டி முடிவுகள்

This entry is part 29 of 42 in the series 1 ஜனவரி 2012

  சற்றுமுன் வம்சி பதிப்பகத்தின் சார்பில் சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. (நடுவர்கள்: எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், பிரபஞ்சன், தமிழ்நதி)   முதல் பரிசுக்குரிய சிறுகதை: (பரிசுத் தொகை ரூ.10000)   காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – எம்.ரிஷான் ஷெரீப்     இரண்டாவது பரிசுக்குரிய சிறுகதைகள்: (ஒவ்வொன்றுக்கும் பரிசுத் தொகை ரூ.5000/-)   1.இரைச்சலற்ற வீடு – ரா.கிரிதரன்   2. யுகபுருஷன் – அப்பாதுரை     தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் (ஒவ்வொன்றுக்கும் பரிசுத் […]

தனாவின் ஒரு தினம்

This entry is part 28 of 42 in the series 1 ஜனவரி 2012

  சிறகு இரவிச்சந்திரன். பட்டினப்பாக்கத்திலிருந்து கோட்டூர்புரம் செல்லும் போது பேருந்தில் அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலைக் பலமுறை கடந்திருக்கிறான். உள்ளே எப்படி இருக்கும் என்கிற எண்ணம் கூட அவனுக்கு வந்ததில்லை. அதெல்லாம் அவன் கற்பனைக்கு அப்பாற்பட்டது. அவன் பெயர் தனசேகர். தான்யா என்கிற புனைப்பெயரில் ஏதாவது கவிதை எழுதுவான். ஏதாவது ஒரு சிற்றிதழ் அதை வெளியிடும். தனா பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு ஒன்றில் குடியிருக்கிறான். அது கட்டப்படும்போது அப்போதைய ஆளுங்கட்சியின் வட்டம் ஒன்று பினாமி […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 4

This entry is part 27 of 42 in the series 1 ஜனவரி 2012

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “என் பீரங்கித் தொழிற்சாலையை எனக்குப் பின் ஏற்றுக் கொள்ள ஒருவன் வேண்டும் !  நமக்குச் சொந்தமாக அவன் இருக்கக் கூடாது.  அவனுக்கு அதிகப் படிப்பும் இருக்கக் கூடாது.  அவன் வல்லவனாக இல்லா விட்டாலும், பிரச்சனை வரும் போது இடத்தை விட்டு ஓடிவிடக் கூடாது.  இதுவரை நான் அவனைக் காண முடியவில்லை !  அப்படி ஒருவனை நீ சொந்தத்தில் இருக்க விரும்பினால் […]

துளசிச்செடி நிழலில் கண்டெடுத்த குழந்தை

This entry is part 26 of 42 in the series 1 ஜனவரி 2012

ஹெச்.ஜி.ரசூல்  முனைவர் செள..வசந்தகுமார் தேர்ந்த கல்வியாளர். இலக்கியவிமர்சகர். மொழியியலிலும், தத்துவத்திலும் ஆர்த்தம் நிறைந்த விவாதங்களை முன்வைப்பதில் தேர்ச்சி பெற்றவர். மு.வ.வின் படைப்புகளில் கல்வியியல் சிந்தனைகள் தலைப்பின்கீழ் முனைவர் பட்டம் பெற்றவர். கல்வியியல் துறையில் அதிக கவனம் செலுத்தி செயல்பட்டு வருவதால் இவரது ஏற்கெனவே வெளிவந்த இலக்கிய கல்வியின் பரிணாமங்கள், புதிய நோக்கில் தமிழ்பாடமும் கல்வியும், தாய்மொழியும் திறன்மேம்பாடும் என்பதான மூன்று நூல்களும் தமிழ் அடையாளத்தை முன்வைத்து அறிமுகமாயின. தற்போது இவரது ஆழ்ந்த வாசிப்புக்கும், ஆய்வுக்கும் சான்றாக தமிழ் […]

Delusional குரு – திரைப்பார்வை

This entry is part 25 of 42 in the series 1 ஜனவரி 2012

கற்பனைல நடக்கிறதயும், நனவில நடக்கிறதயும் பிரித்துப்பார்க்க இயலாத ஒருவனின் கதை இந்த (Delusional குரு) மௌனகுரு.(அப்டியே வெச்சுக்கலாம் அதான் நல்லது) “போலீஸ் அவர ஃபாலோ பண்றதாகவும், கண்காணாத இடத்துக்குக் கூட்டிட்டுப் போயி தன்ன என்கவுண்டர் பண்ண முயற்சிக்கிறதாகவும் , அவரா கற்பனை பண்ணிக்கிட்டு தன்னையும் குழப்பிக்கிட்டு, அதோட கூடவந்த இன்னும் ரெண்டு பேர தன் கண் முன்னாலயே போலீஸ் என்கவுன்ட்டர் பண்ணீட்டதாகவும் சொல்லிட்ருக்கார். இத சீக்கிரமே குணப்படுத்தீரலாம், நீங்க நினைக்கிற அளவுக்கு இது பெரிய பிரச்னையில்ல, கல்லத்தூக்கி […]

தென்றலின் போர்க்கொடி…

This entry is part 24 of 42 in the series 1 ஜனவரி 2012

பொற்கொடியாய்… நினைவில் நின்ற தென்றல்… இன்று….தானே.…புயலாய் மாறி…. உயர்த்தியது  போர்க்கொடி…! உன் ஆனந்தத் தாண்டவத்தில்….! உன்னோடு சேர்ந்து உன்னை எதிர்த்து… தலைவிரித்தாடி… கைமுறித்தது…தென்னை… முக்கி முனகி ஆடும்போதே… ஒடிந்து விழுந்தது முருங்கை… சளைக்காமல் ஆடியும்… முடிவில் பல கிளைகளைத் தவறவிட்டது அரசு..! தண்டோடு மடங்கியது வாழைக் கூட்டம்… தோற்று… வேரோடு படுத்தது வேம்பு…! வீதியெங்கும் மரங்களின் மறியல் போராட்டம்…! சூறைக் காற்றின் அகோர சுவடுகள்…! நகர்வலம் வந்து.. கடல்கடந்தது… தானே… தென்றல்….!! அல்ல…. அல்ல..புயல்…! ஆடிக் களைத்து வலியில் அழுதன மரங்கள்..! மரணத்தின் பிடிக்குள்… […]

சொல்லாதே யாரும் கேட்டால்

This entry is part 23 of 42 in the series 1 ஜனவரி 2012

உஷாதீபன்   படுக்கையில் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தான் ராகவன். அருகே மெயின் உறாலில் அப்பாவும் அம்மாவும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். தான் உறக்கமின்றி இருக்கிறோம் என்பது எவ்வகையிலும் அவர்களுக்குத் தெரிந்து விடக் கூடாது. குறிப்பாக அம்மாவுக்கு. அவள் தனது ஒவ்வொரு சிறு அசைவையும் கூட எடை போட்டு விடுவாள். தன் முகத்தை வைத்தே என்ன பிரச்னை? என்று கேட்டு விடுவாள். வந்து இரண்டு நாட்கள் ஆன இந்தப் பொழுதில் அவள் கேட்காமல் இருப்பதுதான் ஆச்சரியம். அப்படியானால் தன் […]