சொல்வனம் இதழ் எண் 215 வெளியீடு பற்றி

This entry is part 10 of 11 in the series 26 ஜனவரி 2020

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 215 ஆம் இதழ் இன்று  (26 ஜனவரி 2020) வெளியிடப்பட்டது. இதழை solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கவிதைகள்: கோடிட்ட இடங்களில் நிரம்புகிறோம் – விபீஷணன் விருந்தாளி: ஜாக் ப்ரீலட்ஸ்கி – இரா.இரமணன் கட்டுரைகள் கண்ணியமெனும் ஒழுக்கம்- அதன் தேவையும் நாயகத்தன்மையும் – செமிகோலன் எவ்வழி நல்லவர் ஆடவர் – பானுமதி ந. களியோடை – சிவா கிருஷ்ணமூர்த்தி வேகமாய் நின்றாய் காளி! பகுதி-1 – ரவி நடராஜன் விண்வெளி மனிதனும், மண்வெளி மனமும் – ரா ரா கதைகள்: ஒரு கொலை – வைரவன் லெ.ரா. பிரகாசமான எதிர்காலம் – அமர்நாத் பிற: குளக்கரை (குறிப்புகள்: கோரா) உலக நடப்புக் குறிப்புகள் வாசகர் கடிதம் தளத்தில் வந்திருந்து படித்தபின் கருத்துகள், மறுவினை ஏதும் இருந்தால் அந்தந்த விஷயங்களின் கீழே பதிப்பதற்கு வசதி […]

2022 ஆண்டு இந்தியர் மூவர் இயக்கும் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள் ரஷ்யாவில் பயிற்சி

This entry is part 8 of 11 in the series 26 ஜனவரி 2020

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 2022 ஆண்டில் மூன்று இந்தியர் இயக்கும் விண்கப்பல் பயணம்இந்திய விண்வெளித் தேடல் வாரியம் [Indian Space Research Organization (ISRO)]  2022 ஜனவரி மாதத்தில் ஏவப் போகும் மூவர் இயக்கும் முதல் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள்தேர்ந்தெடுக்கப் பட்டு ரஷ்யாவில் பயிற்சி பெற அனுப்பப் படுகிறார் என்று 2020 ஜனவரி 22 ஆம் தேதி, அதன் தலைவர் கே. சிவன் அறிவித்தார்.  அவர்கள் இந்திய விமானப் படையிலிருந்து எடுக்கப் […]

வாழ்வை தேடும் கண்துளிகள்

This entry is part 7 of 11 in the series 26 ஜனவரி 2020

ப.தனஞ்ஜெயன். உலகம் முழுவதும் நிரம்பியுள்ள உயிர் மூச்சின் கலவரத்தில்தனக்கான காற்றை நிரப்புகிறது நுரையீரல்வாழ்கை சமுத்திரத்தில் பாய்மரங்களாக மிதக்கின்றன மனித உயிர்கள்இறந்தகால சேமித்தலில் பிறக்கிறது நாட்கள்நாட்காட்டிகள் கிழித்துகொண்டும்கடிகார முட்கள் நாட்களின் இதயங்களில் அடித்து அழைக்கிறதுநுண்நொடிகளை. சமுத்திரம் அருகே கிடக்கும் கரும்பாறை ஒன்றில் வான்கோக் கொகைனும்பிக்காசோவும் வண்ணம்தீட்டிய அழகை ரசிக்க மறந்து மிதக்கிறது கண்கள். டாவின்சி மலை உச்சியின் குகையில்கடல் உயிரின் படிமங்களில் கடலை காண்பித்தான். நாம் காணும் கடலுக்கடியில் எத்தனை மலைகள்எதிர்கால மர்மங்கள்மனிதனாக முயற்சிக்கும் சமுத்திரத்தில் எண்ணங்கள் நட்சதிரங்களாய்இருமை […]

வன வசனங்கள் என்ற உபாசனாவின் ஆங்கில கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்

This entry is part 6 of 11 in the series 26 ஜனவரி 2020

தமிழில் – குமரி எஸ். நீலகண்டன் லீலாக் என்ற புனைப் பெயரில் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிவரும் உபாசனா சிறந்த ஓவியரும் கூட. தனது ஒவியங்களையும் கவிதைகளையும் இரண்டு சிறகுகளாய் கொண்டு இலக்கிய உலகில் பயணிப்பவர். கலை ஆசிரியரும் கூட. கவிஞரின் வாழ்த்துக்கள் என் கவிதைகளுக்கு எந்த விதிகளுமில்லை. எழுதுவதற்கு எந்த காரணங்களுமில்லை. ஒவ்வொரு வரியும் சமமானது. மென்மையானது. ஒவ்வொரு வார்த்தையும் ரகசியம் இழந்தது. என் கவிதைகள் செய்யுளாய் இருக்கும். திணறும். என் கவிதைகள் ஆடும். தடுமாறும் மீன்களும் […]

திருப்பூரில் ஒரு நாள் திரைப்பட விழா 24/1/2020

This entry is part 5 of 11 in the series 26 ஜனவரி 2020

             ” பொழுதுபோக்கு அம்சங்களை மீறி வாழ்க்கையின் அனுபவப் பிரதிபலிப்புகளை திரைப்படங்கள் கொண்டிருக்க வேண்டும். பொது மக்களை வழிநடத்தும் நெறி முறையில் வெகுஜன திரைப்படத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது..உலகம் திரைப்படம் சார்ந்த கலைஞர்களிடம் நிறைய எதிர்பார்க்கிறது. கல்வி, அரசியல், பெண்கள் முன்னேற்றம் போன்ற விசயங்களைத் திரைப்படங்கள் முன் நிறுத்தி வெளிவர வேண்டும். வங்காளமும், கேரளாவும் அந்த வகையின் முன்னோடிகளாக இருந்த காலம் மீறி தமிழகமும் இப்போது முன்நிற்பது ஆரோக்யமானதாகும். “ என்று […]

குழந்தைகளும் மீன்களும்

This entry is part 4 of 11 in the series 26 ஜனவரி 2020

கு. அழகர்சாமி (1) கண்ணாடித் தொட்டிக்குள் நீரில் கலர் கலராய் நீந்தும் மீன்கள் கண்டதும் கல கலவென்று குதித்துத் துள்ளும் நிலம் துள்ள– குட்டிக் குட்டி மீன்கள்- குழந்தைகள்! (2) தூண்டிலில் பிடிபட்ட மீன் துள்ளி விழும் தரையில். துடி துடிக்கும்; துவளும். மெல்ல அடங்கும். மெதுவாய்க் குழந்தை தொடும்- மூடிய விழிகள் திறந்து- தரை மீது கடைசியாய்த் துள்ளி மலங்க நோக்கும் குழந்தையின் விழிக் கடலில் கடைசியாய் நீந்தும் மீன்.

கள்ளா, வா, புலியைக்குத்து

This entry is part 3 of 11 in the series 26 ஜனவரி 2020

தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் முதல் முதலில் பதிப்பித்தது சீவகசிந்தாமணியாகும். பதிப்புத்துறை அவருக்குப் புதிய துறையாதலால் “ஆரம்பத்தில் எல்லா விஷயங்களும் தெளிவாக விளங்கவில்லை” என்று அவரே குறிப்பிடுகிறார்.       சில பாடல்களை ஆராயும்போது சில தொடர்களுக்குப் பொருள் புரியாமல் அவரே திகைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய நிலை ஏற்படுகையில் அத்தொடர் அவர் மனத்தில் பதிந்துவிடுகிறது.       சிந்தாமணிக் காப்பியத்தில் சீவகன் யாழிசைத்துப் போட்டியில் காந்தருவதத்தையை வென்றான். இதனால் கட்டியங்காரன் பொறாமை கொண்டு அங்கிருந்த மன்னர்களை நோக்கிச் சில சொற்களைக் […]

தமிழ்நாட்டில் சில நல்ல விஷயங்களும்

This entry is part [part not set] of 11 in the series 26 ஜனவரி 2020

தமிழ்நாட்டில் சில நல்ல விஷயங்களும் நடந்திருக்கின்றன. அதில் முக்கியமானது சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்திக் கொண்டிருந்த ப்ளாஸ்ட்டிக்கின் உபயோகத்தை தடைசெய்திருப்பது. நான் பார்த்தவரைக்கும் ஏறக்குறைய 80 சதவீதம் அது வெற்றியடைந்திருக்கிறது என்றே சொல்வேன். இன்னும் சில இடங்களில் தடைசெய்யப்பட்ட ப்ளாஸ்ட்டிக் பைகளை கொடுப்பதனைப் பார்த்தேன் என்றாலும் பொதுமக்கள் மத்தியில் ஓரளவு விழிப்புணர்வு வந்திருக்கிறது. அது அப்படியே தொடர்ந்தால் நல்லதுதான். இரண்டாவது முக்கிய விஷயம் ப்ளக்ஸ் போர்டுகளை ஒழித்திருப்பது. ப்ள்க்ஸ் போர்டுகள் போனவுடன் ஊரே திறந்து போட்டது மாதிரியானதொரு உணர்வு […]

பாகிஸ்தானில் விலைவாசி

This entry is part 1 of 11 in the series 26 ஜனவரி 2020

பாகிஸ்தானில் விலைவாசி கண்டபடி உயர்ந்து போயிருக்கிறது. ஒரு கிலோ கோதுமை மாவு ஏறக்குறைய நூற்றைம்பது ரூபாய்க்கு (பாகிஸ்தானிய ரூபாய்) விற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல கடந்த ஒருவாரத்தில் மட்டும் சர்க்கரையின் விலை ஏறக்குறைய பத்து மடங்கு உயர்ந்து ஏழைப் பாகிஸ்தானிகளை பாதித்திருக்கிறது. பதுக்கல்காரர்கள் கோதுமையையும், சர்க்கரையையும் பதுக்கி வைத்துக் கொண்டு தாறுமாறாக விலை வைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம் போல பிரதம மந்திரி இம்ரான்கான் அதனையெல்லாம் கண்டு கொள்ளாமல் காஷ்மீர் பிலாக்கனம் பாடிக் கொண்டிருக்கிறார். இம்மாதிரியான பொருளாதாரச் சூழ்நிலை […]