இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – அறிமுகம்

This entry is part 1 of 5 in the series 27 ஜனவரி 2019

இந்தியர்கள், பொதுவாகத் தொழில்நுட்பத் துறையில் முன்னேறியுள்ளதைப் பற்றிச் சொல்லிக் கொள்வதே சுவாரசியமான விஷயம்.  ஒவ்வொரு முறை இந்தியா வரும் பொழுதும் இப்படிப்பட்ட விஷயங்கள் காதில் விழுவதுண்டு. “இன்ஃபோஸிஸ் – ல வேலைக்குச் சேர்ந்து, அமெரிக்கா போய், கல்யாணமாகி அங்கேயே செட்டில் ஆகிட்டானாம். அதான் உங்க ஊர் பக்கத்தில் இருக்கும் ஃப்ரீமாண்ட் என்கிற ஊர்ல இருக்கறதாகக் கேள்வி” “அமெரிக்காவில கன்ஸாஸ் கிட்ட ஓர் ஊர்ல பெரிய வேலைல இருக்கான். டிசிஎஸ் அவனை அமெரிக்கா அனுப்பினாங்க. கூடிய சீக்கிரம் சுந்தர் […]

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – தானோட்டிக் கார்கள் பயன்பாடு – பகுதி 4

This entry is part 2 of 5 in the series 27 ஜனவரி 2019

தானோட்டிக் கார்கள் என்பது இதோ, இன்று, நாளை, என்று நம்மை தினமும் அச்சுறுத்தும், ஒரு செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு. நாமெல்லாம் உடனே அடுத்த வெள்ளிக்கிழமை நமது ஓட்டுனர் உரிமத்தைத் (driving license) துறந்து விடுவோமா? உணமையில், நாம் கவலைப் பட வேண்டியது சாலையில் நமது பாதுகாப்பா, அல்லது ஓட்டுதல் சம்மந்தப்பட்ட வேலைகளப் பற்றியதா? இந்தப் பகுதியில் இந்த முக்கிய வாழ்வாதார விஷயத்தை ஆராய்வோம்.    

2019 இல் அமெரிக்கா புதியாய் இணைக்கும் மின்சக்தி ஆற்றலில் காற்றாடிச் சுழலிகள் பெரும்பங்கு ஏற்கும்

This entry is part 3 of 5 in the series 27 ஜனவரி 2019

FEATURED Posted on January 26, 2019 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ 1. https://youtu.be/Sl_FyI6uLzU 2. https://youtu.be/_7MKZDxUhkA 3. https://youtu.be/O7b3Ev2Emyc 4. https://youtu.be/4OooDJ-MAe4 ++++++++++++++++ மீள்சுற்று எரிசக்தி மின்சாரம் வாழ்க்கைக்கு ஒளியூட்ட பேரளவில் ஊர்களுக்கு வருகிறது ! புது வளர்ச்சி  இது !  புவியிலிது  புரட்சி செய்யப் போகுது ! காற்றுச் சுழலிகள்  கோடிக் கணக்கில் மின்சக்தி கொடுக்கப் பொகுது !  காடு, வயல், மேடு, பள்ளம் நாடு, நகரம், ஓடும் ஆறு, எங்கெங்கு நோக்கினும் அங்கெல்லாம் காற்றுச் […]

வரவு உரைத்த பத்து

This entry is part 4 of 5 in the series 27 ஜனவரி 2019

வரவு உரைத்த பத்து பொருள் தேடச்சென்ற தலைவன் திரும்பி வருகின்றான். அவன் வரவைப் பற்றியே இப்பகுதியின் பத்துப் பாடல்களிலும் சொல்லப்படுவதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது ==================================================================================== வரவு உரைத்த பத்து—1 அத்தப் பலவின் வெயில்தின் சிறுகாய், அருஞ்சுரம் செல்வோர் அருந்தினர் கழியும் காடுபின் ஒழிய வந்தனர்; தீர்க,இனி பலிதழ் உண்கண் மடந்தை!நின் நல்எழில் அல்குல் வாடிய நிலையே [அத்தம்=பாலை நிலம்; சுரம்=வழி; எழில்=அழகு; அல்குல்=அடிவயிறு; அருந்தினர்=உண்டனர்] பணம் தேடப் போன அவன் ஊருக்குத்திரும்பி வரான்னு தோழி அவகிட்டச் […]

துணைவியின் இறுதிப் பயணம் – 10

This entry is part 5 of 5 in the series 27 ஜனவரி 2019

  சி. ஜெயபாரதன், கனடா   என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !   [Miss me, But let me go]   ++++++++++++++   [34] மனமுடைந்த நான்கு மாதர்   அன்னிய மாதர் அனைவரும், ஒட்டுமில்லை எனக்கு உறவுமில்லை ! மருத்துவ மனையில் மனமுடைந்து நான் அழும் போது ஒடிவந்து அணைத்துக் கொண்டு ஆறுதல் அளித்த அந்த மருத்துவ மாது ! “மனைவி பிழைக்க மாட்டாள் போவென,” என்னை […]