கலங்கரை

This entry is part 1 of 42 in the series 29 ஜனவரி 2012

வெயில் தணிந்து கடல் காற்று மேற்கு வாக்கில் லேசாக வீசத் தொடங்கிய மாலை அது.ஜகுபர் அலியின் கடையில் வியாபாரம் நன்றாக சூடு பிடித்திருந்தது.கடைக்கு நேரே மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பிள்ளையார் கோவிலின் மைக் செட் அலறலில் கடைக்கு வந்தவர்கள் கத்தி கத்தி சாமான்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.ஜகுபர் அலியும் அவரது தம்பி கனியும் பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.சரக்கு கொண்டுவந்த கலைமான் புகையிலைக் காரரும் குளிர்பான ஏஜெண்டும் கம்புக் கூட்டில் பையும் காதில் சொருகிய பேனாவுமாக காத்திருந்தனர். ரெண்டு கிலோ அரிசி,பாலிதீன் […]

ரோம சாம்ராஜ்ய வீழ்ச்சி

This entry is part 37 of 42 in the series 29 ஜனவரி 2012

” பிம்மாலையில பனி ஜாஸ்தி விழும். தலையில எதையாவது கட்டிக்கோடா கடங்காரா ” என்று பாட்டி அக்கறை கலந்து திட்டும் காலம் தையும் மாசியும். பாட்டி ” பிம்மாலை ” என்பதை இரவைக் குறிப்பிடும்போதும் சொல்வாள். சிற்றஞ்சிறுகாலையைக் குறித்தும் சொல்வாள். நாம்தான் அவள் வார்த்தையின் காலமயக்கப் பிடியிலிருந்து வெளிவந்து அதைத் தரம் பிரித்துப் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் இந்தக் காலத்தில் கட்டாயம் சளி பிடித்துவிடும் எனக்கு. காஷ்மீர் பூமி பனிக்கட்டிகளால் உறைந்திருந்திருப்பது போல என் நெஞ்சு முழுக்கப் பாறை […]