ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

க்ருஷ்ணகுமார் மாக்கன சித்திர கோபுர நீள்படை வீட்டிலி ருத்திய நாளவன் வேரற மார்க்க முடித்த விலாளிகள் நாயகன்  மருகோனே   பிரசித்தி பெற்ற, அழகிய கோபுரங்கள் நிறைந்த, நீண்ட சேனைகள் உள்ள இலங்கையில்  (அசோகவனத்தில்) (சீதாபிராட்டியை) சிறை வைத்தபோது,  அந்த ராவணனின் வம்சமே வேரோடு அற்றுப்போகும்படி, அதற்குரிய வழியை நிறைவேற்றிய வில்லாதி வீரர்களின் தலைவனாம் ராமபிரான்.   அந்த ராமபிரானின் மருமகன்,   ராமாயண காவ்யத்தை வால்மீகி முனிவர் உரைத்தபடி என் சென்னியிலிருத்த இறைஞ்சுகிறேன்.     […]

மிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidism

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

                                         தைராய்டு சுரப்பியை தமிழில் கேடயச் சுரப்பி என்று மொழிபெயர்த்துள்ளனர். நமது உடலிலுள்ள நாளமற்ற சுரப்பிகளில் இது மிகவும் முக்கியமானது. இது கழுத்தின் இரு பகுதிகளிலும் ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைந்தது. சாதாரணமாக பார்த்தால் இது தெரியாது. வீக்கமுற்றால் நன்கு தெரியும். இதிலிருந்துதான் தைராக்சின் ( Thyroxin ) என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் நமது செல்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் தன்மைமிக்கது. அதை Metabolism அல்லது வளர்சிதை மாற்றம் என்று கூறுகிறோம். ஆகவே உடலின் செல்கள் […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

    (Children of Adam) என் வாரிசுகளைப் பற்றி ..!    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா       என்னுடல் சுரப்பு நதிகள் சங்கமம் ஆகும் உன்னுடல் வழியாகத் தான் ! ஆயிரம் ஆண்டுப் பயணம் ​     ​ நோக்கி  உன்னுள்ளே சுற்றிக் கொண்டுள்ளேன். என் உன்னதக் கொடையாக, ஒட்டுக் கிளை போல் உன்மேல் பின்னிக் கொள்வேன் ! என் விந்துத் […]

முன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

  புத்தகத்தைத் திறந்த உடனேயே சில வார்த்தைகள் மறுபடியும் என்று சொன்னால் என்ன அர்த்தம்? இந்த மறுபடியும் என்ற வார்த்தை இப்போது இந்த புத்தகத்தைத் திறந்த உடனேயே என்ற சந்தர்ப்பத்தில் அல்ல. அப்படியும் எடுத்துக்கொள்ளலாம். அது இப்போது படிக்கத் தொடங்கியவர்களுக்கு. இதன் முதல் பக்கத்தின் முதல் கட்டுரையிலேயே நான் எழுதத்தொடங்கிய 1960-ல் சொன்ன சில கருத்துக்களைத் திரும்ப நினவு படுத்தித்தான் தொடங்குகிறேன் வேறு யாருக்கும், இந்தியாவில் உள்ள எந்த மொழி பேசும் மக்களுக்கும், நம் தமிழ் மக்களுக்கு […]

அதிகாரத்தின் துர்வாசனை.

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

லீனா மணிமேகலை ஜனவரி 3, 4 தேதிகளில் சென்னை பல்கலைகழகமும் பெண்கள் சந்திப்பும் இணைந்து நடத்திய பெண்ணிய உரையாடலின் அழைப்பிதழ் எனக்கு கிடைத்தது. அதன் கவிதைக்கான பொது நிகழ்வில் ஊடறு.காம் றஞ்சி தலைமையில், ஆழியாளின் கவிதைத்தொகுதியை மதுசூதனன் வெளியிட சுகிர்தராணி பெற்றுக்கொள்வதான நிகழ்வின் அறிவிப்பும் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் தான் அண்மையில், இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றி நான் எடுத்த White Van Stories குறித்த பொய்யான அறிக்கையை ஊடறு.காம் வெளியிட்டிருந்தது. அந்தப் பொய் அறிக்கையை […]

திண்ணையின் எழுத்துருக்கள்

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

அன்புடை திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, திண்ணையின் எழுத்துருக்கள் பழைய முறைக்கு மாறிவிட்டது வியப்பாக இருக்கிறது. ஏன் இந்த மாற்றம்? பிற்போக்காக இருக்கிற்தே! இந்த மாற்றம்  பற்றிய அறிவிப்பு எதனையும் நீங்கள் வெளியிட்டிருந்தால் நான் கவனிக்காமல் விட்டிருக்கலாம். சுட்டிக் காட்டுங்கள். இல்லையானால் இது பற்றிய விளக்கம் ஒன்று திண்ணையில் வெளியிடுவது நல்லது. ரெ.கா.

வசுந்தரா..

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

    சின்னக் கண்ணன்..   வசுந்தரா பெயரிடப்படாத குழந்தையாய்ப் பிறந்த போது, உயிருடன் இருக்கிறோம் என்பதற்காக ஒரே ஒரு முறை வீல் என்று அழுது விட்டு நிறுத்தி விட, குழந்தையை எடுத்துப் பார்த்த டாக்டர் பங்காரு அம்மாள் கன்ஃப்யூஸ் ஆனார். “என்னது இது..தொடர்ச்சியா அழணுமோல்லியோ..இது ஏன் இப்படிப் பண்ணுது” எனக் குழப்பமாய்க் கேட்க வாட்ச் பார்த்த நர்ஸ் ஓமனக் குட்டி (வயது 56) “ஒரு வேளை நல்ல நேரம் வரட்டும்னு வெய்ட் பண்ணுதோ என்னவோ…இப்ப 6.59.45. […]

கவிதை

This entry is part 2 of 29 in the series 5 ஜனவரி 2014

குப்பைகளைக் கிளறினால் துர்நாற்றம் எரித்தால் மின்சாரம்   காணும் காட்சியில் கண்கள் மேய்கிறது   ஆனால் மனம்? அறுத்துக்கொண்டு திரிகிறது   நேற்று நடந்த ஓர் அவமானத்தை ஓர் இழப்பை ஒரு துரோகத்தை கிளறிக் கிளறித் துடிக்கிறது   கிளறினால் துர்நாற்றம் எரித்தால் மின்சாரம்   எப்படி எரிப்பது?   இதோ மனோவியல் ஞானி ஜேகேயின் ஜெயிக்கும் வார்த்தைகள்   காணும் பொருளாக காண்பவன் மாறிவிட்டால் கிளறும் வேலையை மறக்கும் மனம் பின் ஜெயிப்பது நிஜம்   […]

திண்ணையின் இலக்கியத் தடம் -16

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

மார்ச் 2 2002 இதழ்: ஞானிக்கு மீண்டும்- மஞ்சுளா நவநீதன்- பெரியார் பிறப்பால் ஜாதி என்னும் அடிப்படையில் தான் தமது எதிர்ப்பை பிராமணருக்கு எதிராகச் செய்தார். இதற்கு மழுப்பலான பதிலையே ஞானி தந்துள்ளார். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20203022&edition_id=20020302&format=html ) மதக் கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது – ரிச்சர்ட் டாக்கின்ஸ்- தி இன்டிபென்டென்ட் பத்திரிக்கைக்கு ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய கடிதம்- மதக் கல்விக்கு அரசின் ஆதரவு கூடாது. மதத்தின் பெயரால் திறக்கப் படும் பள்ளிகளுக்கு அரசு அனுமதி தரக் கூடாது. […]